கடந்த மாதம் 22ம் தேதியன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குததலில் சுற்றுலா பயணிகள் உட்பட மொத்தம் 26 பேர் பலியாகினர். இதற்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 இடங்களில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நமது ராணுவம் துல்லிய தாக்குதலை நடத்தியது. இதில், லஷ்கர்-இ-தொய்பா முகாம்கள் மற்றும் ஜெய்ஷ் இ முகமது தலைமையகம் உட்பட பல கட்டிடங்கள் சேதமடைந்தன. மேலும் 100 தீவிரவாதிகள் பலியாகினர்.
அடிபட்டும் திருந்தாத பாகிஸ்தான்: இந்தியாவில் தாக்குதல் நடத்தும் நோக்கில் நேற்று இரவு ஜம்மு எல்லை பகுதியில் அத்துமீறி பாகிஸ்தானின் விமான படை விமானங்கள் நுழைந்தது. இதனையடுத்து இந்திய விமான படை, பாகிஸ்தான் விமான படையின் எஃப்-16 ரக போர் சுட்டு வீழ்த்தியது. மேலும், பாகிஸ்தான் விமான படையின் எஃ.ப்-17 ரகத்தை சேர்ந்த 2 போர் விமானங்களையும் இந்திய விமானப்படை சுட்டி வீழ்த்தியது.

சந்தோஷத்தில் சீன நிறுவனம்: பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்து வருவது, சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது. பாகிஸ்தானுக்கு ஒன்னுன்னா சீனா ரொம்ப கவலைப்படுமே, அப்புறம் எப்படி பாகிஸ்தானை இந்தியா அடிப்பது சீன நிறுவனத்துக்கு சந்தோஷமா இருக்கும் என்ற கேள்வி எழும். ஆனால் அதற்கு காரணமும் இருக்கு. முதல்ல அந்த நிறுவனத்தை பற்றி உங்களுக்கு தெரிந்தா, அப்போ சரிதான் என்ற சொல்வீர்கள்.
அந்த சந்தோஷப்படும் நிறுவனம் சீனாவை சேர்ந்த அவிக் செங்டு ஏர்கிராஃப்ட். இந்நிறுவனம் ராணுவ பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக ஜேஎஃப்-17 தண்டர் மற்றும் ஜே-1-சி விகோரஸ் டிராகன் போன்ற போர் விமானங்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவன விமான தாயரிப்புகளை தான் பாகிஸ்தான் விமானப் படை பயன்படுத்தி வருகிறது. பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்து வருவதால், பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள் உள்பட ராணுவ தளவாடங்கள் தேவை அதிகரிக்கும்.
பாகிஸ்தான் தனது போர் விமானங்கள் தேவைக்காக அவிக் செங்டு ஏர்கிராஃப்ட் நிறுவனத்துக்கு பெரிய அளவில் ஆர்டர் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சீன நிறுவனத்துக்கு பெரிய வர்த்தக ஒப்பந்தம் கிடைக்கும் என்று சீன முதலீட்டாளர்கள் எதிர்பாக்கின்றனர். இதன் எதிரொலியாக சீன பங்குச் சந்தையில், கடந்த 2 தினங்களில் அவிக் செங்டு ஏர்கிராஃப் பங்கு விலை தாறுமாறாக ஏற்றம் கண்டு வருகிறது.
கடந்த புதன்கிழமையன்று சீன பங்குச் சந்தையில் அவிக் செங்டு ஏர்கிராஃப்ட் நிறுவன பங்கின் விலை 17 சதவீதம் உயர்ந்தது. நேற்று இந்நிறுவன பங்கின் விலை 16.37 சதவீத பங்கு விலை அதிகரித்து 80.86 யுவானை எட்டியது. ஆக, கடந்த 2 தினங்களில் அவிக் செங்டு ஏர்கிராஃப்ட் நிறுவன பங்கின் விலை ஒட்டு மொத்த அளவில் 36.21 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் இப்பங்கின் விலை 44 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications