இந்தியா மலோசிய நாடுகள் மத்தியிலான வர்த்தகத்திற்கு இனி ரூபாய் நாணயத்தின் வாயிலாக செட்டில்செய்துக்கொள்ள முடியும். தற்போது டாலர், யூரோ போன்ற முக்கியமான நாணயத்தின் வாயிலாக பேமெண்ட் செய்யப்பட்டு வரும் நிலையில் இனி ரூபாய் வாயிலாகவே செலுத்த முடியும்.
இந்திய ரிசர்வ் வங்கி ஜூலை 2022ல் ரூபாய் வாயிலாக வெளிநாட்டு இறக்குமதிகளுக்கு பைனான்சியல் செட்டில்மென்ட் செய்யும் முறையை அறிமுகம் செய்து அதற்கான கட்டமைப்பையும் உருவாக்கி வருகிறது. இதன் மூலம் சர்வதேச சந்தையில் ரூபாயும் முக்கிய வர்த்தக நாணயமாக மாறும்.
இதற்காக கோலா லம்பூர்-ஐ தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்தியா இண்டர்நேஷ்னல் பேங்க் ஆப் மலேசியா, ரூபாய் மதிப்பிலான வர்த்தகத்தை துவங்கி யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் சிறப்பு ரூபாய் Vostro கணக்கை திறந்துள்ளது.
மலேசியா
மலேசியா இந்தியாவின் 13 வது பெரிய வர்த்தக கூட்டாளியாகவும், மலேசியாவுக்கு இந்தியா 10 வது பெரிய வர்த்தக கூட்டாளியாகவும், ஆசியாவில் கணக்கெடுத்தால் இந்தியாவுக்கு 3வது பெரிய வர்த்தக கூட்டாளியாக மலேசியா விளங்குகிறது.
ஏற்றுமதி பொருட்கள்
மலேசியாவிற்கு இந்தியாவில் இருந்து கனிம எரிபொருள்கள், கனிம எண்ணெய்கள்; அலுமினியம் மற்றும் அதனை சார்ந்த பொருட்கள், இறைச்சி மற்றும் உண்ணக்கூடிய இறைச்சி கழிவுகள், இரும்பு மற்றும் ஸ்டீல், தாமிரம் மற்றும் அதனை சார்ந்த பொருட்கள், கரிம இரசாயனங்கள், அணு உலைகள், கொதிகலன்கள், இயந்திரங்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள்; மின் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் முக்கிய ஏற்றுமதி பொருட்களாக உள்ளது.
இறக்குமதி பொருட்கள்
இதேபோல் மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கு பாமாயில், கனிம எரிபொருள்கள், கனிம எண்ணெய்கள், மின் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள்; விலங்கு அல்லது காய்கறி கொழுப்புகள் மற்றும் எண்ணெய்கள்; அணு உலைகள், கொதிகலன்கள், இயந்திரங்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள்; தாமிரம் மற்றும் அதன் பொருட்கள், மரம்; மர கரி, அலுமினியம், கரிம இரசாயனங்கள், இரும்பு மற்றும் எஃகு மற்றும் இதர ரசாயன பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது.
வர்த்தக தொடர்பு
இந்தியா மலேசியாவுக்கு மத்தியிலான வர்த்தக தொடர்பு பல தசாப்தங்களாக உள்ளது. இரு நாடுகளிலும், இரு நாட்டு கூட்டணியில் பல வர்த்தகம் அமைப்புகள் பல துறைகளில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் இந்தியா மலேசியா மத்தியிலான ரூபாய் அடிப்படையிலான வர்த்தகம் மிகவும் முக்கியமானது. ரூபாய் மதிப்பிலான வர்த்தகத்திற்கு அடிப்படை எங்கிருந்து துவங்கியது..?
ஏற்றுமதி நாடாக மாறவேண்டும்
இந்திய அரசு மிகப்பெரிய ஏற்றுமதி நாடாக மாற வேண்டும் என்ற இலக்குடன் இயங்கி வரும் வேளையில், முன்னணி இறக்குமதி நாடாகவும் உள்ளது. இந்த நிலையில் ஏற்றுமதி, இறக்குமதி சந்தையில் டாலர், யூரோ நாணயங்களை நம்பி இயங்குவது மூலம் இந்தியாவின் வளர்ச்சியில் பெரும் பின்னடைவாக இருக்கும் என்பதால் ரூபாயில் வர்த்தகம் செய்ய ஊக்குவித்து வருகிறது.
இந்தியா மற்றும் ரஷ்யா
ரஷ்யா கொடுத்த ஒத்துழைப்பு மற்றும் ஊக்கம் ஆகியவற்றின் மூலம் முதல் முறையாக இந்தியா மற்றும் ரஷ்யா மத்தியிலான வர்த்தகத்திற்கு இரு நாடுகளும் தங்களுடனை உள்நாட்டு நாணயத்தை பயன்படுத்த துவங்கியுள்ளது. இது பெரிய அளவில் பலனளிக்கும் காரணத்தால் இந்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து உள்நாட்டு நாணய பரிமாற்ற முறை உலகின் பிற நாடுகளுக்கும் விரிவாக்கம் செய்தது.
கச்சா எண்ணெய்
உதாரணமாக இந்தியா ரஷ்யாவில் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு, ரஷ்ய நாணய மதிப்பிற்கு இணையாக ரூபாய் மதிப்பில் பணம் செலுத்தும். இதேபோல் ரஷ்யாவுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு ரூபிள் நாணயத்தில் பணத்தை பெறும். இந்த தொகையை ரஷ்ய வங்கியில் இருக்கும் இந்திய வங்கி கணக்குகளில் வைக்கப்படும். இதேபோல் இந்தியாவில் இருக்கும் ரஷ்ய வங்கி கணக்கில் ரூபாயில் வரவு வைக்கப்படும்.
டாலர் தேவையில்லை
இந்த பண பரிமாற்றத்தில் எந்த ஒரு நாட்டின் நாணயத்தையும் டாலருக்கு மாற்றி, அதற்கு கமிஷன் கொடுக்கும் வேலை இருக்காது. இதனால் டாலருக்கான டிமாண்ட் குறைந்து அதன் ரூபாய்க்கு எதிரான மதிப்பின் சரிவை கட்டுப்படுத்த முடியும். இதன் மூலம் சந்தை மதிப்பீடுகளில் பெரும் மாற்றம் உருவாகுவது மட்டும் அல்லாமல், வளரும் நாடுகளுக்கு இது அதிகளவில் நன்மை அளிக்கும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications