Live
இந்தியாவில் LPG தட்டுப்பாடு தீவிரம்: பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட கூட்டம்..!

இந்தியாவில் சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாடு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. சென்னை, பெங்களூரு, மும்பை, சென்னை, டெல்லி, ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் உள்ள பல ஹோட்டல்கள் தங்கள் செயல்பாடுகளை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளன. இது பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் மோதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி கிட்டத்தட்ட மூடப்பட்டுள்ளது. இது உலகின் மிக முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து பாதையாகும். இந்தியா தனது மொத்த எல்பிஜி இறக்குமதியில் 62 சதவீதத்தை இந்த பாதையில் இருந்து பெறுகிறது.

இந்தியாவில் LPG தட்டுப்பாடு தீவிரம்: பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட கூட்டம்..!

இந்த நெருக்கடியை கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட கூட்டம் நடத்தினார். பெட்ரோலியம் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் இதில் பங்கேற்றனர். ஹார்முஸ் ஜலசந்தி மூடல் அச்சம் எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியை பெரிதும் பாதித்துள்ளது.

டிரம்ப்-ன் மிரட்டலுக்கு பின்பு ஈரான் "ஹார்முஸ் வழியாக செல்லும் கப்பல்களை தீ வைத்து அழிப்போம்" என்று எச்சரித்துள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான கப்பல்கள் சிக்கியுள்ளன. பல அரபு நாடுகள் எண்ணெய் உற்பத்தியை குறைத்துள்ளன.

இந்த நிலைமையை கட்டுப்படுத்த இந்திய அரசு அத்தியாவசிய பொருட்கள் சட்டம், 1955-ஐ அமல்படுத்தியுள்ளது. இது எரிவாயு, பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் விநியோகம் மற்றும் பரிமாற்றத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும் அரசிடம் இருக்கும் எரிவாயு, பெட்ரோலியம் இருப்பை வீட்டு உபயோகத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டும். வணிக ரீதியான எல்பிஜி விநியோகம் கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் சிறு தொழில்களை பெரிதும் பாதிக்கிறது.

மேலும் ஈரான் போர் உலக எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தையை பெரிதும் பாதித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடல் இந்தியாவின் எல்பிஜி இறக்குமதியை பெரிதும் குறைத்துள்ளது. இதனால் பல நகரங்களில் ஹோட்டல்கள் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி உயர்மட்ட கூட்டம் நடத்தி நிலைமையை கண்காணித்து வருகிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+