டிரம்பின் பதிலடிக்கு அடிபணிகிறதா இந்தியா?. கூகுள் வரியை நீக்க திட்டம்!. இதனால் யாருக்கு என்ன பயன்?

அமெரிக்கா அதிபர் டிரம்பின் வரி அழுத்தத்திற்கு மத்தியில், இந்திய அரசு 6% கூகுள் வரியை நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி நீக்க நடவடிக்கை வரும் ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த திருத்தங்கள் பல முக்கியமான பொருளாதார மற்றும் வரி விதிப்புத்துறைகளை மாற்றக்கூடியவை என கருதப்படுகிறது.

டிரம்பின் பதிலடிக்கு அடிபணிகிறதா இந்தியா?. கூகுள் வரியை நீக்க திட்டம்!. இதனால் யாருக்கு என்ன பயன்?

அதன்படி, 2025 நிதி மசோதாவில் திருத்தங்களை மேற்கொள்வதன் ஒரு பகுதியாக, ஆன்லைன் விளம்பரங்கள் மீதான சமநிலை வரியை (Equalisation Levy) ரத்து செய்ய அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த நடவடிக்கை. அமெரிக்காவின் வரி அழுத்தத்துக்கு உட்பட்டு, இந்தியா சில வரிகளை நீக்க தயாராக இருப்பதற்கான அறிகுறி என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதாவது, நாடு முழுவதும் நிதி மசோதா 2025 இல் கொண்டு வரப்பட்ட 35 திருத்தங்களின் ஒரு பகுதியாக, ஏப்ரல் 1 முதல் டிஜிட்டல் விளம்பரங்களுக்கு வசூலிக்கும் 6 சதவீத சமநிலை வரியை (EL) நீக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. 2016 முதல் செயல்பாட்டில் இருந்து வரும் சமநிலை வரி, வருடத்திற்கு ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக ஆன்லைன் விளம்பர சேவைக்காக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு செலுத்தும் பணிக்கே விதிக்கப்பட்டது.

இந்தநிலையில், நிதி மசோதா 2025, திருத்தங்களை நாடாளுமன்றத்தில் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அறிமுகம் செய்தார். கடந்த ஆண்டு, கூகிள், மெட்டா மற்றும் அமேசான் போன்ற வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களால் இந்திய நிறுவனங்களுக்கு வழங்கும் டிஜிட்டல் சேவைகளுக்கு விதித்த 2% வரியை மத்திய அரசு ரத்து செய்தது. இதன் காரணமாக, இந்தியா-அமெரிக்கா இடையே வணிக மோதலுக்கு வழிவகுத்தது. ஆனால் ஆன்லைன் விளம்பர சேவைகளுக்கு விதிக்கப்பட்ட 6% சமநிலை வரி தொடர்ந்து செயல்பாட்டில் இருந்தது.

இதேபோல், கடந்த ஆண்டு, Amazon, Flipkart, eBay போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் வழங்கும் சேவைகளுக்கு விதிக்கப்பட்ட 2% சமநிலை வரியை மத்திய அரசு ரத்து செய்திருந்தது. இந்த 2 சதவீத வரி அமெரிக்காவிலிருந்து அதிக விமர்சனங்களை பெற்றது. ஏனெனில் அது Google, Meta, Amazon போன்ற அமெரிக்க நிறுவனங்களை நேரடியாக பாதித்தது. இதனால், அமெரிக்கா இந்தியாவுக்கு எதிராக கூடுதல் வரி (Tariff Retaliation) விதிக்கும் அபாயம் ஏற்பட்டதால், அதை தவிர்க்கும் நோக்கில் மத்திய அரசு தற்போது, ஆன்லைன் விளம்பரத்திற்கான 6% சமநிலை வரியை நீக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த நடவடிக்கை மற்றும் தற்போது நடைமுறையில் உள்ள தூதரக முயற்சிகள் அமெரிக்காவின் நிலைப்பாட்டை மென்மையாக்க வழிவகுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று AKM Global நிறுவனத்தின் வரி நிபுணர் அமித் மகேஸ்வரி கூறினார்.

முன்னதாக, டிஜிட்டல் சேவை வரிகள் குறித்து, 2020ம் ஆண்டு ஜூன் மாதத்தில் முதல் ஒரு வருடம் நீடித்த விசாரணையை அமெரிக்கா நடத்தியது. அதில், டிஜிட்டல் சேவை வரிகள் Apple, Amazon, Google, Facebook போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக உள்ளன என்று தெரிவித்தது. மேலும், ஆஸ்திரியா, இந்தியா, இத்தாலி, ஸ்பெயின், துருக்கி மற்றும் யுகே ஆகிய நாடுகள் அமல்படுத்திய டிஜிட்டல் சேவை வரிகள், அமெரிக்க டிஜிட்டல் நிறுவனங்களை பகைத்துக் கொண்டு விதிக்கப்பட்டதாகவும், அவை சர்வதேச வரி விதிப்பு கோட்பாடுகளுக்கு முரணாகவும் அமெரிக்க நிறுவனங்களுக்கு கூடுதல் பாரத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்தன என்றும் அமெரிக்கா குற்றம்சாட்டியிருந்தது.

