அட கொரோனாவ விடுங்க பாஸ்.. சீனாவுக்கு இந்தியா வைக்க போகும் செக்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஒரு புறம் கொரோனாவால் பெரும் இழப்பை சந்திதுள்ள சீனாவுக்கு மேலும் ஒரு பலத்த அடியை கொடுக்க காத்துக் கொண்டுள்ளது இந்தியா.

 

என்ன தான் வர்த்தக பங்காளியாக இருந்தாலும், சீனாவால் இந்தியா வர்த்தக பற்றாகுறையையே சந்தித்து வருகின்றது என்று கூறலாம்.

உலகின் முதல் பொருளாதார நாடான அமெரிக்காவே இந்த வர்த்தக பற்றாக்குறையை முன்வைத்து தான் கடந்த ஆண்டு பெரிய வர்த்தக போரையே நிகழ்த்தின.

அதிகரித்து வரும் வர்த்தக பற்றாக்குறை

அதிகரித்து வரும் வர்த்தக பற்றாக்குறை

வளர்ந்த நிலையில் உள்ள உலகின் முதல் பொருளாதார நாடே அதை பற்றி யோசிக்கும் போது, வளர்ந்து வரும் இந்தியா அதை பற்றி யோசிப்பதில் தவறு ஏதும் இல்லையே. சரி அப்படி என்ன தான் இந்திய செய்யப்போகிறது. வாருங்கள் பார்க்கலாம். கொரோனா வெடிப்பு ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம் மிக நீண்ட காலமாகவே சீனா இந்தியா இடையே நிலவி பிரச்சனை தான் இந்த வர்த்தக பற்றாக்குறை.

வரியை அதிகரிக்க திட்டம்

வரியை அதிகரிக்க திட்டம்

இதனை ஈடுகட்ட இந்தியா, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 100 சிறந்த பொருட்களுக்கு இறக்குமதி வரியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது பற்றிய கூட்டம் அடுத்த வாரம் நடக்க உள்ளதாகவும், துறைவாரியாக அங்குள்ள நிபுணர்களை சந்தித்து இந்த பிரச்சனை பற்றி பேசப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

உற்பத்தியை ஊக்குவிக்கும்
 

உற்பத்தியை ஊக்குவிக்கும்

இந்திய அரசாங்கம் தற்போது ஒரு இறுக்கமான பாதையில் நடந்து வருகிறது. ஆக சீனா பொருட்களை தவிர்த்து இந்திய சந்தையில் உள்ளூர் பொருட்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியை அதிகரிப்பதன் மூலம், அதிலும் தற்போது சீனாவின் தொழில்சாலைகள் மூடப்பட்டுள்ள இந்த நிலையில் அதிகரிப்பதன் மூலம், இந்தியாவில் உற்பத்தியை ஊக்குவிக்க இது பயன்படும் என்றும் கூறப்படுகிறது.

விலை அதிகரிக்கலாம்

விலை அதிகரிக்கலாம்

இந்தியாவில் பல பொருட்கள் உற்பத்தி குறைவாக இருக்கும் நிலையிலேயே நாம் அண்டை நாடுகளை தேடுகிறோம். தற்போதுள்ள நிலையில் இறக்குமதியை அதிகரிப்பது அதிக செலவினங்களுக்கு வழி வகுக்கும். ஏனெனில் தொழில் துறைகளுக்கு தேவையான கூறுகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இது இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.

வளர்ச்சி பாதிக்கப்படக்கூடும்

வளர்ச்சி பாதிக்கப்படக்கூடும்

இது குறித்து வெளியாகியுள்ள கருத்தில், தொழில் துறையினர் தொழில் துறைகளுக்கு தேவையான கூறுகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். இது விலையை அதிகரிக்க தூண்டும். இதனால் நுகர்வோர் வளர்ச்சி மற்றும் உற்பத்தி வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்படக்கூடும் என்றும் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விலை அதிகரிக்கலாம்

விலை அதிகரிக்கலாம்

அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு இது குறித்து கூறுகையில், ஜனவரி பிற்பகுதியில் இருந்தே இறக்குமதியாளர்களால் புதிய இறக்குமதியை வழங்க முடியவில்லை. இதனால் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களிடம் சரக்குகள் குறைய ஆரம்பித்துள்ளன. இனியும் நிலைமை சரியாக விட்டால், மார்ச்சின் பாதியில் இருந்து விலை அதிகரிக்கக் கூடும் என்று எச்சரித்துள்ளது. மேலும் இதனால் விலைவாசி உயரக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.

சீனாவில் இருந்து இறக்குமதி

சீனாவில் இருந்து இறக்குமதி

சீனாவின் முக்கிய சந்தையாக உள்ள இந்தியாவுக்கு, 70 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை சீனா இறக்குமதி செய்கிறது. சொல்லப்போனால் சீனாவின் முக்கிய இறக்குமதி மூலங்களில் இந்தியாவும் ஒன்று. அதே போல இந்தியாவில் சில துறைகள் வழக்கமாக சீனாவினையே நம்பியுள்ளன. இந்த நிலையில் சீனாவில் இருந்து வரத்து நிறுத்தப்பட்ட நிலையில் இந்தியா ஸ்தம்பித்து போக வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

வர்த்தகம் பாதிக்கும்

வர்த்தகம் பாதிக்கும்

ஏனெனில் தற்போது வரியை உயர்த்தினால் இந்திய இறக்குமதியாளர்கள், சீனாவில் நிலைமை சீரடைந்தாலும் கூட வழக்கம் போல் இறக்குமதி செய்ய முடியுமா என்று தெரியவில்லை. இதனால் இயல்பான வர்த்தக நிலை பாதிக்கப்படக்கூடும் என்றும் இறக்குமதியாளார்கள் அஞ்சுகிறார்கள். அதிலும் மார்ச் 1 முதல் சீனா அதன் முக்கிய துறைமுகத்தை மூட உள்ளதாக பரவி வரும் வதந்திகளால் இங்கு பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேடு இன் இந்தியா பொருட்களுக்கு வழிவகுக்கும்

மேடு இன் இந்தியா பொருட்களுக்கு வழிவகுக்கும்

எப்படி எனினும் சீனாவின் இறக்குமதி வரியை அதிகரிக்கும் போது அது ஒரு புறம் இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியை தூண்டும் என்பதில் சந்தேகமில்லை. மறுபுறம் அரசுக்கு வருவாயை பெருக்கும் வகையில் இது அமையும். உண்மையில் இது ஒரு நல்ல யோசனை தான். இனி இந்தியாவில் மேடு இன் இந்தியா பொருட்களை அதிகம் காண இது வழிவகுக்கும் என்பதை நம்புவோம். எனினும் இது குறுகிய காலத்தில் சற்று தாக்கத்தினை ஏற்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India may increase import duties on top Chinese products

According to the sources Commerce department may consider imposing duties on over a 100 products that India imports heavily from china, this issue may discuss next week.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X