அமெரிக்காவை திருப்பி அடித்த இந்தியா? டிரம்ப் ஷாக்.. மோடியின் முக்கிய முடிவு..!!

டொனால்டு டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்ததை அடுத்து, இந்திய அரசு பல முக்கியமான முடிவுகளை எடுத்து வருகிறது. ஒருப்பக்கம் அமெரிக்காக கேட்டும் பால்வள துறை மற்றும் விவசாய துறைகளில் அனுமதியை மறுக்கும், அதேவேளையில் 50 சதவீத வரியால் ஏற்படும் வர்த்தக பாதிப்புகளை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அமெரிக்காவை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதோடு, வரி குறைப்பை அறிவிக்கும் சூழ்நிலையை இந்தியா உருவாக்க துவங்கியுள்ளது.

இந்தியா அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து 3.6 பில்லியன் டாலர் மதிப்பிலான ஜெட் வாங்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்தியா அமெரிக்காவுடன் செய்யப்படும் அதிகவிலை மதிப்புடைய வர்த்தகத்தில் விமான கொள்முதல் மற்றும் ஆயுத கொள்முதல் தான். இதில் பாதிப்பை ஏற்படுத்தினால் டிரம்ப் அரசுக்கு பெரும் நெருக்கடி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவை திருப்பி அடித்த இந்தியா? டிரம்ப் ஷாக்.. மோடியின் முக்கிய முடிவு..!!

இந்தியா அமெரிக்கா மத்தியில் 2021 ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் அமெரிக்க வெளியுறவு துறையால் 6 போயிங் P-8I கடல் கண்காணிப்பு விமானங்களை 2.42 பில்லியன் டாலர் மதிப்பில் வாங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இப்போது பொருளாதார சவால்கள் மற்றும் சப்ளை செயின் பிரச்சினைகளால், உற்பத்தி பொருட்களின் விலை உயர்வால் மொத்த ஒப்பந்தத்தின் விலை 3.6 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதனால் இந்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளது.

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் டிரம்ப் அறிவித்த 25% கூடுதல் வரி, இந்த ஒப்பந்தத்தின் செலவுகளை கிட்டத்தட்ட 50% அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, விமான பாகங்கள் மற்றும் உதிரி பாகங்களின் விலை உயர்ந்து, போயிங் நிறுவனம் இந்த கூடுதல் செலவை இந்திய அரசின் தலையில் கட்டியது.

பாதுகாப்பு துறையிடம் வெளியான தகவல் படி இந்த விலை உயர்வு, 6 போயிங் P-8I ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளதாக பைனான்ஸ் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், இந்திய அரசு தனது பொருளாதார நலன்களை பாதுகாக்கும் நோக்கத்தில் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக.

இருப்பினும் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இந்த முடிவு குறித்து இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும், தகவலையும் அளிக்கவில்லை, இதனால் இது குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

இந்திய விமான நிறுவனங்களும்.. போயிங் ஒப்பந்தங்களும்..!
இந்தியாவில் உள்ள பல்வேறு விமான நிறுவனங்கள் போயிங் நிறுவனத்துடன் பெரிய அளவிலான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. ஏர் இந்தியா 30 பில்லியன் டாலர், இண்டிகோ 9 பில்லியன் டாலர் மற்றும் அகாசா 10 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களை செய்துள்ளன.

டிரம்ப் 50 சதவீத வரியை விதித்திருக்கும் இந்த வேளையில் இந்திய விமான நிறுவனங்கள் ஒரு முழு மறுஆய்வு நடத்தப்பட்டால், இது அமெரிக்காவிற்கு 43.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் பாதிப்பு ஏற்படுத்தும். இதனால் இது அமெரிக்க பொருளாதாரத்திற்கு பெரும் தாக்கமாக இருக்கும்.

சீனா அரசு, டிரம்பின் வரி விதிப்புகளை எதிர்கொள்ள போயிங் ஒப்பந்தங்களை மறுஆய்வு செய்வதை தான் முதல் ஆயுதமாக பயன்படுத்தியது. இப்போது இந்தியாவும் இதே வழியில் செல்ல முடிவு செய்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகளில் புதிய சவால்களை உருவாக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+