இந்தியா மக்கள் தொகை மற்றும் வேகமாக வளரும் பொருளாதாரத்திற்கு தடையற்ற எனர்ஜி சப்ளை மிகவும் அவசியம். இந்தியாவில் இருந்து மின்சாரம் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டாலும் இந்தியா இன்னும் மின்மிகை நாடாக இல்லை என்பது தான் உண்மை.
இந்த நிலையில் இந்தியாவின் எனர்ஜி தேவையை பூர்த்தி செய்வதற்கு தொடர்ந்து புதிய தீர்வுகளை தேடப்பட்டு வருகிறது. இந்தியாவில் மின்சார உற்பத்தி துறை நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களை நம்பியுள்ளது. இதில் நிலக்கரி வாயிலான மின்சார உற்பத்தி சுற்றுசூழலை கடுமையாக பாதிக்கிறது.

இந்த சூழ்நிலையில் தான் அணு ஆற்றல் மற்றும் யுரேனியம் இந்திய மின்சார உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. நிலையான மற்றும் சுத்தமான ஆற்றல் ஆதாரமாக விளங்கும் அணு ஆற்றல் இந்தியாவின் எதிர்கால நம்பிக்கை பாத்திரமாக உள்ளது. ஆனால் இந்திய அணு ஆற்றல் துறை மொத்தமாக அரசு மற்றும் அரசு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
இந்த நிலையில் இந்திய அரசு, தனியார் நிறுவனங்களுக்கு யுரேனியம் உற்பத்தி, இறக்குமதி மற்றும் செயலாக்கத்தில் ஈடுபட அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது என்று அரசு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முடிவு, பல தசாப்தங்களாக அரசு நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய முடிவுக்குக் கொண்டுவர உள்ளது. தனியாருக்கு திறப்பது மூலம் அணு ஆற்றல் துறையை பல பில்லியன் டாலர் முதலீடுகளை ஈர்க்கும் துறையாக மாற உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு, 2047 ஆம் ஆண்டுக்குள் அணு ஆற்றல் உற்பத்தி திறனை 12 மடங்கு அதிகரிக்கும் திட்டத்தை உருவாக்கி வருகிறது. இந்த இலக்கு எட்டப்பட்டால், அணு ஆற்றல் இந்தியாவின் மொத்த மின்சக்தி தேவையில் 5 சதவீதத்தை பூர்த்தி செய்யும் என்று மத்திய அரசு கணித்துள்ளது.
இதற்காக, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அணுசக்தி மின் உற்பத்தி நிலையங்களில் சிறிய அளவிலான பங்குகளை வாங்குவதற்கு மத்திய அரசு கொள்கைகளை தளர்வு அளிக்கப்பட உள்ளன. இதுநாள் வரையில் மத்திய அரசு நிறுவனங்கள் மட்டும் இத்துறையில் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் தரவுகளின்படி, இந்தியாவிடம் சுமார் 76,000 டன் யுரேனியம் கிடைக்கிறது, இது 10,000 மெகாவாட் அணு ஆற்றலை 30 ஆண்டுகளுக்கு உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.


Click it and Unblock the Notifications