உலக நாடுகளை வியக்க வைக்கும் இந்தியா.. செம அப்டேட்..!

சீனாவில் உருவான ரியல் எஸ்டேட் துறை வீழ்ச்சியால் இன்னும் அந்நாட்டின் கட்டுமானத் துறை சரிவில் இருந்து மீள முடியாமல் தொடர்ந்து பின்னடைவிலேயே உள்ளது. இதேபோல் ரியல் எஸ்டேட் துறை சார்ந்த அனைத்து வர்த்தகமும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதேவேளையில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் பொருளாதார மந்தநிலையை நோக்கிச் செல்லும் நிலையில் புதிய முதலீடுகள், கட்டுமானங்கள் ஆகிய திட்டங்கள் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் சீனா, அமெரிக்கா, ஐரோப்பா-வின் ஒட்டுமொத்த ஸ்டீல் துறையின் உற்பத்தியும் பெரிய அளவில் தேக்கம் அடைந்துள்ளது.

இந்த உலகளாவிய ஸ்டீல் சந்தையின் நிலை கேள்வி குறியாகியிருக்கும் வேளையில் இதைக் காப்பாற்றும் வகையில் இந்தியா உயர்ந்துள்ளது.

இந்தியா

இந்தியா

பொருளாதார வளர்ச்சி அளவீட்டில் அடுத்த ஆண்டு உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவை இந்தியா பின்னுக்குத் தள்ளும் நிலையில், இந்தியாவின் கட்டுமான துறை வளர்ச்சியின் உச்சத்தில் உள்ளதாகத் தெரிகிறது.

சீனா

சீனா

உலகின் உற்பத்தி இன்ஜின் ஆக இருக்கும் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்கும் விதமாக இந்தியா உற்பத்தி ஹப் ஆக மாற்றும் முயற்சியில் இந்தியாவில் சாலைகள், ரயில் நெட்வொர்க்குகள் மற்றும் துறைமுகங்களை நவீனமயமாக்கப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டு வருகிறது.

120 மில்லியன் டன்

120 மில்லியன் டன்

இதன் மூலம் 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஸ்டீல் தேவை 6.7 சதவீதம் அதிகரித்துச் சுமார் 120 மில்லியன் டன்களாக மாற்றும் என்று சர்வதேச ஸ்டீல் சங்கம் தெரிவித்துள்ளது. உலகின் முன்னணி பொருளாதார நாடுகள் அனைத்தும் மந்த நிலைக்குச் செல்லும் வேளையில் இந்தியாவின் கட்டுமான துறை வளர்ச்சி ஸ்டீல் உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டீல் டிமாண்ட்

ஸ்டீல் டிமாண்ட்

இந்தியாவின் ஸ்டீல் டிமாண்ட் இந்த ஆண்டும் இதேபோன்ற விரிவாக்கத்தைக் கண்டது குறிப்பிடத்தக்கது. சில ஆண்டுகளுக்கு முன்பு உலகில் அதிக ஸ்டீல் இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுச் சீனாவுக்குப் அடுத்தபடியாக இந்தியா முன்னேறி 2வது இடத்தைப் பிடித்துள்ளது.

வளர்ச்சி பாதை

வளர்ச்சி பாதை

இந்தியா தற்போது பொருளாதாரம், வர்த்தகம், உற்பத்தி, ஏற்றுமதி என அனைத்து பிரிவிலும் மிகவும் முக்கியமான வளர்ச்சிப் பாதையில் இருக்கும் காரணத்தால் நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்யவும், மேம்படுத்தவும் கட்டுமானம் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது.

200 மில்லியன் டன் வளர்ச்சி

200 மில்லியன் டன் வளர்ச்சி

இதனால் இந்தியாவில் ஸ்டீல் டிமாண்ட் உலகின் பெரும்பாலான நாடுகள் ரெசிஷனுக்குள் செல்லும் காலக்கட்டத்தில் ஸ்டீல் டிமாண்ட் உயர்ந்துள்ளது, பெரிய பாசிடிவ் சைன் ஆகப் பார்க்கப்படுவது. 2030க்குள் இந்தியாவின் ஸ்டீல் டிமாண்ட் அளவு 200 மில்லியன் டன் ஆக உயரும் எனக் கணிக்கப்படுகிறது.

ArcelorMittal Nippon Steel முதலீடு

ArcelorMittal Nippon Steel முதலீடு

இந்தியாவின் லட்சுமி மிட்டல் குடும்பமும், ஜப்பானிய ஸ்டீல் உற்பத்தி நிறுவனமும் இணைந்து ArcelorMittal Nippon Steel India, அடுத்த 10 ஆண்டுகளில் தனது ஸ்டீல் உற்பத்தியைத் திறனை மூன்று மடங்கு அதிகரித்து 30 மில்லியன் டன்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

கெளதம் அதானி

கெளதம் அதானி

இதேபோல் தென் கொரியா நாட்டின் ஸ்டீல் தயாரிப்பு நிறுவனமான போஸ்கோ ஹோல்டிங்ஸ் மற்றும் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான இந்திய தொழிலதிபர் கெளதம் அதானியும் இணைந்து இந்தியாவில் புதிய ஸ்டீல் தொழிற்சாலையை அமைப்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

உள்நாட்டு உற்பத்தி

உள்நாட்டு உற்பத்தி

இந்தியா தான் பயன்படுத்தும் ஸ்டீல்-ஐ பெரும்பகுதியை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்கிறது, ஆனால் தேவை மற்றும் விலை மாற்றம் காரணமாகப் பல நேரத்தில் அதிகப்படியான இறக்குமதி செய்யப்பட்ட ஸ்டீல்-ஐ நம்பி இயங்கி வருகிறது.

இறக்குமதி ஸ்டீல்

இறக்குமதி ஸ்டீல்

மத்திய அரசு தரவுகள் படி ஸ்டீல் இறக்குமதி ஏப்ரல் முதல் அக்டோபர் வரை 15% உயர்ந்து 3.1 மில்லியன் டன்களாக உள்ளது.ஸ்டீல்-க்கான டிமாண்ட் மற்றும் இறக்குமதியைக் குறைக்கவே தற்போது 2 பெரிய வர்த்தகக் கூட்டணியும் இந்தியாவில் புதிய தொழிற்சாலையை அமைக்க உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+