LPG தட்டுப்பாடு: 24 மணிநேரம் கெடு.. வந்தது புது ரூல்ஸ்.. அனைத்து விண்ணப்பங்களுக்கும் ஒப்புதல்..!!

உலகளாவிய எரிபொருள் சப்ளையில் பெரும் பாதிப்பு உருவாகியிருக்கும் வேளையில் இந்தியாவுக்கான எல்பிஜி (LPG) கிடைப்பில் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. ஆயினும் மத்திய அரசும் மத்திய அரசு நிறுவனங்களும் மக்களுக்கான எரிவாயுவை தொடர்ந்து சப்ளை செய்து வருகிறது. இந்த நிவையில் மக்களையும், வணிக அமைப்புகளையும் பிஎன்ஜி (PNG) எரிவாயுவுக்கு மாற வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா ஷர்மா நேற்று நடத்திய முக்கிய கூட்டத்திற்கு பின்பு பேசுகையில் தற்போது வீட்டு பயன்பாட்டுக்கான PNG மற்றும் CNG எரிவாயு சப்ளை எவ்விதமான தடையுமின்றி, குறைப்பாடுமின்றி முழுமையாக வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், வணிக எல்பிஜி விற்பனை மீண்டும் சீராக துவங்கியுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் எரிவாயு சப்ளை-க்கு நிரந்த தீர்வு காண வேண்டும் என்பதற்காக மத்திய அரசு மீண்டும் பிஎன்ஜி (PNG) எரிவாயு இணைப்பையும், கட்டமைப்பையும் மேம்படுத்த முடிவு செய்துள்ளது.

LPG தட்டுப்பாடு: 24 மணிநேரம் கெடு.. வந்தது புது ரூல்ஸ்.. அனைத்து விண்ணப்பங்களுக்கும் ஒப்புதல்..!!

PNG மீது கவனம்
ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் கேட்டரிங் சேவைகள் போன்ற வணிக அமைப்புகள் PNG-க்கு மாறினால், வீட்டு பயன்பாட்டிற்கான LPG மீது உள்ள நெருக்கடி குறையும் என்று மத்திய பெட்ரோலியம் துறை அதிகாரிகள் கணக்கிட்டு உள்ளனர். PNG-க்கு மாறும் பட்சத்தில் எரிவாயு விநியோகம் எளிதாகும், செலவுகள் குறையும், நாடு முழுவதும் சப்ளை எளிமையாகும்.

இந்தியாவில் இருக்கும் அனைத்து வர்த்தக எல்பிஜி இணைப்பு வாடிக்கையாளர்களும் PNG இணைப்பு மாறினால் எல்லோருக்கும் நன்மை அளிக்கும். மத்திய அரசு இதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது என சுஜாதா ஷர்மா தெரிவித்தார்.

PNG இணைப்புக்கு எளிய நடைமுறை
இந்திய நகரங்களில் PNG பயன்பாட்டை விரிவுபடுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. PNG இணைப்பு பெற விரும்பும் மக்கள் அல்லது வணிக அமைப்புகள் மின்னஞ்சல், வாடிக்கையாளர் தளங்கள், கால் சென்டர்கள் அல்லது நகர எரிவாயு விநியோக நிறுவனங்கள் (CGD) மூலம் எளிதாக விண்ணப்பிக்கலாம். மேலும், பல நிறுவனங்கள் தற்போது புதிய இணைப்பிற்கு பெறுவதை ஊக்குவிக்க சலுகைகளையும் வழங்குகின்றன.

24 மணிநேர கெடு
PNG பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு விரைவான அனுமதி வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளது. மார்ச் 16, 2026 தேதியிட்ட கடிதத்தில், நிலுவையில் உள்ள பைப் எரிவாயு இணைப்புக்கான விண்ணப்பதற்கு தானாக ஒப்புதல் (deemed approval) வழங்கவும், புதிய திட்டங்களுக்கு 24 மணி நேரத்தில் அனுமதி வழங்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சாலை புதுப்பிப்பு கட்டணங்களை தளர்த்துதல், வேலை நேரம் மற்றும் கால வரம்புகளை தளர்த்துவது, இணைப்பை வேகப்படுத்த நோடல் அதிகாரிகளை நியமித்தல் போன்ற நடவடிக்கைகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதனால் அடுத்த 3-5 மாதங்களில் இந்தியாவில் பிஎன்ஜி இணைப்பு எண்ணிக்கை 20-30 சதவீதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு உள்ளது.

எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தை காட்டிலும், பைப் வழியாக வழங்கப்படும் PNG எளிய கட்டமைப்பை கொண்டது, செலவும் குறைந்தது. இதனாலேயே மத்திய அரசு தற்போதைய எரிபொருள் நெருக்கடி சூழ்நிலையை பயன்படுத்தி நாடு முழுவதும் PNG இணைப்பை பெற ஊக்குவித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+