கிரிக்கெட் என்றாலே இந்தியர்கள் கொண்டாட்டம் தான், இதுவும் இந்தியா பாகிஸ்தான் மேட்ச் என்றால் சொல்லவா வேண்டும். இதை உறுதி செய்யும் வகையில் புதிதாக நேற்று ஒரு விஷயம் நடந்துள்ளது இதுவும் முக்கியமான பல வருட சாதனைகள் முறியடிக்கப்பட்டு மாஸ் காட்டியுள்ளனர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்.
நடந்து வரும் ஆசிய கோப்பை போட்டியில் நேற்றைய ஆட்டம் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இல்லாமல் இருந்தது என்றால் மிகையில்லை. இதேவேளையில் கிரிகெட் பார்ப்பவர்கள் மத்தியில் அதன் மீதான ஆர்வம் குறைந்துவிட்டது என ஐபிஎல் போட்டி பார்த்துக் கூறியவர்களுக்கு நேற்றைய போட்டி புதிய பரிமாணத்தைக் கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை.
நேற்றைய இந்தியா பாகிஸ்தான் மேட்ச்-ன் போது வியூவர்ஷிப் எண்ணிக்கையில் சாதனை படைக்கப்பட்டு உள்ளது.
ஆசிய கோப்பை
ஆசிய கோப்பை போட்டியின் இந்தியா பாகிஸ்தான் மேட்ச் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட நிலையில், நேற்றைய போட்டியை மட்டும் சுமார் 13 மில்லியன் அதாவது 1.3 கோடி கணக்குகளில் இருந்து மக்கள் கண்டுகளித்துள்ளனர். இது இந்திய லைவ் ஸ்ட்ரீமிங் வரலாற்றில் 2வது பெரிய எண்ணிக்கையாக உள்ளது.
இந்தியா பாகிஸ்தான் மேட்ச்
இந்தியா பாகிஸ்தான் மேட்ச் என்பதால் ஆரம்பம் முதல் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட மேட்ச்-ஐ பார்த்தனர், 4வது ஓவரின் போது 84 லட்சம் பேர் பார்த்தனர். இதேபோல் 14வது ஓவரில் முகமது ரிஸ்வானின் விக்கெட்டை ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா வீழ்த்தியபோது பார்வையாளர்களின் எண்ணிக்கை 87 லட்சமாக அதிகரித்தது.
டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமிங் தளம்
இந்திய அணியின் பந்துவீச்சின் போது டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமிங் தளத்தில் வலுவான பார்வையாளர்களை ஈர்த்தது, கடைசி ஓவரின் போது பார்வையாளர்களின் எண்ணிக்கை 9.5 மில்லியனைத் தொட்டது. இந்திய அணி பேட்டிங்-ஐ தொடங்கிய போது 95 லட்சம், 3வது ஓவரின் போது 97 லட்சம், விராத் கோலி சிக்ஸ் அடித்தபோது 99 லட்சம் இப்படிப் படிப்படியாக உயர்ந்த எண்ணிக்கை....
விராத் கோலி, ரோஹித் சர்மா பார்ட்னர்ஷிப்
விராத் கோலி, ரோஹித் சர்மா பார்ட்னர்ஷிப்-ன் போது 5வது ஓவரில் 1 கோடி என்ற எண்ணிக்கை அளவை எட்டியது. இதைத் தொடர்ந்து 17வது ஓவரின் போது 1.2 கோடி வாடிக்கையாளர்கள், போட்டியின் கடைசி ஓவரில் இதன் எண்ணிக்கை 1.3 கோடியாக உயர்ந்தது. இதன் மூலம் இதுவரையில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட கிரிக்கெட் போட்டியில் 2வது இடத்தைப் பிடித்துள்ளது.
ஐபிஎல்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான ஐபிஎல் 12வது சீசனின் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் லைவ் ஸ்ட்ரீமிங் தளம் 12 மில்லியன் பார்வையாளர்களை எட்டியது, பின்னர் அதே சீசனின் இறுதிப் போட்டியில் 18 மில்லியனுடன் முறியடிக்கப்பட்டது. இதனால் முதல் இடத்தில் இருக்கும் போட்டி இதுதான்.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

துரந்தர் படத்தின் வசூலில் பங்கு கேட்கும் பாகிஸ்தான் மக்கள்!! இதென்ன புது பிரச்சினை!!

ஐபிஎல்: Royal Challengers Bangalore 1.8 பில்லியன் டாலருக்கு விற்பனை.. புது ஓனர் யார் தெரியுமா..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications