81வது இடத்தில் இருந்து 40வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா..GII லிஸ்டில் தூள்..பியூஸ் கோயல் பெருமிதம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் (Global Innovation index) 81வது இடத்தில் இருந்த இந்தியா, 40வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

இது குறித்து மத்திய தொழில் வர்த்தகம், நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் பியூஸ் கோயல், இந்தியா தொடர்ந்து புதுமைகளை மேம்படுத்தவும், ஸ்டார்ட் அப்களை ஊக்கப்படுத்துவதிலும் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகின்றது.

இது இந்தியா தொடர்ந்து தொழிட்நுட்பத் துறையில் வளர்ச்சி கண்டு வருவதையே சுட்டி காட்டுகின்றது.

 இந்தியாவில் 11 கோடி டன் தங்க படிமம் கண்டுபிடிப்பு.. எங்க தெரியுமா..? இந்தியாவில் 11 கோடி டன் தங்க படிமம் கண்டுபிடிப்பு.. எங்க தெரியுமா..?

முதல் முறையாக நடந்த தரமான சம்பவம்

முதல் முறையாக நடந்த தரமான சம்பவம்

இந்தியா முதல் முறையாக முதல் 40 இடங்களில் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இது இந்தியா தனது தகவல் தொழில் நுட்பத்தில் எந்தளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டும் விதமாக வந்துள்ளது. ஐடி துறையில் ஏற்றுமதி அதிகரிப்பு, நிதித்துறையில் பெருகி வரும் ஸ்டார்ட் அப்கள் என பலவும் இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்தியாவின் நிலைப்பாடு

இந்தியாவின் நிலைப்பாடு

இந்த ஜிஐஐ இன்டெக்ஸில் இந்தியா கடந்த 2021ம் ஆண்டில் 46வது இடத்தில் இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் 6 இடங்கள் முன்னேறிய நிலையில், 40வது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. நடப்பு ஆண்டில் 132 நாடுகளில் 40வது இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.

வியட்நாமை பின்னுக்கு தள்ளிய இந்தியா

வியட்நாமை பின்னுக்கு தள்ளிய இந்தியா

முன்னணி நாடான வியட்நாமினை பின்னுக்கு தள்ளி, உலகின் மதிப்புமிக்க புதுமையாக கண்பிடிப்புகளை கொண்டு, வளர்ந்து வரும் நாடாக இந்தியா முன்னேறியுள்ளது என WIPO அமைப்பு தெரிவித்துள்ளது. இது இந்திய அரசு தொடர்ந்து ஸ்டார்ட் அப்கள், தொழிற்துறையை ஊக்கப்படுத்தி வரும் நிலையில் வந்துள்ளது.

சிறப்பம்சம்

சிறப்பம்சம்

குறிப்பாக தொடர்ந்து தொழில் நுட்ப ஏற்றுமதியில் இந்தியா தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், அதிக முதலீடுகளை பெறுவதில் 6வது இடத்திலும், ஸ்டார்ட் அப்களுக்கான நிதியில் 8வது இடத்திலும், அறிவியல் மற்றும் பொறியல் பட்டதாரிகளில் 11வது இடத்திலும், தொழிலாளர் உற்பத்தி திறன் குறித்தான வளர்ச்சி விகிதத்தில் 12வது இடத்திலும், உள்நாட்டு தொழில் வளர்ச்சியில் மேம்படுத்தலில் 14வது இடத்திலும் உள்ளது.

முதலிடம் யார்?

முதலிடம் யார்?

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இந்த ஜிஐஐ பட்டியலில் தொடர்ந்து 12வது ஆண்டாக சுவிட்சர்லாந்து முதல் இடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளது.

மத்திய மற்றும் தென் ஆசியாவில் ஈரான் மற்றும் உஸ்பெகிஸ்தானை தொடர்ந்து இந்தியாவும் முக்கிய இடத்திற்கு முன்னேறியுள்ளது, இந்தியா வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளதை காட்டுகின்றது.

 எதற்காக இந்த அறிக்கை

எதற்காக இந்த அறிக்கை

இந்த அறிக்கையானது உலகெங்கிலும் உள்ள நாடுகள் தங்கள் கண்டுபிடிப்புகளை அதிகரிக்க உதவும் என தெரிவித்துள்ளது. மேலும் சமூக மற்றும் பொருளாதார சவால்கள் மற்றும் மாற்றங்களில் புதிய யோசனைகள் மற்றும் நுட்பங்களை இணைப்பதே இதன் அடிப்படை நோக்கமாகும். ஜிஐஐ குறியீட்டு அறிக்கை தங்கள் கொள்கைகளை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாக அரசாங்கங்கள் கருதுகின்றன. இது தற்போதைய சூழ்நிலையை மாற்ற உதவுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: இந்தியா india
English summary

India moved up from 81st to 40th in the global innovation index

India moved up from 81st to 40th in the global innovation index/81வது இடத்தில் இருந்து 40வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா.. GII லிஸ்டில் தூள்.. பியூஸ் கோயல் பெருமிதம்!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X