டெல்லி: சர்வதேச அளவில் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படக்கூடிய சோலார் பேனல்கள் ஏற்றுமதியில் இந்தியா முன்னணி நாடாக உருவெடுத்துள்ளது. சர்வதேச அளவில் அதிக அளவில் சோலார் பேனல்களை ஏற்றுமதி செய்யும் ஆறாவது பெரிய நாடு இந்தியா என்ற பெருமை தற்போது கிடைத்திருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டில் இந்தியாவில் சோலார் போட்டோவோல்டாய்க் ( solar photovoltaic) எனப்படும் சோலார் பிவி ஏற்றுமதி 0.4 சதவீதமாக இருந்து 2023 ஆம் ஆண்டில் 2.51 சதவீதம் என உயர்ந்துள்ளது. 2013 ஆம் ஆண்டில் 200.8 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான சோலார் பிவிக்களை ஏற்றுமதி செய்து வந்த இந்தியா 10 ஆண்டுகளில் அதனை 1.83 பில்லியன் டாலர்கள் மதிப்புக்கு உயர்த்தி உள்ளது.

2025 ஆம் நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் இந்தியா 711.95 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான பிவி செல்களை ஒருங்கிணைத்து பேனல்களாக மாற்றி ஏற்றுமதி செய்துள்ளது.
இந்தியாவிலிருந்து இவ்வாறு ஏற்றுமதி செய்யப்படக்கூடிய சோலார் பேனல்களில் 96 சதவீதம் அமெரிக்காவிற்கு சென்றது தெரியவந்துள்ளது. அதேபோல பேனல்களாக மாற்றப்படாத பிவி செல்களை மட்டும் கூட இந்தியா ஏற்றுமதி செய்கிறது. அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் 25 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான பிவி செல்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதில் 90% அமெரிக்காவிற்கு சென்றுள்ளது.
தமிழ்நாட்டில் இருக்கும் சோலார் PV உற்பத்தியாளர்கள்
1. விக்ரம் சோலார் - சென்னை
2. #டாடா பவர் சோலார் - திருநெல்வேலி
3. AXITEC - திருவள்ளூர்
சர்வதேச அளவில் சோலார் மின் உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில் அதற்கான உபகரணங்கள் தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவும் சோலார் பேனல்கள் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் பல மடங்கு வளர்ச்சி அடைந்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்தியா நடப்பாண்டில் 7 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சோலார் மின் உற்பத்திக்கு தேவையான உபகரணங்களை இறக்குமதி செய்துள்ளது இதில் 62% சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
தற்போது பல்வேறு நாடுகளும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன. இதில் முக்கியமாக சூரிய ஒளி சக்தியின் மூலம் மின் உற்பத்தி செய்வதற்காக சோலார் பேனல்களை அமைக்கும் நடவடிக்கைகளை உலக நாடுகள் தீவிர படுத்தியுள்ளன.
எனவே சோலார் பேனல்கள் மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்திக்கு தேவையான உபகரணங்களுக்கான தேவை வரும் காலங்களில் அதிகரிக்கும் என்பதால் இந்த துறையில் இந்தியாவின் ஏற்றுமதி இன்னும் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?



Click it and Unblock the Notifications