இந்தியா - நியூசிலாந்து ப்ரீ டிரேட் ஒப்பந்தம் (FTA) ரெடி.. இந்தியா ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்! எப்படி தெரியுமா?

இந்தியாவும் நியூசிலாந்தும் 9 மாத பேச்சுவாத்தைக்கு பின்பு திங்கட்கிழமை ஃப்ரீ டிரேட் ஒப்பந்தம் (FTA) தொடர்பான விதிமுறைகளையும், கட்டுப்பாடுகள் தொடர்பான ஆலோசனைகளை முடித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராகியுள்ளதாக அறிவித்துள்ளது. ஃப்ரீ டிரேட் ஒப்பந்தம் பொதுவாகவே இரு நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தக உறவை வலுப்படுத்தும். ஆனால் இந்தியா நியூசிலாந்திடம் போட்ட ஒப்பந்ததம் சற்று ஸ்பெஷல்.

ஃப்ரீ டிரேட் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவும் நியூசிலாந்தும் சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 2025 மார்ச் மாதம் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது. இந்த ஒப்பந்தம் அடுத்த மூன்று மாதங்களில் கையெழுத்தாகும். இதன் மூலம் இந்த ஒப்பந்தம் அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று இந்திய வர்த்தக செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இது மோடி அரசின் மூன்றாவது ஃப்ரீ டிரேட் வர்த்தக ஒப்பந்தமாகும். 2025ல் இந்தியா ஏற்கனவே UAE, ஓமன் ஆகிய நாடுகளுடன் உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்திய - நியூசிலாந்து மத்தியிலான ஃப்ரீ டிரேட் ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது..?

இன்னும் 3 மாசம் தான்.. மோடி அரசின் முயற்சி பலன் கொடுக்க போகிறது..!! ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!!

ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்
இந்த ஃப்ரீ டிரேட் ஒப்பந்தத்தின்படி இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நியூசிலாந்து பொருட்களில் 95 சதவீதத்துக்கு சுங்கவரி குறைக்கப்படும் அல்லது நீக்கப்படும். 50% மேற்பட்ட பொருட்கள் ஃப்ரீ டிரேட் ஒப்பந்தம் அமலுக்கு வரும் நாள் முதல் சுங்கவரி ஜீரோவாக இருக்கும். இது நியூசிலாந்து நிறுவனங்களுக்கு இந்திய சந்தையில் விற்பனையை அதிகரிக்க மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும். காரணம் இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்பதால் நியூசிலாந்து நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பாக இருக்கும்.

இந்தியாவின் இலக்கு
இந்தியா இந்த ஒப்பந்தம் வாயிலாக இந்தியாவின் திறன் மிகுந்த ஊழியர்கள் எளிதாக நியூசிலாந்து செல்வது - பணியாற்றும் வாய்ப்பையும், ஐடி மற்றும் சேவை துறைக்கு நியூசிலாந்து சந்தை அணுகல், இந்தியாவில் நியூசிலாந்து முதலீட்டு உறுதி, ஆஸ்திரேலியாவுக்கு அளிக்கப்பட்ட வேலை வாய்ப்பு போல நியூசிலாந்து நாட்டிடம் இந்தியா கோருகிறது. இது இரு நாடுகளுக்கும் பயன் தரும்.

நியூசிலாந்து இலக்கு
நியூசிலாந்து பால்பொருட்கள், புதிய பழங்கள், கம்பளி, ஒயின் ஏற்றுமதியை உயர்த்த விரும்புகிறது. இந்திய சந்தையை எளிதாக அணுகுதல், ஒழுங்குமுறை தடைகளில் தளர்வு அல்லது தெளிவை நியூசிலாந்து கோருகிறது.

இன்னும் 3 மாசம் தான்.. மோடி அரசின் முயற்சி பலன் கொடுக்க போகிறது..!! ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!!

ஏற்றுமதி, இறக்குமதி
இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் ஆண்டுதோறும் உயர்கிறது. 2021ஆம் நிதியாண்டில் இந்தியா நியூசிலாந்துக்கு 486.2 மில்லியன் டாலர் அளவிலான பொருட்களையும், சேவைகளையும் ஏற்றுமதி செய்தது. இதேபோல் இறக்குமதி 381.5 மில்லியன் டாலர் மதிப்பிலான சேவை மற்றும் பொருட்களை இறக்குமதி செய்தது.

இதுவே 2026ஆம் நிதியாண்டில் 343.5 மில்லியன் டாலர் ஏற்றுமதியும், 356.9 மில்லியன் டாலர் இறக்குமதியும் செய்துள்ளது. தற்போது செய்யப்பட உள்ள ஃப்ரீ டிரேட் ஒப்பந்தம் இதை மேலும் உயர்த்தும்.

ஏழாவது FTA ஒப்பந்தம்
இந்தியாவின் கடந்த சில ஆண்டுகளில் ஏழு ஃப்ரீ டிரேட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. ஏற்கனவே EFTA நாடுகள், ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, மொரீஷியஸ் உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவின் உலக வர்த்தக உறவை வலுப்படுத்தும் இதேவேளையில் அமெரிக்கா, ஐரோப்பா விதிக்கும் கட்டுப்பாடுகளில் இருந்து தப்புவதற்கு இது ஒரு சிறிய வழியாக உள்ளது.

குறிப்பாக நியூசிலாந்து நாட்டில் தற்போது இந்திய மக்களின் எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்திருக்கும் காரணத்தால் இந்த வர்த்தக ஒப்பந்தம் அந்நாட்டில் இருக்கும் இந்தியர்கள் புதிய வர்த்தகத்தை துவங்கவும் வாய்ப்பாக அமையும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+