2014-15 ஆம் ஆண்டில் நரேந்திர மோடி தலைமையிலான NDA அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்தியாவின் தனிநபர் வருமானம் இரட்டிப்பு வளர்ச்சியை அடைந்துள்ளது என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் கீழ் இயங்கும் NSO அமைப்பின் தரவுகள் படி, இந்திய மக்களின் தனிநபர் வருமானம் தற்போதைய விலையில் வருடாந்திர தனிநபர் வருமானம் 2022-23-இல் 1,72,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது 2014-15 ஆம் ஆண்டில் அதாவது மோடி தலைமையிலான அரசு ஆட்சி அமைக்க வருடத்தில் 86,647 ரூபாயாக உள்ளது. 2014-15 மற்றும் 2022-23 நிதியாண்டின் தனிநபர் வருமானத்தை ஒப்பிடுகையில் இது கிட்டத்தட்ட 99 சதவீதம் உயர்வாகும்.
கோவிட் காலம்
கோவிட் காலத்தில் இந்திய மக்களின் தனிநபர் வருமானம் ரியல் மற்றும் நாமினல் பிரிவில் குறைந்துள்ளதாக NSO தரவு காட்டுகிறது. ஆனால் 2021-22 மற்றும் 2022-23 இல் அதன் அளவு மீண்டும் உயர்ந்து 2022-23-இல் 1,72,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.
Constant Price அடிப்படை
இதுவே 2011-12 ஆம் ஆண்டின் நிலையான விலை நிலை அதாவது constant price அடிப்படையில் கணக்கில் வெறும் 35 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. constant price அடிப்படையில் 2014-15 ஆம் ஆண்டில் இந்தியாவின் தனிநபர் வருமானம் 72,805 ரூபாயாக உள்ளது, இதுவே 2022-23 ஆம் ஆண்டில் 98,118 ரூபாயாக மட்டுமே உள்ளது.
ஆக்ஸ்பார்ம் அறிக்கை
இந்தியாவின் தனிநபர் நிகர தேசிய வருமானம் என்பது ஒரு நாட்டின் மொத்த பொருளாதார நடவடிக்கையின் இண்டிகேட்டர் ஆகும். இதேபோல் இந்தியாவில் செல்வம் என்பது நிலையாக பகிரப்படவில்லை என ஆக்ஸ்பார்ம்-ன் Survival of the Richest அறிக்கை கூறுகிறது.
1 சதவீத மக்கள்
2021 ஆம் ஆண்டு தரவுகள் படி இந்தியாவின் 40.5 சதவீத செலவும் நாட்டின் 1 சதவீத மக்களிடம் உள்ளது. இந்திய மக்கள் தொகையில் கீழ் தட்டில் இருக்கும் 50 சதவீத மக்களிடம் வெறும் 3 சதவீத செல்வம் மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ளது.
பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம்
NIPFP என்னும் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் பினாகி சக்ரவர்த்தி கூறுகையில், வோல்டு டெவலப்மென்ட் இன்டிகேட்டர் தரவுத் தளத்தின் படி, 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் தனிநபர் வருமானத்தின் சராசரி வளர்ச்சி ஆண்டுக்கு 5.6 சதவீதமாக இருந்தது.
பினாகி சக்ரவர்த்தி
இந்த நிலையில் 2021-22 மற்றும் 2022-23 ஆம் ஆண்டுகளில் பதிவான வளர்ச்சி மிகவும் பெரியது மற்றும் முக்கியமானது என தெரிவித்துள்ளார் பினாகி சக்ரவர்த்தி. சுகாதாரம், கல்வி மற்றும் பொருளாதாரம் மற்றும் சமூக இயக்கம் தொடர்பான முன்னேற்றங்கள் மூலம் இந்த வளர்ச்சி பாதிவாகியுள்ளதாக நம்புகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்திய மக்களும், பொருளாதாரமும்
மேலும் கோவிட் தொற்று இந்திய மக்களையும், இந்திய பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்தது. இருப்பினும், கோவிட்க்குப் பிறகு குறிப்பிடத்தக்க பொருளாதார மீட்சியைக் கண்டுள்ளோம். தனிநபர் வருமானத்தில் 5 முதல் 6 சதவீத உயர்வை தொடர்ந்து நிலைநிறுத்த போதுமான திட்டங்களும், வாய்ப்புகளும் உருவாக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார் பினாகி சக்ரவர்த்தி.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications