டெல்லி: "இந்தியா வேலைவாய்ப்பு அறிக்கை 2024" என்ற தலைப்பில் அண்மையில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வெளியிட்ட அறிக்கைக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வேலைவாய்ப்பு பெறாதவர்களில் 83% பேர் இளைஞர்கள் என கடந்த மார்ச் 26ஆம் தேதி சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இது தவறானது என மத்திய அரசு விளக்கம் தந்துள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு பயன்படுத்தியுள்ள தரவு தொகுப்புகளில் முரண்பாடுகள் இருப்பதாகவும், இளைஞர் வேலை வாய்ப்பு குறித்த தரவுகளின் தவறான விளக்கம் இருப்பதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.
தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை செயலாளர் சுமித் தாவரா தெரிவித்ததாக எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மூத்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு, மத்திய அரசு தனது அதிருப்தியை தெரிவித்தாக கூறப்படுகிறது.
இந்த அறிக்கையில் பயன்படுத்தப்பட்ட இரண்டு தரவு தொகுப்புகள், வேலைவாய்ப்பு வேலையின்மை ஆய்வு மற்றும் கால அளவிலான தொழிலாளர் கணக்கெடுப்பு ஆகியவை ஆகும்.
ஆனால் இந்த இரண்டு சர்வே முறைகளில் பல வேறுபாடுகள் உள்ளன, அவற்றை எப்படி ஒப்பிட முடியும் என மத்திய அரசு வினவியுள்ளது. இதில் வேலை வாய்ப்பு வேலையின்மை ஆய்வு என்பது 2011-2012 ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்டது, அதே போல கால அளவிலான தொழிலாளர் கணக்கெடுப்பு என்பது 2017- 18 ஆம் ஆண்டுதான் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இரண்டையும் ஒப்பிட்டு பார்ப்பது தவறு என அரசு கூறியுள்ளது.
2012 முதல் 2017 ஆம் ஆண்டு வரை எந்த ஒரு ஆய்வும் நடத்தப்படாததால், இந்த சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஆய்வறிக்கையை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என மத்திய அரசு வினவியுள்ளது. இளைஞர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்வது மற்றும் ஃப்ரீலேன்சிங் தொழில்கள் உள்ளிட்டவற்றை சர்வதேச தொழிலாளர் அமைப்பு கருத்தில் கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளது.
மேலும் இந்தியாவில் 15 முதல் 29 வயது உட்பட்ட நபர்களில் வேலை வாய்ப்பு பெறாதவர்கள் எண்ணிக்கை வெறும் ஐந்து சதவீதம் தான் என தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் 7 சதவீதமாக இருந்த நிலையில் 2022 ல் இது 5 சதவீதமாக குறைந்துள்ளது, மேலும் 30 முதல் 59 வயதுக்குட்பட்ட நபர்களில் வேலைவாய்ப்பில்லாதவர்களின் விகிதம் 1 சதவீதம் தான் என்றும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 35 சதவீத இளைஞர்கள் மாணவர்கள் என்றும் இவர்களின் 22 சதவிகிதம் பேர் உள்நாட்டு வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களை வேலை இல்லாதவர்கள் என நாம் கருத முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications