இந்தியா மீண்டும் டாலரை ஓரம்கட்டும் வேலையை துவங்கியுள்ளது, டாலரை சார்ந்து அதிகம் வர்த்தகம் செய்யும் காரணத்தால் டாலர் மதிப்பு உயரும் போது ரூபாய் மதிப்பு பெரிய அளவில் குறைந்துள்ளது.
இது இந்திய முதலீட்டு சந்தைக்கும், வர்த்தக சந்தைக்கும் பெரும் பிரச்சனையாக மாறி வரும் வேளையில் மத்திய அரசு முக்கிய வர்த்தக நாடுகள் உடன் உள்நாட்டு நாணய பரிமாற்றத்தை மேற்கொள்ளும் திட்டத்தை முன்வைத்து வருகிறது.
சமீபத்தில் டிரம்ப் டீடாலரைசேஷன் திட்டத்தை கையில் எடுக்கும் நாடுகளுக்கு வார்னிங் கொடுத்தது மட்டும் அல்லாமல் வரியும் விதித்தார்.

இந்த நிலையில் இந்தியா ஜப்பான் உடன் உள்நாட்டு நாணய பரிமாற்ற திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஜூலை 1-3 தேதி இந்தியாவில் நடைபெறும் இந்தியா - ஜப்பான் வருடாந்திர கூட்டம் நடக்க உள்ள நிலையில் இக்கூட்டத்திற்கு ஜப்பான் நாட்டின் பிரதமரான Sanae Takaichi தான் பதிவியேற்றிய பின்பு முதல் முறையாக வருகிறார்.
டெல்லியில் நடக்கும் இக்கூட்டத்தில் Sanae Takaichi உடன் பிரதமர் மோடியும் கலந்துக்கொண்டு இருவரும் சந்தித்து பேச உள்ளனர். இந்த சந்திப்பில் இரு நாடுகள் மத்தியில் உள்நாட்டு நாணயம் அதாவது ரூபாய் - யென் நாணய அடிப்படையிலான வர்த்தகத்தை மேற்கொள்ளும் திட்டத்திற்கு கட்டமைப்பை சமர்ப்பிக்க உள்ளதாக தெரிகிறது.
இதன் மூலம் இந்தியா - ஜப்பான் மத்தியிலான வர்த்தகத்தில் டாலர் பயன்படுத்தாமல் உள்நாட்டு நாணயத்தை பயன்படுத்த முடியும். இதற்கான கூட்டு அறிக்கையை Sanae Takaichi மற்றும் நரேந்திர மோடி டெல்லி சந்திப்பின் இறுதியில் வெளியிடுவார்கள் என நிக்கி ஏசியா தெரிவித்துள்ளது. முதல் முறையாக இரு நாடுகள் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக நாணய கூட்டணி குறித்த திட்டம் சேர்க்கப்பட்டு உள்ளது.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் இந்தியாவில் இருக்கும் ஜப்பான் மக்கள் இந்திய வங்கிகளில் கணக்கு திறந்து இரு நாடுகள் மத்தியில் நிதியை எளிதாக டாலருக்கு மாற்றாமல் பரிமாறிக்கொள்ள முடியும். இதோடு நிறுவனங்களும் வங்கிகள் வாயிலாக பேமெண்ட்களை உள்ளூர் நாணயத்தில் செய்துக்கொள்ள முடியும்.
இந்திய ரிசர்வ் வங்கியிடம் ஜப்பான் நிதியமைச்சகம் 2026ஆம் நிதியாண்டிலேயே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய ஆர்வமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜப்பான் இதேபோன்ற ஒரு ஒப்பந்தத்தை 2019ல் இந்தோனேசியா உடன் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2025ஆம் ஆண்டில் மட்டும் இரு நாடுகள் மத்தியில் சுமார் 7.7 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகம் செய்யப்பட்டு உள்ளது, இந்த 7.7 பில்லியன் டாலர் வர்த்தகத்தை உள்நாட்டு நாணயத்தில் செய்தால் பெரிய அளவிலான நன்மை இரு நாடுகளுக்கும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications