இந்தியாவை உலகின் முக்கிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடாக மாற்ற வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் காரணத்தால் மத்திய அரசு வெளிநாடுகளில் இருக்கும் நிறுவனங்களை இந்தியாவில் உற்பத்தி தளத்தை அமைக்கப் பல சலுகைகளை அறிவித்து ஈர்த்து வருகிறது.
குறிப்பாகப் பல்வேறு காரணத்தால் சீனாவில் இருந்து சர்வதேச நிறுவனங்கள் தனது உற்பத்தி தளத்தை வேறு நாடுகளுக்கு மாற்றி வருகிறது.
இப்படி வெளியேறும் நிறுவனங்களை இந்தியா ஈர்க்க வேண்டும் என்ற ஒற்றைக் காரணத்துடன் புதிய திட்டத்தை மத்திய அரசு தீட்டியுள்ளது.
புதிய திட்டம்
பொதுவாக வெளிநாட்டு நிறுவனங்கள் ஒரு நாட்டில் வர்த்தகம் அல்லது உற்பத்தியைத் துவங்க வேண்டும் என்றால் அடிப்படையாக எதிர்பார்ப்பது வேகமாகப் பணிகள் நடக்க வேண்டும் என்பது தான், அந்த வகையில் மத்திய அரசு வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் நிறுவனங்களுக்குப் பாஸ்ட் டிராக் பர்மிஷன் அளித்து முதலீட்டாளர்களை வேகமாக முதலீடு செய்ய வைக்க முயற்சி செய்கிறது.
PLI திட்ட வேகம்
இதன் மூலம் இந்தியாவின் உற்பத்தித் துறையைத் தலைகீழாக மாற்றப்போகும் PLI திட்டம் இன்னும் வேகமாக இயங்க முடியும். PLI திட்டத்தின் முதலீடுகள் குறித்துக் கடந்த வாரம் மத்திய அரசின் DPIIT, நித்தி அயோக், நிதியமைச்சகம் இணைந்து முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது, இக்கூட்டத்தில் மார்ச் டார்கெட் அளவான 25000 கோடி ரூபாய் அளவிலான திட்டத்தைப் பெற்றுள்ளதை அறிவித்துள்ளது.
2 வருட பயணம்
PLI திட்டத்தின் 2 வருட பயணத்தில் பல துறைகள் சிறப்பான வளர்ச்சியை அடைந்திருந்தாலும், சில துறைகள் புதிய முதலீடுகளை ஈர்க்க முடியாமல் மந்த நிலையிலேயே உள்ளது.
ஸ்ட்ரீம் லைன்
மந்தமாக இருக்கும் துறைகளில் புதிய நிறுவனங்களை ஈர்த்து ஒப்புதல் அளிப்பதில் இருக்கும் பிரச்சனைகளைத் தீர்ப்பது முதல் தொழிற்சாலை அமைப்பது வரையில் அனைத்து பணிகளையும் ஸ்ட்ரீம் லைன் செய்ய உள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிதியியல் சலுகைகள்
இதேபோல் மத்திய அரசு PLI திட்டத்திற்கு அளிக்கும் நிதியியல் சலுகைகளில் மோசடி செய்ய முடியாத கட்டமைப்பை உருவாக்க உள்ளதாக அறிவித்தார். இதுவரை சாம்பியன் என்று அழைக்கப்படும் 14 துறைகளுக்கு PLI திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ரூ.2.34 லட்சம் கோடி
முதலீட்டாளர்கள் மார்ச் 2022 நிலவரப்படி ரூ.2.34 லட்சம் கோடி அளவிலான பிஎல்ஐ முதலீட்டுக்கு ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ பாகங்கள், மேம்பட்ட வேதியியல் செல் பேட்டரிகள், சிறப்பு எஃகு மற்றும் அதிகத் திறன் கொண்ட சோலார் பேனல்கள் துறையில் உத்தரவாதம் அளித்துள்ளனர்.
சில துறை சரிவு
இதேபோல் மற்ற PLI துறைகளான ட்ரோன்கள், வொயிட் கூட்ஸ், டெக்ஸ்டைல், டெலிகாம் மற்றும் நெட்வொர்க்கிங் தயாரிப்புகள், உணவு பொருட்கள் மற்றும் மருத்துவச் சாதனங்கள் ஆகியவற்றில் குறைவான முதலீடுகளை மட்டுமே ஈர்த்துள்ளது.
64 லட்சம் வேலைவாய்ப்புகள்
இந்த 2.34 லட்சம் கோடி ரூபாய் அளவிலான பிஎல்ஐ முதலீடு அடுத்த ஐந்து ஆண்டுகளில் 64 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 2022 வரையிலான காலகட்டத்தில் தகுதியான விண்ணப்பதாரர்கள் 26,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications