சீனாவுக்கு மீண்டும் ஒரு செக்.. வரிக்கு மேல் வரி.. இந்தியாவின் அதிரடி திட்டம் தான் என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா சீனா இடையேயான வர்த்தக உறவானது நாளுக்கு நாள் சற்று கடினமாகிக் கொண்டே வருகிறது. ஒரு புறம் வரி அதிகரிப்பு, கட்டுப்பாடுகள் அதிகரிப்பு, இப்படி பலவகையிலும் சீனாவுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இந்தியா.

இது இந்தியா சீனா எல்லை பிரச்சனையில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்த நிலையில், தொடர்ச்சியாக ஒவ்வொரு துறையிலும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

ஒரு வகையில் தற்போது இருக்கும் நிலையில் இது இந்தியாவுக்கு பிரச்சனையே என்றாலும், இனி வரும் காலங்களில் ஆவது உள்நாட்டு உற்பத்தியினை அதிகரிக்க இது வழி வகுக்கும்.

வரி நீட்டிப்பு

வரி நீட்டிப்பு

சீனா ஆப்கள் தடை தொடங்கி, ரயில்வே திட்டங்கள், நெடுஞ்சாலை துறையில் தடை என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதற்கிடையில் கலர்டிவி இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடு, சோலார் பேனல்களுக்கு பாதுகாப்பு வரி நீட்டிப்பு என நடவடிக்கை தொடர்ந்து கொண்டே உள்ளது. இந்த நிலையில் வரியினை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சீனாவிலிருந்து அதிகம் இறக்குமதி

சீனாவிலிருந்து அதிகம் இறக்குமதி

இந்தியா சோலார் மற்றும் சோலார் உபகரணங்களில் 80 - 90% இறக்குமதியானது, சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றது. எனினும் கொரோனாவினால் நலிவடைந்து போயுள்ள பொருளாதாரத்தினை ஊக்கப்படுத்தும் விதமாகவும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் விதமாகவும் சோலார் மற்றும் சோலார் உபகரணங்கள் இறக்குமதிக்கு ஆகஸ்ட் முதல் 20% வரை வரி விதித்துள்ளது.

வரி அதிகரிப்பு நீட்டிப்பு

வரி அதிகரிப்பு நீட்டிப்பு

சோலார் உபகரணங்களுக்கான SGD வரி ஜூலை 29ம் தேதியன்று காலாவதியாகிய நிலையில், இதுவே இன்னும் ஒரு வருடத்திற்கு தொடரும் என்றும் அரசு தரப்பில் அறிவித்துள்ளது. முன்னதாக சீனா மற்றும் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறக்குமதிக்கு SGD 25% விதிக்கப்பட்டிருந்தது. இது ஜூலை 2019 முதல், ஜனவரி 2020 வரையில் 20% ஆகவும், இது பின்னர் 15% குறைக்கப்பட்டுள்ளது. ஆக இந்த விகிதமே இன்னும் ஒரு வருடத்திற்கு தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

துறைமுகங்கள் அடையாளம்

துறைமுகங்கள் அடையாளம்

இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் சோலார் மற்றும் சோலார் உபகரணங்களில், 80% சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. அரசு நடத்தும் துறைமுகங்கள் 6 - 7 துறைமுகங்களை அரசு அடையாளம் கண்டுள்ளன. இங்கு சோலார் சம்பந்தமான உற்பத்தியினை அமைக்கும் விதமாக அரசு நடவடிக்கையினை எடுத்து வருகிறது.

செலவினங்கள் குறையும்

செலவினங்கள் குறையும்

இதன் மூலம் லாகிஸ்டிக்ஸ் மற்றும் செலவினங்கள் குறைய இது வழிவகுக்கும். கப்பல் அமைச்சகத்துடன் இந்த திட்டம் குறித்து நாங்கள் விவாதித்தோம். இதனால் துறைமுகங்களுக்கு அருகில் உள்ள இடங்களை அடையாளம் காணுமாறு கேட்டுக் கொண்டோம் என்று மத்திய மின் புதிய மற்றும் புதுபிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஆர்.கே சிங் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

வரி நீட்டிக்கலாம்

வரி நீட்டிக்கலாம்

தற்போது சீனாவுக்கு பாதுகாப்பு வரியினை நீட்டித்து இருக்கும் இந்த நிலையில், தற்போது மேற்கொண்டு அடிப்படை தனிப்பயன் கடமை வரியினை 15 -20% விதிக்கலாம். ஏற்கனவே சீனாவின் இறக்குமதி வரி நீட்டிக்கப்பட்ட நிலையில், basic custom dutyயையும் அதிகரித்துள்ளது. இது இறக்குமதியினை மேற்கொண்டு பாதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

சீனா முக்கிய பங்கு

சீனா முக்கிய பங்கு

இந்தியாவில் அதானி சோலார், விக்ரம் சோலார், வேர் எனர்ஜி மற்றும் டாடா பவர் சோலார் போன்ற நிறுவனங்கள் சீனாவில் இருந்து தான் அதிகம் இறக்குமதி செய்கின்றன. சொல்லப்போனால் இந்த இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையை பொறுத்து தான் இவர்கள் எடுத்திருப்பார்கள். ஆக இவர்கள் பொருளாதார ரீதியாக மாறவும் வாய்ப்பில்லை என்கிறது ஒர் அறிக்கை.

யார் யார் இறக்குமதி?

யார் யார் இறக்குமதி?

இந்தியாவில் அதானி சோலார், விக்ரம் சோலார், வேர் எனர்ஜி மற்றும் டாடா பவர் சோலார் போன்ற நிறுவனங்கள் சீனாவில் இருந்து தான் அதிகம் இறக்குமதி செய்கின்றன. சொல்லப்போனால் இந்த இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையை பொறுத்து தான் இவர்கள் எடுத்திருப்பார்கள். ஆக இவர்கள் பொருளாதார ரீதியாக மாறவும் வாய்ப்பில்லை என்கிறது ஒர் அறிக்கை.

இந்தியாவுக்கு முக்கியத்துவம்

இந்தியாவுக்கு முக்கியத்துவம்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி, இந்திய சீனா பிரச்சனைகளுக்கு முன்பே, கொரோனாவினால் சரிந்து வரும் பொருளாதாரத்தினை மேம்படுத்த, இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த வேண்டும். உலகத்திற்காக இந்தியா பொருட்களை தயாரிக்க வேண்டும் என்றும் கூறினார். இந்த நிலையில் தற்போது அதனை செயல்படுத்தும் விதமாகத் தான் அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருவது நல்ல விஷயம் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India plans to extends BCD for solar imports from china

India – china issue.. India plans to extends duty for solar imports from china
Story first published: Tuesday, August 18, 2020, 10:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X