இந்திய நிறுவனங்கள் கொரோனா பாதிப்பால் பெரிய அளவிலான வர்த்தக சவால்களையும், வருமான சரிவையும் எதிர்கொண்ட நிலையில் இந்த வருடம் நிறுவனத் தலைவர்களுக்கு எவ்விதமான சம்பள உயர்வும் கிடைக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஊழியர்களுக்குச் சம்பள குறைப்பு, வருடாந்திர சம்பள உயர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது நிறுவனத் தலைவர்களுக்குச் சம்பள உயர்வு ரத்து செய்யப்பட உள்ளது.
லாக்டவுன் பாதிப்பு
கொரோனா தொற்றுக் காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுன் மூலம் இந்திய நிறுவனங்கள் 100 சதவீதம் முழுமையாக இயங்க முடியாத நிலையில் வர்த்தகம் மற்றும் வருமானத்தில் பெரிய அளவிலான சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் நிர்வாகம் நிறுவனத் தலைவர்கள் அதாவது சிஇஓ-க்களுக்குச் சம்பள உயர்வைக் கொடுக்க வேண்டும் என முடிவு செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சீஇஓ-வின் சம்பளம்
பொதுவாக ஒரு சீஇஓ-வின் சம்பளம் 3 முக்கியப் பகுதிகளாகக் கொடுக்கப்படும் - நிலையான சம்பளம், குறுகிய காலம் மற்றும் நீண்ட காலச் செயல்திறன் அடிப்படையில் ESOP, 3வது மிகவும் முக்கியமான நிறுவனத்தின் நிதிநிலை செயல்திறன் பொருத்து சம்பள உயர்வு வழங்கப்படும்.
நிறுவனத்தின் நிதிநிலை
இந்த மூன்று பிரிவுகளில் பெரும் பகுதி நிறுவனத்தின் நிதிநிலை வைத்தே ஒரு வருடத்தில் சிஇஓ-வின் சம்பளம் கொடுக்கப்படுகிறது. இந்த வகையில் 2020ல் இந்திய நிறுவனங்கள் செப்டம்பர் காலாண்டில் அதிகளவிலான லாபத்தை அடைந்திருந்தாலும், முதல் 2 காலாண்டில் மிகவும் மோசமான நிதிநிலையை
எதிர்கொண்டது அனைவருக்கும் தெரியும்.
சம்பள உயர்வு கிடையாது
இதன் வாயிலாக இந்த ஆண்டு நிறுவனத்தின் நிதிநிலையைப் பொருத்து சிஇஓ-க்களின் சம்பள உயர்வைக் கணக்கிடும் போது சம்பள உயர்வும் இருக்காது மேலும் அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வும் கொடுக்கப்படாது.
சம்பள குறைப்பு
இந்தியாவில் ஏற்கனவே பல நிறுவனங்களின் தலைவர்கள் தானாகவே முன்வந்து கொரோனா
தாக்கத்தின் காரணமாகச் சம்பள குறைப்பை அறிவித்துள்ள நிலையில் எஞ்சியுள்ள நிறுவனத்தின் தலைவர்களுக்கு நிறுவனத்தின் நிதிநிலை வைத்து கணக்கிடும் போது இந்த வருடம் சம்பள உயர்வு கிடைக்காது. ஆனால் வேரியபில் பே அளவீட்டில் மட்டுமே கணிசமான உயர்வு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தலைவர்களுக்கு மட்டும் சம்பள உயர்வு
மேலும் வர்த்தகச் சந்தையும் நிறுவனங்களின் நிலையும் மோசமாக இருக்கும் இந்த வேளையில் நிறுவனத் தலைவர்களுக்குச் சம்பள உயர்வைக் கொடுப்பது சரியானது அல்ல என்பதே இந்தியா நிறுவனங்களின் நிர்வாகக் குழுவின் கருத்து.
ஊழியர்களின் நிலை
இந்தியாவில் பல நிறுவனங்களில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு, ஊழியர்களுக்குச் சம்பளம் குறைக்கப்பட்டு, ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு ரத்து செய்யப்பட்டுப் பல கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றனர், இந்த நிலையில் உயர் அதிகாரிகளுக்குச் சம்பள உயர்வு கொடுக்கப்படுவது முற்றிலும் தவறு என முன்னணி வேலைவாய்ப்பு நிறுவனங்களின் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
More From GoodReturns

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications