பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இறக்குமதி செலவுகளை குறைக்கவும், அதேவேளையில் நாட்டை ஏற்றுமதி உபரி நாடாக மாற்ற வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் இயங்கி வருகிறது. இந்த பாதையில் முக்கிய துறையாக விளங்குவது பாதுகாப்பு துறை, வெளிநாட்டு நிறுவனங்கள் உடனான கூட்டணியில் உள்நாட்டில் அனைத்து விதமான ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை தயாரிக்கும் முயற்சியில் தீவரமாக உள்ளது.
இதன் ஒருபகுதியாக மத்திய பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங், இஸ்ரேலின் பாதுகாப்பு துறை சார்ந்த முக்கிய நிறுவனங்களை இன்று நேரில் சென்று பார்வையிட்டது மட்டும் அல்லாமல் இந்தியாவில் கூட்டணி அடிப்படையில் தயாரிப்பு, உற்பத்தி தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது.

இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (IAI), ராஃபேல் அட்வான்ஸ்ட் டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ், எல்பிட் சிஸ்டம்ஸ் போன்ற நிறுவனங்களுடன் இந்த சந்திப்பு நடந்தது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி இலக்குகளுடன் இஸ்ரேல் தொழில்நுட்பத்தை இணைக்கும் வகையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின், ராஜேஷ் குமார் சிங் தலைமையிலான இந்திய குழு, இஸ்ரேல் நிறுவனங்களுடன் கூட்டு உற்பத்தி மற்றும் கூட்டு வளர்ச்சி வாய்ப்புகளை ஆய்வு செய்ய இந்த பயணம் மேற்கொண்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பு பேச்சுவார்த்தை வெற்றி அடையும் பட்சத்தில் இஸ்ரேல் பாதுகாப்பு துறையின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் ராணுவ தளவாடங்கள் தயாரிக்கப்படும்.
இந்திய அரசு, நாட்டின் பாதுகாப்பு துறையின் உள்நாட்டு உற்பத்தியை 25 சதவீதம் உயர்த்த இலக்கு வைத்துள்ளது. இந்த சந்திப்பு இந்த இலக்கை அடைய உதவும். இதேபோல் இந்த சந்திப்பு, இந்தியா-இஸ்ரேல் பாதுகாப்பு கூட்டணி உறவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என நம்பிக்கை நிலவுகிறகு. இதேபோல் ராஜேஷ் குமார் சிங், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸுடன் டெல் அவிவில் 2 நாட்களுக்கு முன்பு சந்தித்தார்.

இந்த சந்திப்பு இந்திய பாதுகாப்பு துறைக்கு பலன் அளிக்கும் என எதிர்ப்பார்ப்பு இருந்தாலும் இந்தியாவின் முன்னணி பாதுகாப்பு துறை பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் குறைந்துள்ளன.
இன்றைய வர்த்தகத்தில் Bharat Dynamics 3.25 சதவீதம் குறைந்து 1,434 ரூபாய்க்கும், Bharat Electronics 1.67 சதவீதம் குறைந்து 408.15 ரூபாய்க்கும், Bharat Forge 0.38 சதவீதம் குறைந்து 1,319.20 ரூபாய்க்கும், Cochin Shipyard 3.92 சதவீதம் குறைந்து 1,699.90 ரூபாய்க்கும், Data Patterns 3.17 சதவீதம் குறைந்து 2,615.15 ரூபாய்க்கும் , DCX Systems 4.78 சதவீதம் குறைந்து 211.25 ரூபாய்க்கும், Paras Defence 3.42 சதவீதம் குறைந்து 669.85 ரூபாய்க்கும் முடிந்துள்ளது.


Click it and Unblock the Notifications