இந்தியா மற்றும் மாலத்தீவுகள் இடையே இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியாக, திங்களன்று 400 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது மாலத்தீவு நாட்டின் வெளிநாட்டு பரிவர்த்தனை இருப்பு பிரச்சினைகளை சமாளிக்க உதவும் என்று கூறப்படுகிறது. மாலத்தீவு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்நிலையில் அதிபர் முகமது முய்சு இந்தியாவிடம் உதவி கோரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
நாணய பரிமாற்றம் என்றால் என்ன?: நாணய பரிமாற்றம் என்பது இரண்டு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தமாகும். அதாவது வெளிநாட்டு நாணயத்தில் ஒரு நாட்டுக்கு இன்னொரு நாடு கடன் வழங்க ஒப்புக் கொள்வதே நாணய பரிமாற்ற ஒப்பந்தமாகும். கடனை பெற்றுக் கொள்ளும் நாடு அதை வட்டியுடன் குறிப்பிட்ட தேதிக்குள் திருப்பி செலுத்த வேண்டும். இதை ஒரு உதாரணத்தின் மூலம் தெரிந்து கொள்வோம். ஒரு நாட்டுக்கு 5 மில்லியன் டாலர் மதிப்பிலான பரிமாற்ற ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டதாக வைத்துக் கொள்வோம். பின்னர் இந்தியா அந்த நாட்டுக்கு டாலரில் கடனை வழங்கும். பதிலுக்கு கடன் பெறும் நாடு இந்திய ரூபாயில் பணத்தை நிலையான வட்டி விகிதத்தில் திருப்பித் தர வேண்டும். வெளிநாட்டு இருப்பு குறைவாக உள்ள நாடுகளுக்கு இந்த நாணய பரிமாற்றம் உதவும்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முகமது முய்சு ஆகியோர் இணைந்து மாலத்தீவில் ரூபே கார்டை அறிமுகப்படுத்தினர். ஹனிமதூ சர்வதேச விமான நிலையத்தில் புதிய ஓடுபாதையையும் திறந்து வைத்தனர். நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக வந்துள்ள முகமது முய்சு, ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடந்த ஆண்டு மாலத்தீவில் நடைபெற்ற தேர்தலின் போது "இந்தியாவே வெளியேறு" என்ற கொள்கையின் மூலம் முகமது முய்சு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தேர்தலில் மட்டும் வெற்றி பெற்றால் இந்தியாவின் ஒட்டுமொத்த செல்வாக்கையும் குறைப்பதாகவும் உறுதியளித்தார். அதன் பிறகு தேர்தலில் வெற்றியும் பெற்றார். முகமது முய்சு அதிபராக பதவியேற்ற பிறகு இருநாட்டு உறவுகளும் மோசமடைந்து வந்தன. தேர்தலுக்குப் பிறகு முகமது முய்சு இந்தியா வந்தது இதுவே முதல் முறை. தற்போது இரு நாட்டு உறவை வலுப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளனர்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு, EXIM வங்கியின் கடன் மூலம் கட்டப்பட்ட 700 வீடுகளை மாலத்தீவுக்கு இந்தியா ஒப்படைத்தது. இந்தியாவும் மாலத்தீவும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதம் நடத்த முடிவு செய்துள்ளதாக மோடி தெரிவித்தார்.
இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையில் ஒரு முக்கிய இடத்தை மாலத்தீவு பெற்றிருக்கிறது. இந்தியாவுக்கு மாலத்தீவு நெருங்கிய நண்பன் என்று பிரதமர் மோடி விவரித்தார். இந்தியா எப்போதுமே அண்டை நாடுகளின் பொறுப்புகளையும் சேர்த்து நிறைவேற்றும் என்று பிரதமர் மோடி விவரித்தார்.
முன்னதாக, ஜனாதிபதி திரௌபதி முர்முவால் ராஷ்டிரபதி பவனில் முய்ஸுவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார். மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக ராஜ்காட்டில் இருந்து கீழே இறங்கிச் செல்லும் முன் முய்ஸுவுக்கு முப்படைகளின் பாதுகாப்பு மரியாதை வழங்கப்பட்டது.
இதற்கு முன்னர் பிரச்சாரங்களில் ஈடுபட்டாலும் அதன் பிறகு விரோத நிலைப்பாட்டை குறைத்துக் கொண்டார் முய்சு. மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் மோடியை விமர்சித்ததால் இருதரப்பு உறவுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆனால் முய்சு, இந்திய பிரதமரை விமர்சித்த தனது அமைச்சர்களை பதவி நீக்கம் செய்தார். மாலத்தீவு கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கி தவித்து வரும் நிலையில், மாலத்தீவு அரசாங்கத்திற்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
More From GoodReturns

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications