அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி தரமான வெற்றியை நோக்கி முன்னேறும் போது...
இந்த வெற்றியை பெரிய அளவில் கொண்டாட வேண்டும் என்பதற்காக சண்டிகரில் உள்ள ஒரு குடும்பம் ஆன்லைன் உணவு டெலிவரி தளமான ஸ்விக்கி-யில் சுமார் 70 பிரியாணி-களை ஆர்டர் செய்து அசத்தியுள்ளனர்.

இந்த ஆர்டரை, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றியை கொண்டாடும் வகையில் ஸ்விக்கி X தளத்தில் இதை பதிவிட்டு உள்ளது. சனிக்கிழமையன்று பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 192 ரன்கள் எடுத்த ரன் வேட்டையின் போது ஒரு குடும்பம் இந்தியாவின் வெற்றியை முன்கூட்டியே கணித்து இதை கொண்டாட 70 பிரியாணிகளை ஆர்டர் செய்ததாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது.
இந்த பதிவுக்கு பல ஆயிரம் பேர் லைக் செய்தது மட்டும் அல்லாமல் பல நூறு பேர் கமெண்ட் செய்துள்ளனர். மேலும் ஸ்விக்கி இந்த பதிவுக்கு RRR படத்தில் ஜூனியர் NTR மற்றும் ராம் சரண் பிரியாணி சாப்பிடும் போட்டோ-வை பதிவிட்டு ஒட்டுமொத்த இந்தியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பதிவில் சிலர் ஸ்விக்கியின் மார்கெட்டிங் யுத்தியை பாராட்டினர்.
இதேபோன்ற சம்பவம் செப்டம்பர் மாதம் பல்லேகலேயில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் ஆசிய கோப்பை போட்டியின் போது பெங்களூரு பெண் ஒருவர் 62 பிரியாணிகளை ஆர்டர் செய்து ஸ்விக்கி நிறுவனத்தை அதிர வைத்தார்.

முதல் இன்னிங்ஸின் இரண்டாவது பாதியில் இந்தியாவின் சிறந்த பவுலிங் மூலம் பாகிஸ்தானை 42.5 ஓவர்களில் 191 ரன்களுக்கு 10 விக்கெட்களையும் எடுத்து மொத்தமாக சுருட்டியது இந்தியா. இதை தொடர்ந்து இந்தியாவின் பேட்டிங்கில் சுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் அதிரடியாக விளையாட திட்டமிட்டு வெறும் 16 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர்.
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில், பாகிஸ்தான் அணி ஒருமுறை கூட இந்திய அணியை வென்றதில்லை. இதை முறியடிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் அரை சதமும் , முகமது ரிஸ்வான் 49 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் 42.5 ஓவர்களில் 191 ரன்களுக்கு 10 விக்கெட்களை இழந்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது.
ரோகித் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி 7 ஓவர்களிலேயே 50 ரன்களை கடந்தது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 30.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் சேர்த்து அபார வெற்றியை பெற்றது.


Click it and Unblock the Notifications