2021க்குள் அனைவருக்கும் வேக்சின்.. புதிதாக 30 கோடி வேக்சின்-ஐ வாங்கும் மோடி அரசு..!

இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையிலும், சுப்ரீம் கோர்ட் அளித்து வரும் தொடர் நெருக்கடியின் காரணமாகவும் தொற்றைக் கட்டுப்படுத்தப் புதிதாக ஒரு நிறுவனத்திடம் கொரோனா வேக்சின் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

ஹைதராபாத் நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இருக்கும் பயோலாஜிக்கல்-ஈ நிறுவனம் புதிதாக ஒரு கொரோனா வேக்சினை தயாரித்துள்ளது. இந்த வேக்சின் தற்போது 3வது கட்ட சோதனையில் உள்ளது.

பயோலாஜிக்கல்-ஈ நிறுவனம்

பயோலாஜிக்கல்-ஈ நிறுவனம்

இந்நிலையில் கொரோனா வேக்சின் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக மத்திய அரசு பயோலாஜிக்கல்-ஈ நிறுவனத்திடம் சுமார் 30 கோடி வேக்சினை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் இந்த வேக்சினை தயாரிக்க உதவும் வகையிலும் விரைவில் மக்களுக்கு அளிக்கும் வகையிலும் மத்திய அரசு முன்பணமாகச் சுமார் 1,500 கோடி ரூபாய் அளிக்க உள்ளது.

ஆகஸ்ட் மாதம் முதல்

ஆகஸ்ட் மாதம் முதல்

வேக்சின் -ஐ வர்த்தகச் சந்தைக்கு விரைவில் கொண்டு வரத் திட்டமிட்டு வரும் பயோலாஜிக்கல்-ஈ நிறுவனம் மத்திய அரசின் நிதி உதவியைக் கொண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதத்திற்குள் வேக்சின் தயாரிக்க உள்ளது.

அமெரிக்க மருத்துவக் கல்லூரி

அமெரிக்க மருத்துவக் கல்லூரி

பயோலாஜிக்கல்-ஈ நிறுவனம் இந்தப் புதிய வேக்சினை அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில் இருக்கும் பேலர் காலேஜ் ஆப் மெடிசின் கல்லூரி உடன் இணைந்து தயாரித்துள்ளது. இந்த வேக்சின் பெறும் மக்கள் 28 நாட்கள் இடைவேளையில் 2வது வேக்சினை பெறலாம்.

சுப்ரீம் கோர்ட் நெருக்கடி

சுப்ரீம் கோர்ட் நெருக்கடி

இந்நிலையில் தற்போதைய நிலையில் மக்களுக்கு வேக்சின் அளிக்கப்பட்டால் நாட்டின் 75 சதவீத மக்கள் தொகைக்கு அளிக்கவே சுமார் 2 வருடங்கள் ஆகும் எனக் கணிப்புகள் வெளியானதை அடுத்து சுப்ரீம் கோர்ட் மக்களுக்கு வேக்சின் அளிக்கும் பணியை விரைவுபடுத்துமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மோடி அரசின் பதில்

மோடி அரசின் பதில்

இதற்குப் பதில் அளித்துள்ள மோடி தலைமையிலான மத்திய அரசு 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் வேக்சின் அளிக்கப்படும் எனச் சுப்ரீம் கோர்ட்-க்குப் பதில் அளித்துள்ளது. இந்திய அரசால் இதைச் செய்ய முடியுமா..?! உங்கள் பதிலை கமெண்ட் பண்ணுங்க.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+