அமெரிக்கா தலைமையிலான பக்ஸ் சிலிகா (Pax Silica) குழுவில் இந்தியா இணைந்துள்ளது. இந்தியா ஏஐ இம்பேக்ட் சம்மிட் 2026 கூட்டத்தில் ஒரு பகுதியாக இன்ரு இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில், இரு நாட்டு அரசு அதிகாரிகளும் பக்ஸ் சிலிகா அறிக்கையில் கையெழுத்திட்டனர்.
இது செயற்கை நுண்ணறிவு (ஏஐ), செமிகண்டக்டர் மற்றும் முக்கிய பொருட்களின் விநியோகச் சங்கிலிகளில் பக்ஸ் சிலிகா குவில் இருக்கும் நாடுகள் மத்தியில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் முக்கிய படியாகும்.

பக்ஸ் சிலிகா என்றால் என்ன?
பக்ஸ் சிலிகா என்பது அமெரிக்க வெளியுறவுத்துறையின் முக்கிய திட்டமாகும். தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை-யில் நம்பகமான கூட்டாளிகள் அடங்கிய வலையமைப்பை உருவாக்குவதே இதன் நோக்கம்.
இந்த பக்ஸ் சிலிகா குழுவில் தற்போது ஆஸ்திரேலியா, கிரீஸ், இஸ்ரேல், ஜப்பான், கத்தார், தென் கொரியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன் போன்ற நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. கனடா, நெதர்லாந்து, ஐரோப்பிய ஒன்றியம், OECD, தைவான் போன்றவை பங்கேற்பாளர்களாக உள்ளன.
முக்கிய இலக்கு
இந்த குழுவில் இணைந்தது மூலம் செயற்கை நுண்ணறிவு (ஏஐ), செமிகண்டக்டர் மற்றும் முக்கிய பொருட்கள் உதாரணமாக அரிய உலோகம் போன்றவற்றின் சப்ளை செயின், தொழில்நுட்ப உதவி ஆகியவற்றை பகிர்ந்து இக்குவில் இருக்கும் நாடுகள் மத்தியில் இணக்காமான செயல்பாட்டையும், வேகமான வளர்ச்சியையும் உருவாக்குவதே இலக்கு.
அஸ்வினி வைஷ்ணவ்
மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த பக்ஸ் சிலிகா குழுவில் இணைவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திட்ட பின்பு பேசுகையில், செமிகண்டக்டர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் இந்தியாவின் நீண்டகால இலக்குகளை இடைய இது பயன்படும் என தெரிவித்தார்.
தற்போதைய முயற்சிகள் வளர்ச்சியின் தொடக்கம் என்றும், இது பெரிய அளவிலான வளர்ச்சி சுழற்சியை தொடங்கும் என்றும் கூறினார். அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் இந்தியாவின் இணைப்பு உலக தொழில்நுட்ப ஒழுங்கில் முக்கியமானது என்று குறிப்பிட்டார்.
வர்த்தக ஒப்பந்தம் அடித்தளம்
இந்த பக்ஸ் சிலிகா குழுவின் இணைப்பு என்பது இந்தியா - அமெரிக்க மத்தியிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தைத் தொடர்ந்து நடந்ததுள்ளது. மேலும் இது ஏஐ, செமிகண்டக்டர் துறைகளில் இணைந்து பணியாற்றுவதற்கு வழிவகுக்கிறது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications