ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து வாங்கப்பட்ட கச்சா எண்ணெய்க்கு இந்திய அரசு முதன் முறையாக ரூபாய் நாணயத்தில் பணத்தைச் செலுத்தியுள்ளது. பொதுவாக வெளிநாட்டில் இருந்து வாங்கப்படும் அனைத்து பொருட்களுக்கும் டாலர், யூரோ போன்ற முக்கிய நாணயங்களில் தான் பேமெண்ட்-ஐ செய்யும்.
ஆனால் ஜூலை மாதம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன் இந்திய ரூபாய் மதிப்பில் பணத்தைச் செலுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சில நாட்களிலேயே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) ஒரு மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை அபுதாபி நேஷனல் ஆயில் நிறுவனத்திடம் இருந்து இந்திய ரூபாயில் வாங்குவதற்கு ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இதன் வாயிலாக தற்போது இந்தியா ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து வாங்கப்பட்ட கச்சா எண்ணெய்க்கு ரூபாயில் பணத்தைச் செலுத்தியுள்ளது இந்தியா. ஏற்கனவே ரஷ்யாவிடம் உள்நாட்டு நாணயத்தில் பேமெண்ட் செலுத்த இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.
உலகின் மூன்றாவது பெரிய எரிசக்தி நுகர்வோராக இருக்கும் இந்தியா சர்வதேச வர்த்தகத்திற்கு ரூபாயை எடுத்துச் செல்லும் முதல் படியாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடனான ஒப்பந்தமும், இந்தப் பேமெண்ட்-ம் அமைந்துள்ளது.
இதேபோன்ற ஒப்பந்தம் இந்தியா மற்ற எரிபொருள் சப்ளையர்களுடனும், பிற நாடுகளுடனும் செய்யத் திட்டமிட்டு வருகிறது என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க டாலரை அதிகம் சார்ந்து இருக்கும் நிலையை மாற்ற இந்திய அரசு எடுக்க முக்கிய முடிவு, இதற்கு முதலில் கைகொடுத்தது ரஷ்யா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மொத்த தேவையில் சுமார் 85% க்கும் அதிகமான அளவீட்டை வெளிநாடு இறக்குமதி மூலம் பூர்த்தி செய்து வருகிறது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் எரிபொருள் விலையைக் குறைக்க மத்திய அரசு மலிவான விலையில் வாங்குவது முதல் விநியோகத்தைப் பன்முகப்படுத்துதல் மற்றும் விலை உச்சவரம்பு சமாளிக்கும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியது கட்டாயம். இதன் ஒரு பகுதியாகத் தான் ரூபாய் மதிப்பில் கச்சா எண்ணெய் வாங்குவது.
உக்ரைன் போருக்குப் பின்பு இந்தியா ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை அதிகரித்தபோது, உள்நாட்டு ரூபாய் மூலம் பேமெண்ட் செய்வது மூலம் ஒவ்வொரு மாதமும் பல பில்லியன் டாலர்களைச் சேமிக்க உதவியது. இந்தியாவை போல் பல தென்கிழக்கு ஆசிய நாடுகள் உள்நாட்டு நாணயத்தை வெளிநாட்டு வர்த்தகத்திற்கு பயன்படுத்த திட்டமிட்டு வருகிறது, இதனால் அமெரிக்க டாலரின் ஆதிக்கம் வேகமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications