சொந்த காசில் சூன்யம் வைத்த பாகிஸ்தான்.. இனி வரமாட்டோம்.. ஷாக் கொடுத்த சர்வதேச விமான நிறுவனங்கள்

கடந்த மாதம் 22ம் தேதியன்று காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் உட்பட மொத்தம் 26 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதனையடுத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும் நோக்கில் அதிரடியாக, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. மேலும், இந்தியாவில் தங்கியிருந்த பாகிஸ்தானியர்களை வெளியேறவும் நமது மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும், தீவிரவாதிகளுக்கு அவர்கள் பாணியில் பதிலடி கொடுக்கப்படும் என்று நமது அரசு அறிவித்தது.

வருவாய் போச்சு
இதனையடுத்து, பாகிஸ்தான் கடந்த மாதம் 24ம் தேதியன்று இந்திய விமானங்களுக்கான தான் வான்வெளியை மூடியது. இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்று நோக்கத்தில் பாகிஸ்தான் தனது வான்வெளியை பயன்படுத்த இந்தியாவுக்கு தடை விதித்தது. ஆனால், அதுவே அந்நாட்டுக்கு கனவில் நினைத்து பார்க்காத அளவுக்கு பெரிய அடியாக விழுந்துள்ளது. ஏற்கனவே கடனில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான், தற்போது மிகவும் அன்னிய செலாவணியை இழக்க தொடங்கியுள்ளது.

சொந்த காசில் சூன்யம் வைத்த பாகிஸ்தான்.. இனி வரமாட்டோம்.. ஷாக் கொடுத்த சர்வதேச விமான நிறுவனங்கள்

விமான கண்காணிப்பு தரவுகளின்படி, லுஃப்தான்சா மற்றும் ஏர் பிரான்ஸ் உள்ளிட்ட பல முக்கிய சர்வதேச விமான நிறுவனங்கள் பாகிஸ்தான் வான்வெளியைத் தவிர்ப்பதற்காக விமானங்களை மாற்று வழித்தடத்தில் இயக்கத் தொடங்கி விட்டன. வான்வெளி பாதை மாற்றம் காரணமாக, விமான நிறுவனங்களுக்கு எரிபொருள் செலவுகள் அதிகரிப்பு மற்றும் பயண நேரம் அதிகரிப்பு ஆகியவை ஏற்படும். அதேசமயம், பாகிஸ்தானுக்கு விமான கட்டணங்களிலிருந்து கிடைத்து வந்த வருவாயில் பெரிய சரிவை ஏற்படுத்தும்.

புறக்கணிப்பு
பொதுவாக விமான எடை மற்றும் பாதை தூரத்தை அடிப்படையாக கொண்டு விமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது சர்வதேச பயணிகள் விமான சேவை நிறுவனங்கள் பாகிஸ்தான் வான்வெளியை புறக்கணிக்க தொடங்கி விட்டதால் இந்த நிறுவனங்களால் கிடைத்து வந்த வருவாய் நின்று விட்டது. இப்போது பாகிஸ்தானின் நிலை சொந்த காசில் சூன்யம் வைத்த கதையாக மாறி விட்டது.

பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்திய விமானங்களுக்கு மூடுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன் புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்ததையடுத்து, 2019ல் பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்திய விமானங்களுக்கு மூடியது. இதனால் பாகிஸ்தானுக்கு அப்போது சுமார் ரூ.850 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. தற்போது அதே போன்று அதனை காட்டிலும் பெரிய வருவாய் இழப்பை பாகிஸ்தான் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடன்
2022ல் பாகிஸ்தான் கடனை திருப்பி செலுத்த நிலையில் இருந்தது, இதனையடுத்து மேற்கொண்ட சில நடவடிக்கைகள் காரணமாக அந்நாடு மீட்சிக்கான அறிகுறிகளை காண தொடங்கியது. இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பாகிஸ்தானை பொருளாதார சரிவிலிருந்து காப்பாற்றும் நோக்கில் 200 கோடி டாலர் கடன் உள்பட நிதி உதவிகளை பன்னாட்டு நிதியம் வழங்கியது. ஆனால் தற்போது அமைதியாக இருந்த இந்தியாவை தேவையில்லாமல் சீண்டி பாகிஸ்தான் இழப்புகளை சந்திக்க தொடங்கியுள்ளது.

இதனால் தற்போதைய சூழ்நிலை பாகிஸ்தானின் அந்த முன்னேற்றத்தில் பெரும் பகுதியை இல்லாமல் போய் விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெல்த்மில்ஸ் செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடெட் ஈக்விட்டி மூலோபாய நிபுணர் கிராந்தி பதினி கூறுகையில், பாகிஸ்தானின் பொருளாதாரம் சிறப்பாக இல்லை. அந்நாட்டின் பொருளாதாரம் பல்வேறு உலகளாவிய நிறுவனங்களின் கடனில் இயங்குகிறது.

மூடிஸ் எச்சரிக்கை
தற்போதைய புவிசார் அரசியல் பதட்டங்களில் ஏற்படும் எந்தவொரு அதிகரிப்பும் நிச்சயமாக அந்நாட்டின் பொருளதாரத்தின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார். மூடிஸ் நிறுவனம் கூறுகையில், பாகிஸ்தான் பதற்றத்தை அதிகரித்தால் அது நிச்சயமாக அந்நாட்டின் பொருளாதாரத்தில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார். கடந்த மாதம் 30ம் தேதி பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த நமது அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் ஏற்படும் விளைவுகளை (கூடுதல் செலவினம்) சமாளிக்கும் திறன் இந்திய விமான நிறுவனங்களுக்கு உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+