டெல்லி: மத்திய அரசுக்கு சொந்தமான கோல் இந்தியா நிறுவனம் அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து அர்ஜென்டினாவில் லித்தியம் எடுப்பதற்கான ஆய்வு பணிகளில் ஈடுபட்டுள்ளது.
அமெரிக்கா தலைமையிலான மினரல்ஸ் செக்யூரிட்டி பார்ட்னர்ஷிப்பில் கடந்த ஆண்டு இந்தியாவும் ஒரு உறுப்பினராக இணைந்தது. இந்த கூட்டாண்மையின் கீழ் இந்தியா, அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து லித்தியம் எடுப்பதற்கான ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளது.

லித்தியம் என்பது பேட்டரியில் பயன்படுத்தக்கூடிய ஒரு முக்கியமான பொருளாகும். தற்போதைய சூழலில் இந்தியாவிற்கு தேவையான லித்தியம் பெரும்பாலும் சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
எனவே இதற்காக சீனாவை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா லித்தியம் ஆய்வுப்பணிகளை தொடங்கியுள்ளது. தென் அமெரிக்கா நாடான அர்ஜென்டினாவில் தற்போதைக்கு முதல் கட்டமாக ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
சீனாவை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும் என்பதற்காக இந்தியா ஏற்கனவே அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் லித்தியம் ஆய்வுகளை நடத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன்படி அர்ஜென்டினாவின் கச்சி என்ற இடத்தில் லித்தியம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்கே ஆய்வுகளை நடத்த கோல் இந்தியா முன் வந்துள்ளது . முதல் கட்ட ஆய்வுகள் அங்கு நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிப்ரவரி மாதம் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அர்ஜென்டினாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது அங்கே கிடைக்கக்கூடிய முக்கியமான லித்தியம் உள்ளிட்ட கனிமங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா முதலீடு செய்வதில் ஆர்வமாக உள்ளது என தெரிவித்திருந்தார்.
கடந்தாண்டு அமெரிக்கா தலைமையிலான மினரல்ஸ் பார்ட்னர்ஷிப் என்ற அமைப்பில் ஒரு உறுப்பினராக இந்தியா சேர்ந்தது. இதன் மூலம் இந்தியா 20 முதல் 25 மினரல் திட்டங்களில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படும்.
அரிய கனிமங்கள் இருக்கும் நான்கு இடங்களை இந்தியா கண்டறிந்துள்ளது.இதில் இரண்டு இடங்களில் அமெரிக்காவுடன் இணைந்து ஆய்வினை தொடங்கியுள்ளது. ஒன்று அர்ஜென்டினா, மற்றொன்று மலாவி நாட்டில் உள்ள கங்கன்குண்டே பகுதி.
இங்கே லித்தியம் எடுப்பதற்கான ஆய்வு பணிகளை ஐஆர்இஎல் லிமிடெட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதேபோல ஆஸ்திரேலியாவின் டெப்போ பிராந்தியத்திலும் இதுபோன்ற கனிமங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனிடையே இந்தியாவும் அமெரிக்காவும் சிறப்பு கனிமங்கள் வர்த்தக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கனிம வர்த்தகத்தில் வரி விதிப்பு முறைக்கு விலக்கு அளிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் இருக்கும் என தெரிகிறது.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?



Click it and Unblock the Notifications