Nangia Andersen LLP நிறுவனத்தை சேர்ந்த விஷ்வாஸ் பஞ்சியார் கூறுகையில், "டிஜிட்டல் பரிவர்த்தனைகளை வரிவிதிப்பிற்குள் கொண்டு வர சமநிலை வரி எப்போதும் ஒரு முழுமையான தீர்வாக இல்லை; உலகளாவிய மற்றும் அனைத்து நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒப்பந்தம் உருவாகும் வரை இது ஒரு இடைக்கால மற்றும் குறைபாடுள்ள தீர்வாகவே இருந்து வந்தது என்றார். மேலும் சமநிலை வரிக்கு கூடுதலாக, இந்தியாவில் குறிப்பிடத்தக்க ஆன்லைன் இருப்பைக் கொண்ட வெளிநாட்டு நிறுவனங்களை இலக்காகக் கொண்டு இந்தியா தனது உள்நாட்டுச் சட்டத்தில் குறிப்பிடத்தக்க பொருளாதார இருப்பு (SEP) என்ற கருத்தையும் அறிமுகப்படுத்தியது.

சமநிலை வரியை முழுமையாக நீக்க அரசாங்கம் முன்மொழிந்திருக்கும் முடிவு சரியான பாதையில் எடுத்துள்ள ஒரு நடவடிக்கையாகும். இது வரி செலுத்துவோருக்கு நிலைத்தன்மை அளிப்பதோடு மட்டுமல்லாமல், அமெரிக்கா போன்ற கூட்டாளி நாடுகள் எழுப்பிய ஒருதலைப்பட்ச வரிவிதிப்பிற்கான குறைகளையும் தீர்க்க உதவுகிறது," என்று அவர் தெரிவித்தார்.

இது தவிர, சோதனைகள் மற்றும் பறிமுதல்களின் போது கண்டறியப்பட்ட வெளியிடப்படாத வருமானத்தின் மதிப்பீட்டுக்கு உட்பட்ட 113, 132 மற்றும் 158 ஆகிய பிரிவுகளில் பிற திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதாவது, 'மொத்த வருமானம்' (Total Income) என்ற சொல் 'மொத்த வெளிப்படுத்தப்படாத வருமானம்' (Total Undisclosed Income) என மாற்றப்பட்டுள்ளது. நிதி சட்டம் 2024-இல், சோதனை மற்றும் பறிமுதல் வழக்குகளுக்கான தொகுதி மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்திய போது, 'மொத்த வருமானம்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.

ஆனால், தற்போது அரசு 'மொத்த வெளிப்படுத்தப்படாத வருமானம்' என்ற புதிய சொல்லையும் சேர்த்துள்ளது, இது சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளின் நோக்கம் வெளிப்படுத்தப்படாத வருமானத்தைக் கண்டுபிடித்து அதற்கான தண்டனை விதிப்பது மட்டுமே என்பதை தெளிவுப்படுத்தியுள்ளது. "இது, ஏற்கனவே வெளியிடப்பட்ட வருமானத்திற்கு தொடர்பாக வரி செலுத்துவோருக்கு நிலைத்தன்மையை வழங்கும்," என்று AKM Global நிறுவனத்தின் வரி நிபுணர் அமித் மகேஸ்வரி கூறினார்.

மேலும், பிரிவு 143(1) திருத்தம் செய்யப்பட்டு, புதிய துணைப்பிரிவு (iia) சேர்க்கப்பட்டுள்ளது, இது வரி துறைக்கு, வரி செலுத்துவோர் வழங்கிய தகவல்களில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், அதை வெளிப்படுத்துவதற்காக, தற்போதைய வருமான வரி அறிக்கையை முந்தைய ஆண்டின் அறிக்கையுடன் ஒப்பிடும் அதிகாரத்தை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

Take a Poll

இந்த வரி நீக்க நடவடிக்கையால் யாருக்கு என்ன பலன்? Google வரி நீக்க நடவடிக்கை, இந்தியாவில் செயல்படும் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1.குறைந்த விளம்பர செலவுகள்: 6% வரி நீக்கப்படுவதால், Google மற்றும் Meta போன்ற தளங்களில் விளம்பரமிடும் செலவு இந்திய நிறுவனங்களுக்கு குறையும், இதன் மூலம் மேலும் அதிக அளவில் டிஜிட்டல் விளம்பர செலவுகளை ஊக்குவிக்கும்.

2.அதிக லாப வரம்புகள்: தொழில்நுட்ப நிறுவனங்கள் இனிமேல் இந்த வரியை தங்களின் சேவை கட்டணத்தில் கணக்கில் கொள்ள தேவையில்லை, இதனால் அவர்களின் லாப திறன் மேம்படும்.

3.டிஜிட்டல் தளங்களில் அதிக விளம்பரதாரர்கள்: குறைந்த செலவினால் அதிகமான விளம்பரதாரர்கள் டிஜிட்டல் தளங்களில் விளம்பரமிட ஊக்குவிக்கப்படலாம், இதனால் இந்த தளங்களின் வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

4.சிறந்த வர்த்தக உறவுகள்: இந்தியாவின் இந்த நடவடிக்கை அமெரிக்கா பழிவாங்கும் வரிகளை விதிப்பதைத் தடுக்கக்கூடும், இது பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலையான வர்த்தக சூழலை உறுதி செய்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+