திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் கொண்டாட்டம்: இந்தியா – நியூசி. ஒப்பந்தத்தால் பிறந்தது பொற்காலம்!!

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியா நியூசிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலும், நியூசிலாந்து நாட்டு வர்த்தகத்துறை அமைச்சரும் கையெழுத்திட்டனர்.

இரு நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் போது, இரு நாடுகளை சேர்ந்த பொருட்களும் எந்த வரியும் இல்லாமல் புதிய சந்தையில் நுழைய முடியும். அதுமட்டுமில்லாமல் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் எளிதாக தொழில் புரிய முடியும். இதன் படி சுமார் 8,000 க்கும் மேற்பட்ட இந்திய பொருட்களுக்கு எந்த ஒரு கூடுதல் வரியும் இல்லாமல் நியூசிலாந்துக்கு ஏற்றுமதி செய்ய முடியும். வேளாண்மை ,ஜவுளி ,மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், வணிகச் சேவைகள் ,கல்வி கட்டுமானம், சுகாதாரம் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் எந்த வரியும் இல்லாமல் நியூசிலாந்துக்கு தங்களுடைய பொருள்களை ஏற்றுமதி செய்ய இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.

திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் கொண்டாட்டம்: இந்தியா – நியூசி. ஒப்பந்தத்தால் பிறந்தது பொற்காலம்!!

அதாவது இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருள், கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட 8024 பொருட்களுக்கு நியூசிலாந்தில் நூறு சதவீத வரிவிலக்கு தரப்பட்டிருக்கிறது. அதேபோல நியூசிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு வரக்கூடிய கம்பளி ,மரம், நிலக்கரி, பழங்கள் உள்ளிட்டவற்றின் மீதான வரிகள் குறைக்கப்படும். அதுமட்டும் இல்லாமல் நியூசிலாந்து அடுத்த 15 ஆண்டுகளின் இந்தியாவில் 20 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்யவும் உறுதி தந்திருக்கிறது.

தற்போது இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 1.3 பில்லியன் டாலராக இருக்கும் நிலையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இது 5 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு இது எந்த வகையில் லாபம் எனப் பார்த்தால் நியூசிலாந்துக்கு தமிழ்நாட்டிலிருந்து ஆடை ஏற்றுமதி மும்முடங்காக அதிகரிக்கும். தற்போது தமிழ்நாட்டை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் பெரும்பாலும் அமெரிக்க சந்தையை தான் சார்ந்திருக்கிறார்கள். அமெரிக்கா அரசாங்கம் திடீர் திடீரென வரியை உயர்த்தும் நடவடிக்கையில் ஈடுபடுவதால் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக தமிழ்நாட்டை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு சவாலான காலமாகவே இருக்கிறது.

திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் கொண்டாட்டம்: இந்தியா – நியூசி. ஒப்பந்தத்தால் பிறந்தது பொற்காலம்!!

இந்த சூழலில் நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் நியூசிலாந்துக்கு இனி எளிமையாக ஆடை ஏற்றுமதி செய்ய முடியும். நியூசிலாந்து ஒரு ஆண்டுக்கு 11,300 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடைகளை இறக்குமதி செய்கிறது. அந்த வகையில் இந்தியாவின் பங்கு இது இதில் 4.4 சதவீதம் மட்டுமே அடுத்த இரண்டு ஆண்டுகளில் இது மூன்று மடங்கு வளர்ச்சி அடையும் என சொல்லப்படுகிறது.

நியூசிலாந்து மற்றும் இந்தியா இடையிலான இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் திருப்பூர் பின்னலாடை மற்றும் தமிழ்நாட்டின் விசைத்தறித்துறைக்கு மாபெரும் எழுச்சியையும் புதிய பொற்காலத்தையும் தொடங்கி வைக்கும் என தொழில் துறையினர் கூறுகின்றனர். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜவுளித்துறைக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி இந்த ஒப்பந்தம் எனக் கூறியிருக்கிறார்.

தற்போது இந்திய ஆடைகளுக்கு நியூசிலாந்தில் 4 முதல் 10% வரை சுங்கவரி விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இனி எந்தவித வரியும் இல்லாமல் நம்முடைய ஜவுளியை அங்கே இறக்குமதி செய்யப் போகிறார்கள். இதனால் அங்கே நம்முடைய நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படக்கூடிய ஜவுளிகளின் விலை குறையும். எனவே நமக்கான புதிய சந்தை வாய்ப்பு அதிகரித்துள்ளது. இது பின்னலாடை நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படுவதையும் புதிதாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதையும் உறுதி செய்யும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+