யாரை நம்பியும் நாங்க இல்லை.. மாஸ் காட்டும் இந்தியா..!

இந்தியா பல துறையில் வளர்ச்சி அடைந்துள்ளது நாம் அறிந்த ஒன்றாக இருந்தாலும், துறை வாரியாக வெளிநாடுகளையும், வெளிநாட்டு தயாரிப்புகளையும் நம்பியில்லாமல் சொந்த முயற்சியில் அனைத்து தேவைகளையும் பூர்த்திச் செய்யும் அளவிற்கு இந்தியாவில் பல துறைகள் வளர்ச்சி அடைந்துள்ளது.

இதை ஆங்கிலத்தில் self-reliance எனக் கூறப்படும், மத்திய அரசு இதை அடிப்படையாக வைத்து தான் ஆத்மநிர்பர் இலக்கை நிர்ணயம் செய்து இதற்கான திட்டத்தையும், சலுகையும் அறிவித்து வருகிறது.

இந்த நிலையில் எந்தெந்த துறையில் எல்லாம் இந்தியா யாரையும் நம்பியில்லாமல் சுயமாக உள்ளது தெரியுமா..?

இந்தியா

இந்தியா

இந்தியா டெக்ஸ்டைல் மற்றும் ஆடைகள், உணவுப் பொருட்கள், இரும்பு மற்றும் ஸ்டீல், போக்குவரத்து ஆகியவற்றில் இந்தியா ஆத்மநிர்பர் என்ற நிலையை அடைந்துள்ளது என்றும், இயந்திரங்கள், மின்னணுவியல் மற்றும் பிளாஸ்டிக் துறைகளில் தொடர்ந்து பின்தங்கியுள்ளது என்று இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) மற்றும் பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் (PwC) இணைந்து தயாரித்த அறிக்கை கூறுகிறது.

self-reliance அளவீடு

self-reliance அளவீடு

இந்தியாவின் self-reliance அளவீட்டை கணக்கிடும் நடவடிக்கையாக, தொழில்துறை அமைப்பான CII மற்றும் கணக்கியல் நிறுவனமான PwC ஆகியவை இணைந்து 'AatmaNirbhar Index' உருவாக்கியுள்ளன. இது நாட்டின் மொத்த ஏற்றுமதி மற்றும் அதன் இறக்குமதியின் விகிதங்களை வைத்து நாட்டின் self-reliance அளவீட்டை கணக்கிடப்படுகிறது.

 AatmaNirbhar அளவு

AatmaNirbhar அளவு

2022 ஆம் நிதியாண்டுக்கான AatmaNirbhar Index 0.69 ஆக உள்ளது. இந்தக் குறியீடு இந்தியாவை ஜவுளி, அலுமினியம், மின்னணுவியல், உணவுப் பொருட்கள் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட 20 துறைகளாகப் பட்டியலிட்டு தனது ஏற்றுமதி, இறக்குமதி, உற்பத்தி அளவீடுகளை வைத்துக் கணக்கிடுகிறது.

1 மதிப்பீடு

1 மதிப்பீடு

AatmaNirbhar Index அளவு எப்போது 1 என்ற நிலையைத் தாண்டுகிறதோ, ஒட்டுமொத்த இந்தியாவும் self-reliance நிலையை அடைந்ததாகப் பொருள். அதாவது இந்திய வெளிநாட்டு இறக்குமதியை நம்பியில்லாமல் சொந்தமாக உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து மக்களின் தேவைகள் முழுமையாகத் தீர்க்கிறது என்பது பொருள்.

உபரி உற்பத்தி டூ ஏற்றுமதி

உபரி உற்பத்தி டூ ஏற்றுமதி

இந்த நிலையை அடைந்து விட்டால் சீனா-வை போல் உபரி உற்பத்தி கொண்ட ஏற்றுமதி நாடாக மாறுவது மிகவும் எளிது, இதை நோக்கி தான் மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் PLI திட்டங்கள் அனைத்தும் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் குறிவைத்தே நகர்த்தப்படுகிறது.

ஏற்றுமதி - இறக்குமதி

ஏற்றுமதி - இறக்குமதி

2021-22 ஆம் நிதியாண்டில் நாட்டின் AatmaNirbhar Index அளவு 0.69 குறியீட்டு மதிப்புடன் இருக்கும் நிலையில் இந்தியா 422 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதி, 613 பில்லியன் டாலர் மதிப்பிலான இறக்குமதி பதிவு செய்துள்ளது என்று CII மற்றும் PwC இணைந்து தயாரித்த AatmaNirbhar Index அளவீடு அறிக்கை கூறுகிறது.

 8 துறைகள்

8 துறைகள்

இந்த AatmaNirbhar Index அளவீட்டில் இருக்கும் 20 துறைகளில் 8 துறைகளின் அளவீட்டு 1 -க்கு மேல் உள்ளது, மீதமுள்ள 12 துறைகள் 1 -க்குக் கீழ் உள்ளது. இதன் மூலம் 8 துறைகள் AatmaNirbhar நிலையை அடைந்துள்ளது. இந்த 12 துறைகளில் எலக்ட்ரானிக்ஸ், வைரங்கள், இயந்திரங்கள், கனிமங்கள், மர பொருட்கள், பிளாஸ்டிக் துறைகள் மற்றும் காய்கறி பொருட்கள் ஆகியவை 1-க்குக் கீழ் மதிப்பீட்டை கொண்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+