ரெசசன் காலத்திலும் இந்தியா தான் பெஸ்ட்.. இன்போசிஸ் கிரிஸ் கோபாலகிருஷ்ணன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா ரெசசன் காலகட்டத்திலும் பணிபுரிய ஒரு சிறந்த இடம் என இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுக்க ரெசசன் பிடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், சர்வதேச நிறுவனங்கள் பலவும் பணி நீக்க நடவடிக்கையினை எடுத்து வருகின்றன.

உலகின் டெக் ஜாம்பவான்கள் கூட மிகப்பெரிய அளவிலான பணி நீக்க நடவடிக்கையினை எடுத்து வருகின்றன. இது இன்னும் சிறிது காலத்திற்கு நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஆர்பிஐ எவ்வளவு டிஜிட்டல் ரூபாய் உருவாக்கியது தெரியுமா..? ஆர்பிஐ எவ்வளவு டிஜிட்டல் ரூபாய் உருவாக்கியது தெரியுமா..?

ஐடி துறை வளர்ச்சி

ஐடி துறை வளர்ச்சி

இது குறித்து இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன், உலகம் முழுக்க ரெசசன் அச்சம் நிலவி வருகின்றது. எனினும் ஐடி துறை முழுவதும் இரு இலக்கில் வளர்ச்சி அடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் 12% வளர்ச்சி காணலாம் என தெரிவித்துள்ளார்.

2 - 3 லட்சம் பேருக்கு வேலை

2 - 3 லட்சம் பேருக்கு வேலை

இந்த ஆண்டு மட்டும் 2 -3 லட்சம் பேருக்கு வாய்ப்பளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் நடப்பு ஆண்டில் 6.3% ஆக இருக்கலாம் என ரிசர்வ் வங்கி நம்புகிறது. இது மற்ற நாடுகளை காட்டிலும் அதிகம் என கிரிஸ் கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பணி நீக்கம்

பணி நீக்கம்

ட்விட்டர், மெட்டா உள்ளிட்ட டெக் ஜாம்பவான்களின் பணி நீக்கம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, எல்லா நிறுவனங்களிலும் ஏற்றத் தாழ்வு என்பது வரும். அப்படி டெக் துறையில் நடந்து வரும் வீழ்ச்சியால், இந்தியர்கள் பலரும் தங்களது வேலையினை இழந்து வருகின்றனர். எனினும் பணி நீக்கம் என்பது குறைவாகத் தான் உள்ளது.

கவலை வேண்டாம்

கவலை வேண்டாம்

நிறுவனங்கள் சரினைக் காணும்போது ஊழியர்களின் எண்ணிக்கையும் குறைக்கின்றன. முதலீட்டாளர்கள் இதனை புரிந்து கொண்டிருக்கலாம். எனினும் டெக் ஊழியர்கள் கவலைப் பட வேண்டாம். அது இந்தியாவோ அல்லது வேறு பகுதியாக இருந்தாலும் சரி. பொருளாதார வளர்ச்சியில் ஏற்ற தாழ்வுகள் என்பது இருப்பது தான் என கூறியுள்ளார்.

மோசமான தாக்கம் இல்லை

மோசமான தாக்கம் இல்லை

எனினும் சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடும்போது அந்தளவுக்கு மோசமான தாக்கம் என்பது இல்லை. மாறாக வளர்ச்சி சற்றே குறைந்துள்ளது. சர்வதேச நாடுகள் மிக மோசமான தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளன. இதற்கிடையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பலவும் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India is the best place to work at during recession: infosys co founder Kris Gopalakrishnan

Companies cut staff when they see fall down. But don't worry deck staff. Be it India or any other part, it will recover soon, says Kris Gopalakrishnan.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X