உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்பிள் மற்றும் கூகுள் தனது ஸ்மார்ட்போன் உற்பத்தியை இந்தியாவில் பெரிய அளவில் விரிவாக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இரு நிறுவனங்களும் சென்னையில் மாபெரும் உற்பத்தி தளத்தை வைத்திருக்கொண்டு இயங்கி வரும் வேளையில் இந்த திடீர் வரிவாக்கத்திற்கு என்ன காரணம்..? வேறென்ன எல்லாம் நம்ம டிரம்ப் தான்.
அமெரிக்காவின் வரி விதிப்பு கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் மூலம் தக்போது இந்தியாவில் தயாரிக்கும் பொருட்களை காட்டிலும் சீனாவிலும் வியட்நாமிலும் உற்பத்தி செய்யப்படுகிற பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதிக்க உள்ளது. இதனால் ஆப்பிள் மற்றும் கூகுள் தனது சீனாவில் எஞ்சியுள்ள தனது உற்பத்தியையும், வியட்நாம் நாட்டில் உற்பத்தி கட்டமைப்பை மொத்தமாக இந்தியாவுக்கும் மாற்ற முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் அமெரிக்க சந்தையின் தேவையை மொத்தமாக இனி இந்தியா தான் தீர்க்க போகிறது, அதிலும் குறிப்பாக சென்னை இதில் முக்கிய பங்கு வகிக்க உள்ளது. இதேபோல் சீனா மற்றும் வியட்நாம் நாட்டில் இருக்கும் உற்பத்தி தளத்தின் வாயிலாக அமெரிக்கா, இந்தியா தவிர பிற நாடுகளுக்கு சப்ளை செய்யப்படும்.
இந்த மாற்றம் ஒரு புது ட்ரெண்டா பார்க்கப்படுது, ஏன்னா, கோவிட் தொற்றுநோய் காலத்திலும், அமெரிக்கா - சீனா மத்தியிலான முதல் வர்த்தக போர் காலக்கட்டத்தில் சீனாவின் சப்ளை செயின் தடைபட்ட பிறகு, "சைனா பிளஸ் ஒன்" (China Plus One) உத்தியில் வியட்நாம் தான் அதிக பயனடைந்து வந்திருக்கு. ஆனா, இப்போ ஆப்பிள் வியட்நாமில் இருந்து இந்தியாவுக்கு உற்பத்தியை மாற்றுறது, இந்தியாவுக்கு ஒரு பெரிய வாய்ப்பாக மாறி இருக்கு.
டிரம்ப்-ன் முதல் ஆட்சியில் உருவானது தான் இந்த "சைனா பிளஸ் ஒன்" உத்தி, அப்போது அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை சீனா நம்பி மட்டுமே நம்பியிருக்க கூடாது மற்ற நாடுகளுக்கு மாற்ற உத்தரவிட்டது. இக்காலக்கட்டத்தில் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு பல நிறுவனங்கள் ஓடி வந்தது, ஆனால் இந்த கொள்கையில் அதிகம் பலன் அடைந்தது வியட்நாம் தான்.
இந்தியாவை காட்டிலும் வியட்நாம் நாட்டில் குறைவான சம்பளத்தில் ஏராளமான ஊழியர்கள், முதலீட்டுக்கு ஏற்ற சூழல், குறைந்த கார்ப்ரேட் வரி, எளிமையான வரி விதிமுறைகள், குறைவான இறக்குமதி வரிகள், மற்றும் ப்ரீ டிரேட் வர்த்தக ஒப்பந்தங்களை (FTAs) வேகமாக ஒப்புதல் அளிக்கும் கட்டமைப்பு போன்ற பல நன்மைகள் இருக்கும் காரணத்தால் சீனாவில் இருக்கும் சப்ளையர்கள் வியட்நாம் நாட்டை தேர்வு செய்தது.
இதை விட முக்கியமான காரணம் சீனாவும் வியட்நாம் நாடும் எல்லையை பகிர்கிறது. இதேபோல் இரு நாடுகள் மத்தியிலான நட்புறவும் சிறப்பாக உள்ளது. ஆனால் இந்தியா - சீனாவுக்கு மத்தியில் அப்போது மிகவும் மோசமாக இருந்தது. இதனால் சீனா சப்ளையர்கள் அதிகளவில் வியட்நாம் நாட்டிற்கு படையெடுத்தனர்.
இந்திய அரசின் திங்க் டேங்க் அமைப்பான நித்தி ஆயோக், சில மாதங்களுக்கு முன் வெளியிட்ட அறிக்கையில், வியட்நாம், தாய்லாந்து, கம்போடியா, மலேசியா ஆகிய நாடுகள் "சைனா பிளஸ் ஒன்" உத்தியில் இந்தியாவை விட அதிக பயனடைந்ததாக குறிப்பிட்டு இருக்கு.
இதுக்குறித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம், "சைனா பிளஸ் ஒன்" உத்தியில் வியட்நாம் அதிக பயனடைகிறதா என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்கப்பட்டபோது, வியட்நாமுக்கு சீனாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளுற புவியியல் நன்மை இருப்பதாக அவர் பதிலளித்தார். இது, விநியோகச் சங்கிலி இணைப்புகளை எளிதாக்குது.
இதை விட முக்கியமாக வியட்நாம் நாட்டில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக கார்ப்பரேட் வரி விகிதம் 20 சதவீதமாக இருக்கு, இது அவர்களுடை ஏற்றுமதி சார்ந்த பொருளாதார வளர்ச்சி மாதிரிக்கு பெரிய பலமாக இருக்கிறது. ஆனா, இந்தியாவில் 2024 ஒன்றிய பட்ஜெட்டில், வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 40 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக குறைக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள ரெசிப்ரோக்கல் வரி தான் வியட்நாம் நாட்டில் இருந்து நிறுவனங்கள் இந்தியாவுக்கு வர முக்கியமான காரணமாக மாறி வருகிறது. அமெரிக்கா அரசு வியட்நாமில் இருந்து இறக்குமதி செய்யப்படுற பொருட்களுக்கு 46 சதவீத வரி விதிச்சது, ஆனா இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுற பொருட்களுக்கு 26 சதவீதமாக குறைவான வரி விதிக்கப்பட்டது.
இந்த வரி விதிப்பு, தற்போது 90 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டிருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் நடைமுறைப்படுத்தலாம். இதற்கிடையில், வியட்நாமும் அமெரிக்காவும் ஒரு புது வர்த்தக ஒப்பந்தத்துக்கு பேச்சுவார்த்தை ஆரம்பிச்சிருக்கு. ஆனா, வியட்நாமுக்கு இந்தியாவை விட சாதகமான ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்பு கம்மின்னு சந்தை ஆய்வாளர்கள் அடித்து சொல்கிறார்கள்.
ஏன்னா, வியட்நாம் நாட்டை சீனா தனது மறைமுக ஏற்றுமதி தளமாக பயன்படுத்தப்படுதுன்னு அமெரிக்க நம்புகிறது. மருவு வைத்தால் மாறுவேஷமா என்ற கணக்கில் தான் அமெரிக்கா வியட்நாம் நாட்டை பார்க்கிறது. இதனால் வியட்நாம்-க்கு ஒருபோதும் அமெரிக்கா வரி விதிப்பில் தளர்வுகளை அளிக்காது. இதனால் அமெரிக்காவின் வரி விதிப்பு மற்றும் வர்த்தக கொள்கைகள் இந்தியாவுக்கு சாதகமாக மாறி வருகிறது.
More From GoodReturns

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!



Click it and Unblock the Notifications