2025ஆம் ஆண்டு ஐடி தொடங்கி பல்வேறு துறைகளிலும் ஏஐ தொழில்நுட்பம் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்த தொடங்கிவிட்டது. ஏஐ தொழில்நுட்பத்துக்கு ஏற்ப தகவமைத்து கொண்டவர்களும் திறன்களை மேம்பாடு செய்தவர்களும் வேலையை தக்க வைத்து கொண்டார்கள், மற்றவர்கள் வேலை இழந்தார்கள்.
அமேசான், டிசிஎஸ் , மெட்டா, கூகுள் என பெரிய நிறுவனங்களில் தொடங்கி சிறு நிறுவனங்கள் வரை ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தன. இந்த சூழலில் 2026ஆம் ஆண்டில் பணிச்சூழல் என்ன மாற்றம் காணும் என்பதை நம்மால் கணிக்க முடியவில்லை. நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும் என்பது மட்டும் உறுதி.

இந்நிலையில் 2026 ஆம் ஆண்டில் சம்பள உயர்வு எவ்வளவு சதவீதம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கோடிக்கணக்கான ஊழியர்கள் மத்தியில் இருக்கிறது. Mercer's Total Remuneration Survey என்ற பெயரில் 1500 நிறுவனங்களிடம் சர்வே நடத்தப்பட்டது. அந்த சர்வேயில் 2026 ஆம் ஆண்டில் சராசரியாக நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வை வழங்கப் போகின்றன என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
இதன்படி உற்பத்தி மற்றும் பொறியியல் துறை சார்ந்த நிறுவனங்களும் , வாகன உற்பத்தி நிறுவனங்களும் சராசரியாக 9.5% சம்பள உயர்வை தரும் என தெரிவித்திருக்கின்றனர். இந்தியாவில் இந்த பிரிவில் தான் அதிக சம்பள உயர்வு கிடைக்குமாம். அடுத்ததாக பன்னாட்டு நிறுவனங்களின் திறன் கிளைகளான gcc மையங்கள் சராசரியாக 9 சதவீத சம்பள உயர்வை தரும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
நிறுவனங்கள் எச்சரிக்கையான பொருளாதார சூழலை மிக கவனமாக கையாள முடிவு செய்துள்ளனர் என கூறுகிறார் மெர்கர் நிறுவனத்தின் தலைவரான மாலதி. செலவு கட்டுப்பாடு மற்றும் செயல்திறனுக்கு முன்னுரிமை ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை நிலைநாட்டும் வகையில் இந்திய நிறுவனங்கள் 2026 ஆம் ஆண்டில் சம்பள உயர்வை முடிவு செய்யும் என கூறுகிறார் .
உயர்திறன் கொண்டவர்களை ஈர்க்கவும் தக்க வைக்கவும் குறுகிய கால ஊக்க தொகைகளில் நிறுவனங்கள் கவனம் செலுத்தும் என்றும் , வெகுமதி தொகுப்புகளை தொடர்ந்து செம்மைப்படுத்தி வருகின்றன என்றும் அவர் கூறுகிறார் . மேலும் 2024 ஆம் ஆண்டில் நிறுவனங்கள் புதிதாக ஊழியர்களை சேர்ப்பதாக கூறியிருந்தது 43 சதவீதமாக இருந்து 2026 ஆம் ஆண்டுக்கு அது 32 சதவீதமாக குறைந்த இருப்பதாக கூறுகிறார்.
மேலும் ஊழியர்கள் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என 31 சதவீதம் நிறுவனங்கள் தெரிவித்து இருக்கின்றன. எனவே 2026 ஆம் ஆண்டில் நிறுவனங்கள் புதிதாக வேலைக்கு ஆட்களை தேர்ந்தெடுப்பது மந்தமாகவே இருக்கும் என ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 2026இல் சராசரியாக அனைத்து துறைகளுமே 9 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்கும் எதிர்பார்க்கலாம் என இந்த நிறுவனம் குறிப்பிடுகிறது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications