இந்தியாவில் வேலை தேடுபவர்களுக்கும், புதிதாக வேலையில் சேர தயாராக இருப்போருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் ஆண்டாக 2026 அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கார்ப்ரேட் துறையில் 2025 ஆம் ஆண்டில் 80 லட்சம் முதல் 1 கோடி வரையிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்ட நிலையில், 2026 இல் 1 கோடி முதல் 1.2 கோடி வரை புதிய வேலைவாய்ப்புகள் வரும் என்று வேலைவாய்ப்பு நிறுவனமான டீம்லீஸ் தனது சொந்த ஆய்வின் மூலம் கணித்துள்ளது.
டீம்லீஸ் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களின் மனிதவளத் துறை நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்ததில் இந்த வருடம் புதிய ஆட்களை அதிகளவில் தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக கூறுகிறது. குறிப்பாக இந்த வருடம் கல்லூரி மாணவர்களை அதிகளவில் சேர்க்க முடிவு செய்துள்ளது, இதன் மூலம் பல ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் கேம்பஸ் இண்டர்வியூவ் முக்கியத்துவம் பெறுகிறது.

டீம்லீஸ் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் EY இந்தியா நிறுவனம் ஜூன் 2026 முடியும் நிதியாண்டில் 14,000 முதல் 15,000 புதிய ஊழியர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளது. கேம்பஸ் இண்டர்வியூவ் மூலம் அதிகப்படியான ஊழியர்களை சேர்க்க உள்ளது. EY இந்தியாவில் ஆண்டுதோறும் பிஸ்னஸ் ஸ்கூல், பொறியியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள் மற்றும் இளங்கலை கல்லூரிகளில் இருந்து ஏறத்தாழ 2,000 பேரை தேர்வு செய்கிறது.
கோத்ரெஜ் கன்ஸ்யூமர் பிராடக்ட்ஸ், டியாஜியோ, டாடா மோட்டார்ஸ், மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் போன்ற நிறுவனங்களும் ஆட்சேர்ப்பை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது.
ஐடி துறையும் 2026 இல் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி சில வேலைகளை பாதித்தாலும், புதிய திறன் கொண்ட ஊழியர்களின் தேவை அதிகமாக உள்ளது.
ஏஐ தொடர்பான புதிய பணிகள், டேட்டா அனலிஸ்ட், மெஷின் லேர்னிங் போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். பல நிறுவனங்கள் ஏஐயை பயன்படுத்தி செயல்திறனை உயர்த்துவதால், புதிய தொழில்நுட்பங்களை கையாளும் ஊழியர்களுக்கு தேவை அதிகரிக்கிறது. இதனால் ஐடி துறையில் புதிய பட்டதாரிகளுக்கு வாய்ப்புகள் பெருகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
செயற்கை நுண்ணறிவு சில ஆட்டோமேஷன் பணிகளை எடுத்துக்கொண்டாலும், மனித திறன் தேவைப்படும் புதிய பணிகளை உருவாக்குவது உறுதி என தெரிகிறது. இதேபோல் பல நிறுவனத்தில் ஏஐ மூலம் செய்யப்படும் பணிகளில் நம்பிக்கை தன்மை குறைவாக இருப்பதால் மீண்டும் அதிகப்படியான ஊழியர்களை பணியில் சேர்க்க முடிவு செய்துள்ளது. இதில் முக்கியமாக சேல்ஸ்போர்ஸ் ஓன்று.
2026 இல் ஏஐயால் சில வேலைகள் மாற்றம் அடைந்தாலும், ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு குறைவதற்கு பதிலாக அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏஐயை கையாளும் திறன் கொண்ட ஊழியர்களுக்கு டிமாண்ட்-ம் அதிகம், சம்பளமும் அதிகம். இதனால் இளைஞர்கள் ஏஐ தொடர்பான பயிற்சிகளை மேற்கொண்டாலோ அல்லது ஏஐ திறன்களை வளர்த்துக்கொண்டாலோ வேலைவாய்ப்பு உறுதியாகும்.
இந்திய நிறுவனங்கள் 2026 இல் ஆட்சேர்ப்பை அதிகரிப்பது பொருளாதார வளர்ச்சிக்கு நல்ல அறிகுறியாகும். ஏஐ போன்ற தொழில்நுட்ப மாற்றங்களை சரியாக பயன்படுத்தினால் வேலைவாய்ப்பு மேலும் உயரும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். வேலை தேடுபவர்கள் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தினால் இந்த ஆண்டு உங்களுக்கானது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications