இந்தியா, ஆண்டுதோறும் யூரோப்பிய ஒன்றியத்துக்கு சுமார் ரூ.1.25 லட்சம் கோடி அளவுக்கு பெட்ரோல், டீசல் போன்ற பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. ஆனால், இந்த வர்த்தகம் தற்போது பெரும் ஆபத்தில் உள்ளதாக GTRI (Global Trade Research Initiative) என்ற பொருளாதார ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
என்ன காரணம்..?: ரஷ்யா, உக்ரைன் மீது கடந்த 2022ஆம் ஆண்டு முதல் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தப் போரை நடத்தும் செலவுகளை ரஷ்யா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விற்பனை மூலம் சமாளித்து வருகிறது. ரஷ்யா உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஒன்றாக இருக்கிறது. எண்ணெய் ஏற்றுமதி மூலம் ஆண்டுதோறும் 60 பில்லியன் டாலருக்கும் அதிகம் வருமானம் ஈட்டுகிறது.

ரஷ்யா, இந்த எண்ணெய் வருமானத்தைப் போர் செலவுகளுக்குப் பயன்படுத்துவதாக யூரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றன. இந்த சூழலில், யூரோப்பிய ஒன்றியம் மற்றும் G7 நாடுகள் இணைந்து, ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளன. ரஷ்யாவின் வருமானத்தை குறைப்பதன் மூலம், அந்த நாட்டு போருக்கு வரும் நிதியை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம். உலகளாவிய எண்ணெய் விலையை கட்டுப்படுத்தி, சாதாரண மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
யூரோப்பிய ஒன்றியம் தற்போது ரஷ்யாவுக்கு எதிராக புதிய தடையை கொண்டுவந்துள்ளது. இதன் முக்கிய அம்சமாக, ரஷ்யா எண்ணெய்யை பயன்படுத்தி 3-வது நாடுகளில் தயாரிக்கப்படும் பெட்ரோல், டீசல் போன்றவை மீது இறக்குமதி தடை விதிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கையால், இந்தியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் பெருமளவில் பாதிக்கப்படலாம் என்று பொருளாதார ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த தடையில் இருந்து அமெரிக்கா, பிரிட்டன், கனடா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்தியா ரஷ்யாவில் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கி, அதை சுத்திகரித்து பெட்ரோல், டீசல், ஜெட் எரிவாயு தயாரித்து யூரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்றுமதி செய்து வந்தது. ஆனால் இப்போது, இந்த வகை தயாரிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவின் ரூ.41,500 கோடி மதிப்புள்ள பெட்ரோலிய ஏற்றுமதி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இந்தியா 2024-25ஆம் ஆண்டில் மட்டும் ரஷ்யாவில் இருந்து 50.3 பில்லியன் டாலர் மதிப்புள்ள கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது. இது, நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதித் தொகையான 143.1 பில்லியனில் ஒன்றில் மூன்று பங்கு ஆகும்.
இதுதொடர்பாக GTRI நிறுவனர் அஜய் ஶ்ரீவாஸ்தவா கூறுகையில், இந்தியா ரஷ்யாவுடன் இணைந்து நடத்தும் வர்த்தகம் சட்டபூர்வமானதாக இருந்தாலும், மேற்கு நாடுகளில் இதைப் பார்க்கும் அரசியல் பார்வை மாறி வருகிறது. எரிசக்தி தொடர்புகள் அதிகரிக்கும்போது, இந்தியா தன்னுடைய பொருளாதார நலன்களை காக்க வேண்டும். மேலும், மேற்கு நாடுகள் தரும் அரசியல் அழுத்தத்தையும் சமாளிக்க வேண்டும். அதாவது, இந்தியா இனி மிக நுட்பமாக முன்னே செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications