காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியா தனது வான்வெளியை பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் பயன்படுத்துவதை தடை செய்வது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
இதனால், பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் சீனா மற்றும் இலங்கை வழியாக நீண்ட நெடு பாதைகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது என தெரிய வந்துள்ளது. மேலும், பஹல்காம் தாக்குதலில் 26 பேர் சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததை அடுத்து, பாகிஸ்தான் விமான சேவைகளை இயக்க வான்வெளி பாதையை மூடுவது மட்டும் அல்லாமல் பாகிஸ்தான் கப்பல்களை இந்திய துறைமுகங்களில் தடை செய்யும் முடிவையும் பரிசீலித்து வருகிறது மோடி தலைமையிலான மத்திய அரது. இதனால் பாகிஸ்தான் நாட்டின் கடல் வழி, வான் வழி போக்குவரத்து மொத்தமாக பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) தற்போது கிழக்கில் பீஜிங் மற்றும் கோலாலம்பூர் ஆகிய இடங்களுக்கு மட்டுமே விமான சேவைகளை இயக்கி வருகிறது. இந்தியா தனது வான்வழியை பாகிஸ்தான் விமானங்களுக்கு மூடப்படும் காரணத்தால் தென்கிழக்கு நாடுகளுக்கு செல்ல வேண்டுமாயின் நீண்ட தூர பாதையை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
பாகிஸ்தான் ஏற்கனவே தனது வான்வெளியை இந்திய விமானங்களுக்கு மூடப்பட்டதை அடுத்து, மத்திய அரசு இதற்கு எதிர் நடவடிக்கையை எடுக்க ஆய்வு செய்து வருவதாகவும், விமான நிறுவனங்களுடன் இணைந்து மாற்று தீர்வுகளை கண்டறிய முயற்சிப்பதாகவும் மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் கே.ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.
மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் கே.ராம்மோகன் நாயுடு கூறுகையில், வான்வெளி மூடல் மற்றும் நீண்ட நேரம் பயணம் காரணமாக விமான டிக்கெட் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், இது தொடர்பாக விமான நிறுவனங்கள் மற்றும் பயணிகளின் பாதிப்புகள் குறித்து விமான போக்குவரத்து அமைச்சகம் ஆய்வு செய்யும் எனவும் தெரிவித்தார்.
பஹல்காம் படுகொலைக்குப் பின்னர் இந்தியா எப்போது வேண்டுமானாலும் பதிலடி கொடுக்கும் என்ற அச்சம் இருக்கும் காரணமாக பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் ஏற்கனவே இந்திய வான்வெளியை தவிர்க்கத் தொடங்கியுள்ளன. ஏப்ரல் 24 அன்று, பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம், "இந்தியாவுக்கு சொந்தமான அல்லது இந்தியாவால் இயக்கப்படும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் உடனடியாக பாகிஸ்தான் வான்வெளி மூடப்படும்" என அறிவித்தது.


Click it and Unblock the Notifications