ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது மத்திய அரசு பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சர்வதேச அமைப்புகள் பாகிஸ்தானுக்கு வழங்கி வரும் நிதி உதவியை நிறுத்தி வைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கடந்த 22ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தியா முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளையும் கோபத்தையும் எழுப்பியுள்ளது. இதனை அடுத்து மத்திய அரசு பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது . ராஜாங்க ரீதியாக பாகிஸ்தான் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி இருக்கிறது .

பாகிஸ்தான் ஏற்கனவே பெருமளவில் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. பாகிஸ்தானுக்கு இந்த நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு பல்வேறு நாடுகளும் பல்வேறு சர்வதேச அமைப்புகளும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த நிலையில் மத்திய அரசு இந்த நிதி உதவிகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை கையில் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பிடிஐ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் மத்திய அரசு சர்வதேச நாணய நிதியம் போன்ற பாகிஸ்தானுக்கு உதவி செய்யும் அமைப்புகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பாகிஸ்தானுக்கு வழங்கும் நிதியை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு 7 பில்லியன் டாலர்களை நிதி உதவியாக வழங்க இருக்கிறது. இதை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வரும் ஒன்பதாம் தேதி நடைபெற இருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் பாகிஸ்தான் நாட்டு அதிகாரிகளை சந்தித்து ஏற்கனவே அவர்கள் வழங்கிய நிதி எதற்காக பயன்படுத்தப்பட்டது அதன் மூலம் அந்த நாட்டின் பொருளாதாரம் மேம்படுத்தப்பட்டிருக்கிறதா என்பது குறித்து எல்லாம் ஆய்வு நடத்துவார்கள். இந்த ஆய்வின் அடிப்படையில் தான் அடுத்த கட்ட நிதியானது வழங்கப்படும் .
எனவே மத்திய அரசு சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு பாகிஸ்தான் இந்த நிதி உதவிகளை எல்லாம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகிறது என்பதை குறிப்பிட்டு பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதியை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி ஆசிய மேம்பாட்டு வங்கி பாகிஸ்தானுக்கு 43.4 பில்லியன் டாலர்கள் கடன் வழங்குவதாக உறுதி அளித்திருந்தது . தற்போது வரை 9.13 மில்லியன் டாலர்களை வழங்கி இருக்கிறது.
அதேபோல கடந்த ஜனவரி மாதம் தான் உலக வங்கி பாகிஸ்தானுக்கு 20 பில்லியன் டாலர்களை கடனாக வழங்க ஒப்புதல் தெரிவித்தது. இந்த நிலையில் தான் இந்த அமைப்புகளிடலாம் பேச்சுவார்த்தை நடத்தி பாகிஸ்தானுக்கு வரக்கூடிய நிதியை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்திருப்பதாக பிடிஐ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது.
More From GoodReturns

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

பாகிஸ்தான் எடுத்த திடீர் முடிவு.. பள்ளி, கல்லூரிகள் மூடல்.. அரசு ஊழியர்களுக்கு Work From Home..!!

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

பாகிஸ்தானில் பெட்ரோல்-டீசல் விலை தடாலடி உயர்வு.. ஆப்கானிஸ்தான் தாக்குதல் மத்தியில் IMF கொடுத்த நெருக்கடி..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!



Click it and Unblock the Notifications