எங்கும் டிஜிட்டல் எதிலும் டிஜிட்டல் என்பதை நோக்கி இந்தியா பயணித்துக் கொண்டிருக்கிறது. அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும் ஆதார் கார்டு முதல் டிஜிட்டல் கட்டணங்களுக்கு பயன்படுத்தப்படும் யுபிஐ வரை அனைத்தும் டிஜிட்டல் மையமாகிவிட்டது. இந்நிலையில் தற்போது இந்திய அரசு மற்றொரு முக்கியமான நடவடிக்கையை எடுக்க திட்டமிட்டு வருகிறது.
அதாவது ஆதார் கார்டில் இருக்கும் ஒவ்வொரு முகவரிக்கும் ஒரு டிஜிட்டல் ஐடி வழங்கப்பட உள்ளது. இதனால் வீடுகள் மற்றும் இடங்களை மிகவும் துல்லியமாகவும், வேகமாகவும் கண்டறியலாம். குறிப்பாக அரசு சேவைகள் அல்லது அரசாங்க சலுகைகளை மிகவும் துல்லியமாக வழங்க இவை உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முகவரிக்கான டிஜிட்டல் ஐடியின் பயன் என்ன?: இந்தியாவில் ஒவ்வொரு பயனரின் முகவரியையும் டிஜிட்டல் பப்ளிக் இன்பிராஸ்டிரக்சர் மேட்ரிக்ஸ்-இன் கீழ் கொண்டுவர அரசு விரும்புகிறதுவ்வ். தற்போது நாட்டில் முகவரி விவரங்களை நிர்வகிப்பதற்கு எந்தவித அமைப்பும் சரியாக இயங்கவில்லை. இதனால் பல நிறுவனங்கள் பயனர்களின் முகவரி விபரங்களை சேகரித்து கேட்காமலேயே அவற்றை விற்பனை செய்து பணம் ஈட்டுகின்றனர். எனவே மக்களின் முகவரி தகவல்கள் அவர்களின் ஒப்புதலோடு பிறருக்கு பகிரப்படுவதை உறுதி செய்யும் விதமாக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இப்போது ஏன் இந்த நடவடிக்கை?: ஆன்லைன் உணவு விநியோகங்கள், ஆன்லைன் ஷாப்பிங், கொரியர் சேவைகள் போன்றவை தற்போது அதிகரித்து வருகிறது. இ-காமர்ஸ் துறை மிகவும் பிரபலமாக வணிகம் செய்யும் ஒரு துறையாக மாறிவிட்டது. இதனால் சரியான முகவரி விவரங்கள் மிகவும் முக்கியமானதாகிவிட்டன. ஆனால் பல இந்தியர்களின் முகவரிகள் தெளிவற்ற முறையில் வழங்கப்படுகின்றன.
இதற்காக சிலர் அருகில் உள்ள அடையாளங்களை பயன்படுத்துகின்றனர். உதாரணமாக ஒரு குளத்திற்கு அருகில் ஒரு தெரு இருக்கிறது. அதில் ஒரு பயனர் இருக்கிறார் என்றால், அந்த குளத்தை அடையாளமாகக் கூறுகின்றனர். இது குழப்பத்தையும், தாமதத்தையும் ஏற்படுத்துகிறது. இதனால் நாட்டிற்கு ஒவ்வொரு ஆண்டும் 10 பில்லியன் டாலர் முதல் 14 பில்லியன் டாலர் வரை செலவு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த விகிதம் சுமார் 0.5% ஆகும்.
டிஜிட்டல் ஐடியால் என்னென்ன மாற்றம்?: டிஜிட்டல் அட்ரஸ் சிஸ்டம் என்ற ஒரு புதிய கட்டமைப்பை அரசு உருவாக்கி வருகிறது. இதில் முகவரிகளை பாதுகாப்பாக வைக்க பல ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இதனால் பயனர்களின் ஒப்புதலோடு தான் அவர்களுடைய முகவரி விபரங்கள் பிறருக்கு தெரியப்படுத்தப்படும். இந்த டிஜிட்டல் தகவல்கள் மக்களின் முகவரியை பாதுகாப்பான முறையில் அணுக அனுமதிக்கும்.
புதிய முகவரி அமைப்பை அஞ்சல் துறை உருவாக்கி வருகிறது. இந்த ப்ராஜெக்ட் பிரதமர் அலுவலகத்தில் இருக்கும் ஊழியர்கள் உன்னிப்பாக கண்காணித்தும் வருகின்றனர். பொதுமக்களின் பரிந்துரைகளுக்காக விரைவில் டிராஃப்ட் வெர்ஷன் பகிரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த முகவரி அமைப்பு வெளியிடப்படவுள்ளது. இந்த டிஜிட்டல் முகவரி அமைப்பிற்காக ஒரு புதிய சட்டம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த புதிய டிஜிட்டல் அமைப்பின் முக்கிய அம்சம் என்னவென்றால் DIGIPIN. அதாவது டிஜிட்டல் போஸ்டல் இன்டெக்ஸ் நம்பர் என்று சொல்லப்படுகிற டிஜிபின் வழக்கமான குறியீடுகளைப் போலன்றி டிஜிட்டல் வரைபடங்களை பயன்படுத்தி சரியான இருப்பிடத்தை அடையாளம் காண உதவும்.
DIGIPIN வீடு, கடை அல்லது கட்டிடத்தின் துல்லியமான இடத்தை வழங்கும் 10 இலக்க குறியீடாக இருக்கும். வழக்கமான முகவரிகள் சரியாக இல்லாத பட்சத்தில் அதாவது கிராமங்கள், சேரிகள், காடுகள் அல்லது மலைப்பகுதிகள் போன்றவற்றில் இந்த டிஜிபின் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
டிஜிபின் மூலம் தொலைதூரப் பகுதியில் உள்ள வீட்டிற்கு கூட டிஜிட்டல் முகவரியை பயன்படுத்தி எளிதில் போய் சேரலாம். இந்த அமைப்பு நடைமுறைக்கு வந்ததும் அன்றாட வாழ்வில் ஆதார் கார்டு மற்றும் யுபிஐ எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறதோ? அதேபோல முகவரி விவரங்களுக்கான முக்கிய அமைப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications