இந்தியா - அமெரிக்கா மத்தியிலான வர்த்தகம் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வரும் வேளையில் டிரம்ப் அரசின் வரி விதிப்பு இந்தியாவுக்கும், இந்திய உற்பத்தியாளர்களுக்கும் பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது. இரு நாடுகள் மத்தியில் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்திடவும், வரிகளைக் குறைத்திடவும் மத்திய அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்பது தான் தற்போதைய பிரச்சனையாக உள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசு அக்டோபர் மாதத்திற்கான ஏற்றுமதி வர்த்தக தரவுகளை வெளியிட்டு இருக்கிறது. இந்த தரவுகள் மூலம் அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்தியாவுக்கு எந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது.

அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் மெர்சண்டைஸ் ஏற்றுமதி 11.8 சதவீதம் சரிந்து, இறக்குமதி 16.63 சதவீதம் உயர்ந்ததால் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 41.68 பில்லியன் டாலர் என்ற உச்சத்தைத் தொட்டுள்ளது. மத்திய அரசு திங்கட்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, ஏற்றுமதி மதிப்பு குறைந்த அதேநேரம் இறக்குமதி 76.06 பில்லியன் டாலரை எட்டியுள்ளது என அறிவித்துள்ளது.
இதில் தங்க இறக்குமதி மட்டும் 14.72 பில்லியன் டாலருக்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே அக்டோபர் மாதத்தில் வெறும் 4.92 பில்லியன் டாலராக இருந்த தங்கம் இறக்குமதி, தற்போது விலை உயர்ந்த காலகட்டத்தில் அதிகப்படியாகத் தங்கம் வாங்கி குவிக்கப்பட்டு உள்ளது. வெள்ளியிலும் இதே கதை தான், தங்கத்திற்கு அடுத்தபடியாக மக்கள் வெள்ளியை விரும்பும் காரணத்தால் இதன் இறக்குமதியும் பெரிதும் உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் வரி உயர்வு இந்திய ஏற்றுமதி வர்த்தகத்தை படிப்படியாகப் பாதித்து வருகிறது என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. அமெரிக்காவில் ரிபப்ளிக் கட்சி ஆட்சியைப் படித்து டிரம்ப் அதிபராக பதவியேற்றிய நாளில் இருந்து இந்தியாவுக்கான பிரச்சனைகள் துவங்கியது. முதலில் ரெசிப்ரோக்கவல் வரி விதிக்கப்படும் என அச்சம் காட்டப்பட்டது, இதன் பின்பு விசா, இந்தியா - பாகிஸ்தான் ராணுவ தாக்குதல் பிரச்சனை என அடுத்தடுத்து இந்திய முதலீடு சந்தையைப் பாதித்து வருகிறது.
இதை தொடர்ந்து அமெரிக்கா இந்தியா மீது ஏப்ரல் மாதத்தில் 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டது, ஆகஸ்ட் 7 முதல் 25 சதவீதமாக உயர்ந்தது, ஆகஸ்ட் 27 முதல் 50 சதவீதமாக மாறியது. இந்த வரி விதிப்புகள் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கின. இதைவிட பெரிய பிரச்சனை என்னவென்றால் தற்போது டிரம்ப் வரி விதிக்கப்படாத ஸ்மார்ட்போன் மற்றும் மருந்துப் பொருள்களின் ஏற்றுமதி கூட கடுமையான சரிவைச் சந்தித்துள்ளன.
கடந்த ஆண்டு இதே காலத்தில் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 197 சதவீதம் வளர்ந்திருந்த நிலையில், இந்த ஆண்டு கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் நகை, துணி, கடல் உணவு, சோலார் மின்சாரப் பொருள்கள் உள்ளிட்ட துறைகளும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றது.
டிரம்ப் அரசின் வரி விதிப்பு தாக்கத்தைக் குறைக்கும் விதமாக மத்திய அரசு ஏற்றுமதியாளர்களுக்கு 5 பில்லியன் டாலர் மதிப்பிலான நிவாரணத் தொகுப்பை அறிவித்துள்ளது. இதோடு ஏற்றுமதி வர்த்தகத்தை மேம்படுத்த டெக்ஸ்டைல், பிளாஸ்டிக், சுரங்கப் பொருள்கள் போன்ற முக்கிய தொழில் உற்பத்திகளுக்கு விதிக்கப்பட்ட தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் (QCO) தொடர்பான இறக்குமதிக்கு விலக்கு அளித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் தொழில்துறையினரால் வரவேற்கப்பட்டாலும், ஏற்றுமதி சரிவை முழுமையாகத் தடுக்க முடியவில்லை. இதேபோல் இந்திய அரசும், தனியார் அமைப்புகளும் அமெரிக்கச் சந்தைக்கான வர்த்தக சரிவைச் சமாளிக்கப் பிற நாடுகளுடன் வர்த்தகத்தை மேம்படுத்த முடிவு செய்து கொள்கை அளவில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியா மீது அதிக வரி விதிக்கப்பட்டு உள்ள காரணத்தால், மெக்சிகோ, பிரேசில், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து குறைந்த விலைப் பொருள்களை அதிகம் அமெரிக்கச் சந்தையில் குவிக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தியத் தயாரிப்புகள் வரி விதிப்புக்குத் தாண்டி விலையைக் குறைத்துப் போராட முடியாமல் மாட்டிக்கொண்டு உள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில் இந்தியாவின் மெர்சண்டைஸ் ஏற்றுமதி 0.63 சதவீதம் மட்டுமே உயர்ந்து 254.25 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. அதேநேரம் இறக்குமதி 6.37 சதவீதம் உயர்ந்து 451.08 பில்லியன் டாலராக உள்ளது.
டிரம்ப் ரெசிப்ரோக்கல் வரி விதிப்பு மூலம் ஒவ்வொரு நாட்டின் வர்த்தக சந்தையை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சிகளை தீவிரமாக செய்து வரும் வேளையில், இந்தியாவையும் தனது கைகளுக்குள் அடக்க முயற்சி செய்கிறார் டிரம்ப். இதற்காக விதிக்கப்பட்ட 50 சதவீத வரியின் தாக்கம் இந்தியா எதிர்கொள்ள தயாராகி வரும் வேளையில், இதன் பாதிப்பு மோசமாக மாறி வருகிறது.
இந்த மோசமான சூழ்நிலை அமெரிக்கா - இந்தியா மத்தியிலான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திட்டால் மட்டுமே முடியும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications