இந்தியாவின் வர்த்தகம் மற்றும் முதலீடுகள் கொரோனாவின் காரணமாக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன.
இந்தியாவின் மேலாதிக்க சேவைத் துறையில் செயல்பாடு, ஒரு மாதத்திற்கு முன்பே மே மாதத்தில் லேசான முன்னேற்றத்தைக் காட்டியது. ஆனால் அதனை முன்னேற்றத்திற்கான படியாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் சேவை குறித்தான குறியீடு 12.6 சதவீதத்திலிருந்து, 5.4 சதவீதமாக குறைந்தது. இதே உற்பத்தி குறித்தான குறியீடு 30.8 சதவீதமாக இருந்தது.

வர்த்தகம் முற்றிலும் முடங்கி போயுள்ள நிலையில், உற்பத்தி குறைந்துள்ளது. அதோடு தேவையும் வெகுவாக குறைந்துள்ளது. ஆக குறைந்த ஆர்டர்கள் காரணமாக விலையும் குறைந்துள்ளது. சேவைத் துறைக்கான உள்ளீடு மற்றும் வெளியீட்டு செலவுகள் இரண்டிலும் பணவாட்டப் போக்குகளை குறிக்கிறது.
அதே போல ஏற்றுமதியும் மே மாதத்தில் கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது 36.5 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 19.1 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. எனினும் தற்போது இது சற்று அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. எனினும் கூட எண்ணெய் அல்லாத ஏற்றுமதி முந்தைய ஆண்டு காலப்பகுதியில் இருந்து ஒப்பிடும்போது 30.1% சரிந்துள்ளது. அதே நேரத்தில் ரத்தினங்கள் மற்றும் நகைகள், ஆடைகள் ஏற்றுமதியும் கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது.
ஆக ஏற்றுமதி இறக்குமதியில் உள்ள இத்தகைய வீழ்ச்சியானது, உள்நாட்டு பொருளாதாரத்திலும் வீழ்ச்சி காணக்கூடும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். மே மாதத்தில் சில்லறை கடைகளில் 30 சதவீதம் விற்பனை சரிந்ததாக ஷாப்பர் ட்ராக் தரவு காட்டியிருந்தாலும், மத்திய வங்கி கணக்கெடுப்பு நுகர்வோர் நம்பிக்கை வரலாறு காணாத அளவு குறைந்ததையே காட்டுகிறது.
பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வாகன விற்பனை பொருளாதாரத்தில் தேவையின் முக்கிய அறிகுறியாகும். ஏப்ரல் மாதத்தில் பூஜ்ஜிய விற்பனையை பதிவு செய்த பின்னும் மந்தமாகவே இருந்து வருகின்றது. அதுவும் லாக்டவுனில் தளர்வுகள் இருந்தபோதிலும் அது சரிவிலேயே காணப்படுகிறது.
இதே வங்கிகளில் கடன் வளர்ச்சியும் முந்தைய ஆண்டோடு ஒப்பிடும்போது 5.5 சதவீதம் குறைந்துள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் 6.8 சதவீதமாக குறைந்துள்ளது. இதே கடந்த ஆண்டு வளர்ச்சி 13.5 சதவீதமாக இருந்தது.
இதே நிலுவையில் உள்ள கடன் தொகையானது மே மாதத்தில் 102.2 டிரில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதத்தில் 102.7 டிரில்லியன் ரூபாயாக சரிவடைந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் மத்திய வங்கி நிதி நிலைமைகளுக்கு ஏற்றவாறு பணத்தை செலுத்துவதால் போதிய பணப்புழக்கம் உள்ளதாகவும் இந்த அறிக்கை கூறுகின்றது.
இதே உற்பத்தி குறித்தான குறியீடுகளும் ஏப்ரல் மாதத்தில் சரிந்தது. கொரோனா காரணமாக லாக்டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் பெரும்பாலான நிறுவனங்கள் எதுவும் உற்பத்தி செய்யவில்லை என்றும் கூறியுள்ளன.
இதே இந்தியாவின் உள்கட்டமைப்பு தொழில்களின் குறியீடு ஓரு வருடத்திற்கு முன்பு இருந்ததைவிட ஏப்ரல் மாதத்தில் 38.1 சதவீதமாக குறைந்துள்ளது. தொழில்துறை உற்பத்தி குறியீட்டில் 40 சதவீதம் குறைந்துள்ளது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications