இந்திய பொருளாதாரம் வேகமாக வளர வளர மின்சாரம் மற்றும் எரிபொருள் தேவை அதிகரிக்கும், இத்தகைய சூழ்நிலையில் எனர்ஜி துறையில் தன்னிறைவு அடைவது மிகவும் முக்கியமானது. இந்தியாவில் கச்சா எண்ணெய் வளம் அதிகமாக இல்லாத நிலையில், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதை தவிர்க்க முடியாது. ஆனால் மின்சார துறையில் இந்தியாவால் எளிதாக தன்னிறைவு அடைய முடியும்.
இத்தகைய சூழ்நிலையில் இந்திய அரசு காற்றாலை முதல் அணு ஆற்றல் வரையில் அனைத்து துறைகளிலும் மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கியமாக அணு ஆற்றல் அதாவது நியூக்ளியர் எனர்ஜி துறை தற்போது மத்திய அரசுக்கு முக்கியமான டார்கெட் ஆக மாறியுள்ளது.

இந்த நிலையில் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் அணி ஆற்றல் உற்பத்தி அளவை 100 ஜிகாவாட்டாக (GW) உயர்த்துவதற்கு பழைய மற்றும் பயன்பாட்டில் இல்லாத 10 அனல் மின் நிலையங்களை அணு மின் நிலையங்களாக மாற்றும் திட்டத்தை ஆய்வு செய்து வருகிறது மத்திய அரசு.
தற்போது இந்தியாவின் அணு ஆற்றல் உற்பத்தி அளவு என்பது 8.8 ஜிகாவாட் அளவில் மட்டுமே உள்ளது. இதை 100 ஜிகாவாட் ஆக உயர்த்தும் மாபெரும் இலக்குடன் மத்திய அரசு களத்தில் இறங்கியுள்ளது.
மத்திய அரசு முதல் கட்டமாக தேர்வு செய்துள்ள 10 அனல் மின் நிலையங்கள் பல்வேறு மாநிலங்களில் உள்ளது. இது அனைத்தும் பழைய அல்லது பயன்பாட்டில் இல்லாத அனல் மின் நிலையங்களாகும். இவை அனைத்தும் முதலில் ஆய்வு செய்யப்பட்ட பின்பே அடுத்தக்க முடிவுகளும், படிகளும் கொண்டு செல்லப்படும்.
இதில் ஒரு முக்கிய இடம் குஜராத்தின் வனக்போரி அனில் மின் நிலையம், இங்கு தலா 210 மெகாவாட் திறன் கொண்ட ஏழு யூடின்கள் உள்ளது. இது ஏற்கனவே மத்திய அரசு சார்ப்பில் ஒரு குழு ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த திட்டம் இன்னும் ஆரம்பக் கட்டத்தில் உள்ளது.
அனல் மின் நிலையத்தை, அணு சக்தி உற்பத்தி நிலையமாக மாற்றுவது குறித்து இறுதி முடிவை மத்திய அரசு தரப்பில் இருந்து மட்டும் அல்லாமல் பல நிபுணர்களைக் கொண்ட சிறப்பு குழுவின் மதிப்பாய்வுக்குப் பிறகு எடுக்கப்படும்.
அணு சக்தி தளத்தை தேர்வு செய்ய பல விஷயங்களை ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. உதாரணமாக seismic நிலைத்தன்மை, நீர் வள மற்றும் மக்கள் தொகை அருகாமையை போன்ற பல முக்கியமான காரணிகளை அடிப்படையாகக் கொண்டே நடைபெறும்.
இந்த மதிப்பாய்வு பாதுகாப்பு மற்றும் திறமையை உறுதி செய்யப்பட்ட பின்பு, இந்த 10 தேர்வு செய்யப்பட்ட இடத்தில் சிறிய முறை அணு உலைகள் (small modular reactors) அமைக்கப்படுமா அல்லது பெரிய அளவிலான அணு உலைகள் அமைக்கப்படுமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
அணு மின் நிலையங்கள் பாதுகாப்பானவையா?
அணு மின் நிலையங்கள் பாதுகாப்பு பற்றி பலருக்கு சந்தேகம் இருக்கலாம். ஆனால், நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய இந்த நிலையங்கள் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளுடன் இயங்குகின்றன. seismic அளவு மற்றும் நீர் வளம் போன்ற முக்கியமான விஷயங்களை முன்கூட்டியே ஆய்வு செய்யப்படுவதால், இயற்கை பேரிடர்களால் ஏற்படும் ஆபத்து குறைக்கப்படுகிறது.
இதேபோல் சிறிய முறை அணு உலைகள் குறைந்த அபாயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன, மேலும் பழைய அனல் மின் நிலையங்களை மாற்றுவது புதிய கட்டுமானத்தை விட பாதுகாப்பாகவும் செலவு குறைவாகவும் இருக்கும்.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!



Click it and Unblock the Notifications