இந்திய பொருளாதாரம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதும் தற்போது 5வது இடத்தில் இருக்கும் இந்திய பொருளாதாரம் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் மூன்றாவது இடத்திற்கு செல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இங்கிலாந்து நாட்டை முந்திய இந்தியா அடுத்ததாக ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாடுகளையும் முந்தும் காலம் நெருங்கி விட்டது என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை தலைவர் மைக்கேல் பத்ரா அவர்கள் இந்தியா 2026ஆம் ஆண்டில் ஜெர்மனியை முந்தும் என்றூம், 2027ஆம் ஆண்டு ஜப்பானை முந்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
மைக்கல் பத்ரா
இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் மைக்கல் பத்ரா அவர்கள் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் ஜெர்மனியின் பொருளாதாரத்தை விட இந்திய பொருளாதாரம் 2025 - 26 ஆம் நிதி ஆண்டில் மிகப்பெரிய அளவில் முன்னேறும் என்றும் ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி விட்டு நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதாரம்
அதேபோல் இந்தியாவின் பொருளாதாரம் 2027ஆம் ஆண்டில் ஜப்பானை முந்திவிடும் என்றும் 2027ஆம் ஆண்டில் அமெரிக்கா சீனாவை அடுத்து 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சி
2022ஆம் ஆண்டில் உலக அளவில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இரண்டாவது இடத்தில் உள்ளது என்றும் இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு, பொருளாதார மந்தநிலை, பண வீக்கம் ஆகியவை இருந்தாலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக வளர்ந்து கொண்டே வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகை
இந்தியாவின் மக்கள் தொகை அடுத்த ஆண்டு உலகிலேயே மிகப் பெரியதாக மாறும் நிலையில் உலகின் மிகச் சிறந்த பொருளாதார நாடாகவும் இந்தியா மாறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம்
கடந்த மாதம் சர்வதேச நாணய நிதியம் ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் மந்த நிலையை தழுவும் என்று கணித்துள்ளது. உலக பொருளாதார கண்ணோட்டத்தில் 2023 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் பொருளாதாரம் 0.3% குறைய வாய்ப்புள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.8 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது.
நிதி ஆதாரங்கள்
பணவீக்கம் இறுக்கமான சூழ்நிலையில் இருந்தாலும் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருவதால் மிக விரைவில் ஜெர்மனியை இந்தியா முந்திவிடும் என்றும் மைக்கேல் பத்ரா தெரிவித்துள்ளார். இந்திய வங்கிகளின் நெட்வொர்க் மற்றும் பரவலான பொருளாதார நிதி ஆதாரங்கள் ஆகியவை காரணமாக இந்தியாவின் வளர்ச்சி உச்சம் பெற்று வருவதாகவும் இந்திய மக்களின் வங்கி கணக்குகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வங்கி கணக்குகள்
இப்போது ஒவ்வொரு 9000 குடிமக்களுக்கும் ஒரு வணிக வங்கி கிளை இந்தியாவில் உள்ளது என்றும் இது 1972ஆம் ஆண்டில் 40,000 கோடி மக்களுக்கு ஒரு வங்கி கிளை தான் இருந்தது என்றும் தெரிவித்துள்ளார். வங்கி வளர்ச்சி இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி ஆக கருதப்படும் என்றும் வணிக வங்கிகள் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமாக ஏடிஎம்களை நாடு முழுவதும் பராமரித்து வருகிறது என்றும் இதனால் தினமும் 2.5லட்சம் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் சேவை மையங்களை பயன்படுத்தி வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
பெருமை
இந்திய பொருளாதாரம் ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து கொண்டே வருவது இந்திய மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக 2025ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் ஜெர்மனியை முந்தும் என்ற கணிப்பு இந்திய மக்களுக்கு ஒரு பெருமையானது என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

Germany: கிளீன் எனர்ஜி எல்லாம் இனி வேலைக்கு ஆகாது.. பழையப்படி நிலக்கரிக்கு போக வேண்டியது தான்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications