காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் கடந்த வாரம் 26 பேரை சுட்டு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தானுக்கு மத்தியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் முப்படைகளையும் தயார் நிலையில் வைத்திருக்கும் வேளையில் பாகிஸ்தான் 8வது நாளாக தொடர்ந்து போர் நிறுத்தம் முடிவை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்திய அரசு பாகிஸ்தான் தீவிரவாதிகள் செய்த தாக்குதலை அடுத்து பல கட்டுப்பாடுகள், தடைகளை விதித்தது. இதை தொடர்ந்து இரு நாடுகளும் விசாக்களை ரத்து செய்வது, வாகா-அட்டாரி எல்லையை மூடுவது என பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்தது. இதனால் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகம் பாதிக்கப்படும் என பேசப்பட்டாலும் உண்மையில் கள நிலவரம் தலைகீழாக உள்ளது.

அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் படி இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மிகக் குறைவாகவே இருந்தாலும், பல பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மறைமுக வர்த்தகம் மூலம் தொடர்ந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படுகிறது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கும் எப்படி மறைமுக வர்த்தகம் நடக்கிறது..?
இந்தியா-பாகிஸ்தான் வர்த்தகம்:
1947ல் பிரிட்டிஷ் அரசு இந்தியாவிலிருந்து பிரிந்து இந்தியாவும் பாகிஸ்தானும் உருவான பிறகு, இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் தொடங்கியது. ஆனால், இரு நாடுகள் மத்தியில் தொடர்ந்து பதற்றம் அதிகமாக இருந்த காரணத்தால் வர்த்தகம் முழுமையாக வளர்ச்சி அடையவில்லை. ஆயினும் பல கட்டுப்பாடுகள், பல விதிமுறைகள், பல ஒப்பந்தங்களுக்கு பின்பு இரு நாடுகள் மத்தியில் வர்த்தகம் மிகுந்த கட்டுப்பாடுகள் உடன் நடந்து வந்தது.
2017-18 நிதியாண்டில், இரு நாடுகளுக்கு இடையேயான மொத்த வர்த்தகம் 2.41 பில்லியன் டாலராக இருந்தது, இதில் இந்தியாவின் ஏற்றுமதி 1.92 பில்லியன் டாலராகவும், இறக்குமதி 488.5 மில்லியன் டாலராகவும் இருந்தது.
ஆனால், 2019ல் காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தானின் மிகவும் உகந்த நாடு (MFN) அந்தஸ்தை ரத்து செய்தது. இதனால், 2018 முதல் 2024 வரை இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் 2.41 பில்லியன் டாலரில் இருந்து 1.2 பில்லியன் டாலராக குறைந்தது. பாகிஸ்தானின் இந்தியாவுக்கான ஏற்றுமதி 2019ல் 547.5 மில்லியன் டாலராக இருந்தது, 2024ல் வெறும் 480,000 டாலராக ஆக சரிந்தது.
இந்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2024 ஏப்ரல் முதல் 2025 ஜனவரி வரை இந்தியாவின் பாகிஸ்தான் ஏற்றுமதி 447.7 மில்லியன் டாலராக உள்ளது. இதில் மருந்துப் பொருட்கள், பெட்ரோலியம், பிளாஸ்டிக், ரப்பர், கெமிக்கல், சாயங்கள், காய்கறிகள், மசாலாப் பொருட்கள், காபி, தேநீர், பால் பொருட்கள் மற்றும் தானியங்கள் ஆகியவை அடங்கும்.
அதே காலகட்டத்தில், பாகிஸ்தானின் இந்தியாவுக்கான ஏற்றுமதி 420,000 டாலர் மட்டுமே. இதில் செம்பு, கண்ணாடிப் பொருட்கள், கரிம இரசாயனங்கள், கந்தகம், பழங்கள், பாதாம் பருப்பு மற்றும் சில எண்ணெய் விதைகள் முக்கியமானவை. இது அனைத்து இரு நாடுகளுக்கும் மத்தியில் நடக்கும் நேரடி வர்த்தகம், ஆனால் மறைமுக வர்த்தகத்தில் பல பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் இரு நாடுகளுக்கும் மத்தியில் பரிமாற்றம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
மறைமுக வர்த்தகம்:
அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் பாகிஸ்தான் ஏற்றுமதி 447.7 மில்லியன் டாலராக இருந்தாலும், மறைமுக வர்த்தகத்தின் அளவு மிக அதிகம் என நிபுணர்கள் கருதுகின்றனர். இந்தியாவைச் சேர்ந்த குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் (GTRI) அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவின் பாகிஸ்தான் ஏற்றுமதி உண்மையில் ஆண்டுக்கு 10 பில்லியன் டாலர் என மதிப்பிட்டு உள்ளது.
இந்த மறைமுக வர்த்தகம் மூன்றாம் நாடுகள் வழியாக நடைபெறுகிறது என்றும், இத்தகைய வர்த்தக முறையின் கீழ் இந்தியா - பாகிஸ்தான் மத்தியில் இருக்கும் கட்டுப்பாடுகளைத் தவிர்க்கவும், பரிசோதனைகளை கடக்கவும், பொருட்களை மறு-பெயரிட்டு அதிக விலைக்கு விற்கவும் முடியும் என GTRI அமைப்பு தெரிவித்துள்ளது.
GTRI அமைப்பின் நிறுவனர் அஜய் ஸ்ரீவஸ்தவா லிங்க்ட்இன் தளத்தில் செய்த பதிவில் மறைமுக வர்த்தக முறையை விளக்கினார். "இந்திய பொருட்கள் துபாய், சிங்கப்பூர் மற்றும் கொழும்பு துறைமுகங்கள் வழியாக அனுப்பப்படுகின்றன. இந்தப் பொருட்கள் அங்குள்ள கிடங்குகளில் சேமிக்கப்படுகின்றன. சேமிப்பில் இருக்கும்போது, வரி செலுத்தப்படாத நிலையில், பொருட்களின் orgin அதாவது உருக்கப்படும் இடத்தை ஆவணங்களிலும், லேபிள்களிலும் மாற்றப்படுகின்றன.
பின்னர், இந்தப் பொருட்கள் புதிய நாட்டின் பெயரில், உதாரணமாக இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எனக் குறிப்பிடப்பட்டு, பாகிஸ்தானுக்கு மறு-ஏற்றுமதி செய்யப்படுகின்றன என அவர் தெரிவித்தார்.
இந்த வர்த்தகம் சட்டவிரோதமானது அல்ல என்றாலும், "இந்த உத்தி வர்த்தகம் கொள்கைகளின் வலிமையை தவிடுபொடியாக்கும் திறன் கொண்டதாக உள்ளது. என ஸ்ரீவஸ்தவா கூறினார்.
வாகா-அட்டாரி எல்லைக் கடவை மூடப்பட்டு, நேரடி வர்த்தகம் நிறுத்தப்பட்டிருந்தாலும், மறைமுக வர்த்தகம் தொடர வாய்ப்புள்ளது. துபாய், சிங்கப்பூர், கொழும்பு போன்ற மையங்கள் வழியாக நடைபெறும் இந்த வர்த்தகம், எல்லை மூடலால் பெரிதாக பாதிக்கப்படாது என நிபுணர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இந்த மறைமுக வர்த்தகத்தின் செலவு அதிகரிக்கலாம், இதனால் பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!



Click it and Unblock the Notifications