கொரோனா தடுப்பூசி: 1.8 பில்லியன் டாலர் செலவு செய்ய வேண்டிய நிலையில் மத்திய அரசு..!

இந்தியாவில் முதல்கட்ட கொரோனா தடுப்பு மருந்துக்காக, கோவேக்ஸ் உலகளாவிய தடுப்பு மருத்துப் பகிர்வு திட்டத்தின் மூலம் கிடைக்கும் நிதியுதவியைத் தாண்டி மத்திய அரசு சுமார் 1.4 பில்லியன் டாலர் முதல் 1.8 பில்லியன் டாலர் அளவிலான தொகையைச் செலவு செய்ய வேண்டும் என GAVI அமைப்பு தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

இன்றைய அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பின் படி 1.8 பில்லியன் டாலர் என்றால் 13219.2 கோடி ரூபாய். இந்தத் தொகை மற்றும் கோவேக்ஸ் அமைப்பின் உதவி மூலம் 30 கோடி மக்களுக்குக் கொரோனா தடுப்பு மருந்து போட முடியும்.

கொரோனா தடுப்பூசி: 1.8 பில்லியன் டாலர் செலவு செய்ய வேண்டிய நிலையில் மத்திய அரசு..!

அமெரிக்காவிற்கு அடுத்ததாகக் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளது. தற்போதைய திட்டத்தின் படி இந்தியா சுமார் 30 கோடி மக்களுக்கான கொரோனா தடுப்பு மருந்தை அடுத்த 6 முதல் 8 மாதத்திற்குள் அஸ்ட்ரா ஜெனேகா, ரஷ்யாவின் ஸ்புட்நிக், சைடஸ் கேடிலா மற்றும் இந்தியாவின் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்களில் இருந்து வாங்க முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் முதல் கட்ட கொரோனா தடுப்பு மருத்து சுற்றுக்கு, கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் மக்கள் எண்ணிக்கை 60 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. ஆனாலும் தற்போது முதல் கட்டமாக 30 கோடி மக்களுக்கான தடுப்பூசி மருத்தை மட்டுமே இந்தியா வாங்க உள்ளது.

30 கோடி மக்களுக்கான தடுப்பு மருந்து பெறும் இலக்கை அடைய அதிகளவிலான நிதியைத் தடுப்பு மருந்துக்காகச் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது என ரெயூட்டர்ஸ் பத்திரிக்கை தெரிவித்து உள்ளது.

செவ்வாய்க்கிழமை முடிந்த 3 நாள் GAVI அமைப்பின் கூட்டத்தின் ஆய்வறிக்கையில், இந்தியா கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் அதிகப்படியாக 190 முதல் 250 மில்லியன் மக்களான மருந்தை பெற்றாலும் இந்திய அரசு 1.4 பில்லியன் டாலர் அளவிலான தொகையைச் செலவு செய்ய வேண்டும்.

கொரோனா தடுப்பூசி: 1.8 பில்லியன் டாலர் செலவு செய்ய வேண்டிய நிலையில் மத்திய அரசு..!

இதேபோல் சர்வதேச நாடுகளின் நெருக்கடி பொறுத்து இந்தியா 95 முதல் 125 மில்லியன் மக்களுக்கான மருந்தை பெற்றால் இந்தியா 1.8 பில்லியன் டாலர் அளவிலான தொகையைச் செலவு செய்ய வேண்டும்.

இதுமட்டும் அல்லாமல் கொரோனா தடுப்பு மருத்து மக்களுக்குச் செலுத்தத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்கவும், போக்குவரத்திற்காகவும் சுமார் 30 முதல் 80 மில்லியன் டாலர் வரையிலான தொகையைச் செலவு செய்ய வேண்டி உள்ளது. குறிப்பாகக் கொரோனா மருத்து மிகவும் குறைவான வெப்ப நிலையில் வைக்க வேண்டும் என்பதால் கூடுதல் செலவு செய்ய வேண்டி உள்ளது.

இது அனைத்தும் தற்போது மிகவும் முக்கியமாகக் கருதப்படும் 30 கோடி மக்களுக்கானது. ஆனால் உண்மையில் இந்தியாவிற்கு முதற்கட்ட தடுப்பூசிக்கு 60 கோடி மக்களுக்கு மருந்து தேவை.

இந்தியாவின் 2020-21ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் சுமார் சுகாதாரத் துறைக்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்த பட்ஜெட் அளவு 10 பில்லியன் டாலர். தற்போது முதற்கட்ட கொரோனா தடுப்பு மருந்துக்காகச் செலவு செய்யப்படும் தொகையின் அளவே 1.8 பில்லியன் டாலர்.

கோவேக்ஸ் திட்டத்தை உலகச் சுகாதார அமைப்புடன் இணைந்து GAVI நிறுவனம் தான் திட்டமிடுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+