இந்தியாவின் 16வது நிதி ஆணையத்தின் தலைவரான அரவிந்த் பனகாரியா, இந்தியா சீனாவிலிருந்து வரும் முதலீடுகளுக்குத் திறந்த கைகளைக் கொண்டு வரவேற்கும் அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். இந்தியச் சீன எல்லையில் ராணுவ வீரர்களுக்கு மத்தியில் நடந்த தாக்குதலுக்குப் பின்பு சீன முதலீடுகளுக்கு இந்திய அரசு பெரும் தடையை விதித்தது.
இந்த நிலையில் அரவிந்த் பனகாரியா-வின் கருத்து மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது, இவர் வியாழக்கிழமை பேசும் போது சீன முதலீடுகள் இந்தியாவுக்கு முக்கியம் என்பதோடு பல முக்கியமான விஷயங்களையும் முன் வைத்தார்.

சீனாவுக்கு வழிவிடும் பெரும் நாடுகள்: அமெரிக்கா மற்றும் ஜெர்மனி போன்ற வளர்ந்த பொருளாதார நாடுகள் பின்பற்றும் அணுகுமுறையுடன் இதை ஒப்பிட்டு சீனாவிலிருந்து வரும் முதலீடுகளுக்குத் திறந்த கைகளைக் கொண்டு வரவேற்கும் அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று இதை CII உலகளாவிய பொருளாதார கொள்கை கூட்டம் 2024 இல் பனகாரியா பேசிய போது தனது கருத்தை முன்வைத்தார்.
தேசிய நலன் முக்கியம்: இதோடு அவர் தேசிய நலன்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சில முக்கியமான துறைகளில் மட்டும் விதிவிலக்குகள் இருக்க வேண்டும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். மேலும், "நட்பு அல்லாத" நாடுகளாகக் கருதப்படும் நாடுகளிலிருந்து வரும் முதலீடுகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் பனகாரியா வலியுறுத்தினார்.
இந்தியா மட்டும் ஏன்: வளர்ந்த நாடுகள் பரந்த அளவிலான துறைகளில் சீன முதலீடுகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும்போது, இந்தியா இதே போன்ற நிபந்தனைகளின் கீழ் அத்தகைய முதலீடுகளை வரவேற்கப் பரிசீலிக்க வேண்டும் என்று பனகாரியா குறிப்பிட்டு உள்ளார்.
கட்டுப்பாடுகள் அடிப்படையிலான முதலீடு: அமெரிக்கா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் ஏற்கனவே சீன முதலீட்டின் மூலம் பெரிய அளவிலான லாபத்தை எதிர்கொண்டு வருகிறது. இந்தியா இதே போன்ற அணுகுமுறையிலிருந்து பயனடையலாம் என்றும் பனகாரியா குறிப்பிட்டார். இப்படி கட்டுப்பாடுகள் அடிப்படையிலான முதலீடுகளுக்கு அனுமதிப்பது மூலம் மொத்தத் தடையைக் கைவிட முடியும், இது நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிய அளவில் பயன்பெறும் எனத் தெரிவித்துள்ளார்.
2023-24 பொருளாதார ஆய்வறிக்கை: அரவிந்த் பனகாரியா-வின் இந்த கண்ணோட்டம் இந்தியாவின் 2023-24 ஆம் ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கையின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகிறது. அந்த ஆய்வறிக்கை சீனாவிலிருந்து நேரடி வெளிநாட்டு முதலீட்டை (FDI) தீவிரமாக நாட வேண்டும் என்று பேசப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே கருத்தை தான் 16வது நிதியியல் கமிஷன் தலைவரும் குறிப்பிட்டு உள்ளார்.
இத்தகைய முதலீடு இந்தியாவில் உள்ளூர் உற்பத்தித் திறன்களைக் கணிசமாக அதிகரிக்கும் என்றும், ஏற்றுமதி சந்தையில் நுழைவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவித்தது.
இதேபோல் இந்தியா அதிக எண்ணிக்கையிலான நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை (FTA) தொடர வேண்டியதன் முக்கியத்துவத்தையும் பனகாரியா வலியுறுத்தினார்.


Click it and Unblock the Notifications