வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் இந்திய நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி திட்டங்களில் அதிகளவிலான முதலீடுகளைச் செய்ய வேண்டும். இதுநாள் வரையில் மிகவும் குறைந்த அளவிலான முதலீட்டை மட்டுமே செய்து வந்ததை நிறுத்த வேண்டும்.
இந்திய நிறுவனங்கள் இதுநாள் வரையில் மிகவும் குறைவான தொகை மட்டுமே ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் முதலீடு 'Jugaad innovation' செய்யும் காரணத்தால் எதிர்கால வளர்ச்சியில் பெரிய அளவிலான இழப்பை எதிர்கொண்டு வருகிறோம் எனப் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி
உலகின் டாப் 10 பொருளாதார நாடுகளில் இந்தியா தான் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறையில் மிகவும் குறைவாக முதலீடு செய்து வருகிறது. இந்திய ஜிடிபியில் வெறும் 0.65 சதவீதம் மட்டுமே R&D பிரிவுக்காக முதலீடு செய்கிறோம். இந்நிலையில் மத்திய அரசு முன்வந்து ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவில் அதிகளவில் முதலீடு செய்து இப்பிரிவைப் பெரிய அளவில் வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும்.
இந்தியா ஜிடிபி
டாப் 10 பட்டியலில் இருக்கும் பொருளாதார நாடுகள் தங்கள் நாட்டு ஜிடிபி-யில் 1.5 முதல் 3 சதவீதம் வரை R&D பரிவுக்கு முதலீடு செய்து வரும் நிலையில் இந்தியா மிகவும் குறைவான அளவிலேயே முதலீடு செய்கிறது. குறிப்பாக வர்த்தகப் பிரிவில் இருக்கும் நிறுவனங்கள் மிகவும் குறைவான அளவில் முதலீடு செய்வதாகவும் இந்தப் பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.
5வது பொருளாதார நாடு
இந்நிலையில் இந்தியா உலகின் 5வது பொருளாதார நாடாக இருக்கும் நிலையில், இதற்கு ஏற்ப அதிகளவில் பேட்டன் பெறுவதிலும் ஈடு செய்ய வேண்டும். எனவே இந்திய நிறுவனங்கள் ஆராய்ச்சி துறையில் அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும் எனவும் பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.
வியட்நாம் முன்னோடி
அவை அனைத்திற்கும் மேலாக நடுத்தர வருமான கொண்ட நிறுவனங்கள் பட்டியலில் இந்தியா இன்னோவேஷன் குறியீட்டில் வியட்நாம் நாட்டை விடவும் பெரிய அளவில் பின்தங்கியுள்ளோம் எனவும் குறிப்பிட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications