டெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீரென இந்திய பொருட்களுக்கு 50 சதவீத இறக்குமதி வரி விதித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். தற்போது 25% வரி நடைமுறைக்கு வந்திருக்கிறது கூடுதல் 25% வரி இந்த மாத இறுதியில் அமலுக்கு வருகிறது.
இந்திய பொருட்களுக்கு வரி: ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து இந்திய பொருட்களுக்கான வரி என்பது 50% ஆக இருக்கும். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் அதில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை அதேவேளையில் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு தண்டனை கொடுக்கும் வகையில் இந்திய பொருள்களுக்கு 50 சதவீத வரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டார்.

இந்தியாவும் பதில் வரி விதிக்கிறதா: இதனிடையே அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை எதிர்கொள்ள இந்தியாவும் பதிலுக்கு வரி விதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. குறிப்பாக அமெரிக்கா, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் , அலுமினியம் மற்றும் அது சம்பந்தப்பட்ட பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்து இருக்கிறது. இதற்கு போட்டியாக இந்தியாவும் வரிவிதிப்பு நடவடிக்கையில் இறங்க உள்ளதாம்.
ஸ்டீல், அலுமினியம்: அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு மத்திய அரசு புதிய வரியை அறிவிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஆண்டுக்கு 7.6 பில்லியன் மதிப்பிலான ஸ்டீல் மற்றும் அலுமினியம் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. டிரம்பின் 50% வரி விதிப்பு இதற்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

பேச்சுவார்த்தைக்கு வராத அமெரிக்கா: இந்த விவகாரத்தில் மத்திய அரசு உலக வர்த்தக கூட்டமைப்பின் உதவியையும் நாடியது . ஆனால் அமெரிக்க தரப்போ பேச்சுவார்த்தைக்கு கூட முன்வரவில்லையாம். எனவே மத்திய அரசு டிரம்ப் நிர்வாகத்திற்கு போட்டியாக வரிவிதிப்பு நடவடிக்கையை அறிவிக்க தயாராக இருப்பதாக அதிகாரிகள் ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்து இருக்கின்றனர்.
போட்டி வரி தவிர வாய்ப்பில்லை: இந்தியாவின் கவலைகளை பேச்சுவார்த்தை மூலம் சரிபடுத்துவதற்கு அமெரிக்கா தயாராக இல்லை எனவே இந்தியாவிற்கு பதில் வரி விதிப்பதை தவிர வேறு வாய்ப்பு தற்போது இல்லை என அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். ஓர் ஆண்டுக்கு அமெரிக்கா 45 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கிறது, இந்தியா ஓர் ஆண்டுக்கு 86 பில்லியன் மதிப்புள்ள பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது.
இந்த சூழலில் இரு நாடுகளுக்கு இடையான வர்த்தகத்தை 500 பில்லியன் டாலர்களாக உயர்த்துவது தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் எந்த சாதகமான முடிவு எட்டப்படவில்லை. டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கை நிலைமையை இன்னும் மோசமாக்கிவிட்டது.
More From GoodReturns

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications