பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, அணு ஆற்றல் அதாவது நியூக்ளியர் எனர்ஜி துறையில் 49% வரை அந்நிய நேரடி முதலீட்டையும் (FDI), தனியார் துறை நிறுவனங்கள் பங்கு பெற அனுமதிக்கும் திட்டம் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
இந்தியாவில் இதுவரையில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்படாத துறைகளில் மிக முக்கியமானது நியூக்ளியர் எனர்ஜி துறை, இந்த நிலையில் இத்துறையில் எடுத்த எடுப்பிலேயே அன்னிய முதலீட்டுக்கு மொத்தமாக திறந்துவிடாமல் படிப்படியாக 26% உடன் தொடங்கி, மறுஆய்வு செய்யப்பட்டு பின்பு 49% வரையில் உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான முடிவுகளை அடுத்த குளிர்கால கூட்டத்தொடரில் முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

மோடியின் இலக்கு: இந்திய நியூக்ளியர் எனர்ஜி துறையில் தனியார் நிறுவனங்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டு இருக்கும் வேளையில், இதை சட்டத் திருத்தங்களின் மூலம் தனியார் மற்றும் அந்நிய முதலீடுகளுக்கு திறக்கப்பட உள்ளது. இந்த மாற்றங்கள், 2047 ஆம் ஆண்டுக்குள் 100 கிகாவாட் அணு ஆற்றல் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் இலக்கை அடைய உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2 சட்ட திருத்தம்: அணு ஆற்றல் துறையை தனியார் மற்றும் அந்நிய முதலீடுகளுக்கு திறக்க, 1962 ஆம் ஆண்டின் அணு ஆற்றல் சட்டம் மற்றும் அணு பாதிப்பு பொறுப்பு சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் தேவை. இந்தச் சட்டங்கள், தற்போது தனியார் நிறுவனங்களை இந்தத் துறையில் பங்கேற்க முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
நிர்மலா சீதாராமன்: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025-26 ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில் இந்தச் சட்டங்களை திருத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இந்தத் திருத்தங்கள், அணு ஆற்றல் துறையில் தனியார் மற்றும் அந்நிய முதலீடுகளை ஊக்குவிக்கும். இத்துறையில் தனியார் முதலீட்டுக்கு அவசியம் என்ன..? ஏன் 70 வருடங்களாக அனுமதி அளிக்கப்படவில்லை..? தனியார் துறை முதலீட்டுக்கு அனுமதி அளித்தால் யாருக்கு அதிக லாபம்..?
இந்தியாவின் அணு ஆற்றல் பயணம் மற்றும் தோல்விகள்: 1954 ஆம் ஆண்டு, இந்தியாவின் அணு ஆற்றல் திட்டத்தின் தந்தையாகக் கருதப்படும் டாக்டர் ஹோமி பாபா, மூன்று கட்ட அணு ஆற்றல் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டம், இந்தியாவில் உள்ள தோரியத்தைப் பயன்படுத்தி நியூக்ளியர் எனர்ஜி துறையில் சுயசார்பு நிலை அதாவது வெளிநாட்டு இறக்குமதிகளை நம்பாமல் இயங்க வழிவகுக்கும் பிரம்மாண்ட திட்டத்தை முன்வைத்தார். இந்தியாவில் தோரியம் கனிம வளம் கொட்டிக்கிடக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்..?

3 கட்ட திட்டம்: முதல் கட்டமாக, இயற்கை யுரேனியத்தைப் பயன்படுத்தி புளூட்டோனியத்தை உருவாக்குவது, இரண்டாம் கட்டமாக, புளூட்டோனியத்தைப் பயன்படுத்தி யுரேனியம்-233 உருவாக்குவது, மூன்றாம் கட்டமாக, தோரியம் அடிப்படையிலான அணு உலைகளை யுரேனியம்-233 வைத்து இயக்குவது தான் டாக்டர் ஹோமி பாபா கொண்டு வந்த திட்டம்.
தோரியம் கனிம வளம்: உலகளவில் இருக்கும் மொத்த தோரியதில் இந்தியாவில் மட்டும் சுமார் 25 சதவீதம் உள்ளது, கையில் இருக்கும் வெண்ணெயை நெய்யாக்கும் திட்டம் தான் இது. ஆனால், ஹோமி பாபா இத்திட்டத்தை அறிமுகம் செய்து 70 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவில் 18 heavy water reactors மற்றும் 1 fast breeder reactor மட்டுமே உள்ளது. மேலும் தோரியம் கொண்டு இயங்கும் அணு உலைகள் இன்னும் கட்டப்படவில்லை.
ஏன் இந்தியா பின்தங்கியது?: இந்தியாவின் அணு ஆற்றல் திட்டம் பல தடைகளை எதிர்கொண்டது. ஹோமி பாபா மற்றும் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் திடீர் மறைவு, இத்துறையின் வளர்ச்சியை முடக்கியது. இந்தியாவின் நியூக்ளியர் எனர்ஜி துறையின் வளர்ச்சிக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுத்தவர் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி.
சுதந்திரத்திற்கு பிந்தைய காலத்தில் இந்தியாவில் சோசலிசக் கொள்கைகள் ஒங்கி இருந்தது, இதனால் பல துறைகள் அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. இந்த சூழ்நிலையில் ஹோமி பாபா மற்றும் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் திடீர் மறைவு அணு ஆற்றல் துறையில் மந்தநிலை ஏற்பட்டு, இத்துரையில் வளர்ச்சி குறைந்தது.
முக்கிய நெருக்கடி: மேலும், இந்த திட்டத்தில் முதல்கட்டத்தை செயல்படுத்த இயற்கை யுரேனியத்தை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இருந்தது, உலகளாவிய விநியோகஸ்தர்களின் மறுப்பும் இத்துறையில் இந்தியாவின் முன்னேற்றத்தை பாதித்தன. இந்தியாவிடம் தோரியம் இருப்பு அதிமாக இருந்தாலும் முதல் கட்டத்திலேயே மந்தநிலை உருவானதால் இத்துறையின் மொத்த வளர்ச்சியும் முடங்கியது.
யுரேனியம் ரிஸ்க் பாஸ்: இதை தொடர்ந்து அடுத்தடுத்து வந்த அரசுகளும் இயற்கை யுரேனியம் இறக்குமதியில் இருக்கும் பிரச்சனை மற்றும் அணு உலையின் பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இத்துறைக்கு முக்கியதுவம் கொடுப்பதை நிறுத்திவிட்டனர்.
அணு உலையின் அவசியம்: ஆனால் இந்தியா வேகமாக உற்பத்தி துறையிலும், சேவை துறையிலும் வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் மின்சாரம் அதிகளவில் தேவை என்பதால் மத்திய அரசு முக்கிய முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இல்லையெனில் மின்சாரத்தை வெளிநாட்டில் இருந்து வாங்க வேண்டிய கட்டாயம் உருவாகும். இதற்காக தான் சட்டத் திருத்தங்கள் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

2 முக்கிய சட்டத் திருத்தங்கள்: மத்திய அரசின் இரண்டு முக்கிய சட்டத் திருத்தங்கள், அணு ஆற்றல் துறையை மாற்றியமைக்கும். முதலாவதாக, அணு உலையில் விபத்து ஏற்பட்டால், அந்த அணு உலைக்கு உபகரணங்களை கொடுத்த சப்ளையர்கள் தான் பொறுப்பு என்ற கடுமையான விதிமுறையும், கட்டுப்பாட்டும் உள்ளது.
இந்த ஒரு விதிமுறை காரணமாகவே அமெரிக்காவின் GE-Hitachi, Westinghouse மற்றும் பிரான்ஸின் EDF போன்ற உலகளாவிய நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்ய தயங்குகிறது. இதை தளர்த்தும் பட்சத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் கட்டாயம் முதலீடு செய்ய ஆர்வம் காட்டும். இதேபோல் அணு உலையில் விபத்து ஏற்படும் ஆபத்தையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்க வேண்டும். இதன் மூலம் அன்னிய முதலீட்டுக்கு வழிவிடப்படும்.
இரண்டாவதாக, தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுப்பது. இந்திய நிறுவனங்களான அதானி, டாடா மற்றும் L&T ஆகியவை அணு ஆற்றல் உற்பத்தியில் பங்கேற்க முடியும். இதன் மூலம் தனியார் மற்றும் அன்னிய முதலீட்டாளர்கள் கூட்டணி இந்தியாவில் நியூக்ளியர் எனர்ஜி துறையை புதிய வேகத்திற்கு கொண்டு செல்லும்.
மத்திய அரசு 49% வரை அந்நிய முதலீட்டை அனுமதித்தால் இத்துறையில் அரசு நிறுவனமான NPCIL-இன் மோனோபோலி முடிவுக்கு வரும்.
எந்த நிறுவனங்கள் பலன் பெறும்: தனியார் துறையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா பவர், அடானி பவர் மற்றும் வேதாந்தா உள்ளிட்ட இந்திய பெரு நிறுவனங்கள், அணு ஆற்றல் துறையில் 26 பில்லியன் டாலர் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளன.
இதுவே வெளிநாட்டு நிறுவனம் என்றால் வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக், GE-Hitachi, Electricite de France மற்றும் Rosatom போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சேவை வழங்குநர்களாக பலன் பெறும். மேலும் இந்த நிறுவனங்கள் அனைத்தும் இந்திய அணு ஆற்றல் துறையில் பங்கேற்க ஆர்வமாக உள்ளன.
நன்மைகள்: அணு ஆற்றல், கார்பன் உமிழ்வு இல்லாத மின்சார உற்பத்திக்கு முக்கியமானது. இந்தியா விரைவில் நெட் ஜீரோ இலக்கை அடைய ஆர்வம் காட்டி வருகிறது. மேலும் இது காற்று, சூரிய சக்தி, கடல் அலை போன்ற இயற்கை வளங்களை சார்ந்திருக்காது. 2025-26 ஒன்றிய பட்ஜெட், அணு ஆற்றலை இந்தியாவின் எனர்ஜி பயன்பாட்டில் முக்கியமானதாக இகுக்கும் என கூறப்பட்டு உள்ளது.
தற்போது இந்தியாவில் வெறும் 8 ஜிகாவாட் மின்சாரம் மட்டுமே அட்டாமிக் எனர்ஜி மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது இந்திய எனர்ஜி பயன்பாட்டில் வெறும் 3 சதவீத பங்கீட்டை மட்டுமே கொண்டுள்ளதுய
இந்த நிலையில் தனியார் துறை முதலீடுக்கு அனுமதி கொடுக்கப்பட்டால், வேகமான கட்டுமானம் மற்றும் பெரிய அளவிலான முதலீட்டை உறுதி செய்யும். இருப்பினும், தனியார் நிறுவனங்களின் லாப நோக்கம், பாதுகாப்பு விதிகளை மீறுவதற்கு வழிவகுக்கலாம். இதனால் பெரும் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
அபாயங்கள்: உதாரணமாக போபால் விஷவாயு விபத்து இன்றளவு மக்களை நடுங்க வைத்துள்ளது. ஆனால் அணு விபத்துகள் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்துவது மட்டும் அல்லாமல் இதை சரி செய்ய முடியாத பிரச்சனையாக உள்ளது. எனவே மத்திய அரசு 2047 ஆம் ஆண்டுக்குள் 100 கிகாவாட் அணு ஆற்றல் உற்பத்தி என்ற இலக்கை அடையும் பயணத்தில் சரியான மற்றும் கட்டுப்பாடுகள் உடனான சட்டத் திருத்தங்களை கொண்டு வர வேண்டும்.
அதானி குழுமம்: அதானி குழுமம் உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தித் துறைகளில் வலுவான பங்களிப்பைக் கொண்டுள்ளது. அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி பவர் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. பிப்ரவரி 2025-ல் கௌவுதம் அதானி தாராபூர் அணுமின் நிலையத்திற்கு சென்று அணு தொழில்நுட்பம் குறித்து ஆலோசித்தார். அசாமில் அணுசக்தி உள்ளிட்ட திட்டங்களுக்கு முதலீடு செய்ய திட்டமிட்டுள்ள இந்நிறுவனம், சிறிய மாடுலர் அணு உலைகள் (SMRs) மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களில் பங்கேற்கலாம்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ், எண்ணெய், எரிவாயு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைத் தாண்டி அணுசக்தியில் புதிய பயணத்தை தொடங்குகிறது. அசாமில் ரூ.50,000 கோடி முதலீட்டில், அணுசக்தி திட்டங்களும் இடம்பெற்றுள்ளது.
லார்சன் அண்ட் டூப்ரோ (L&T): எல்&டி உள்கட்டமைப்பு மற்றும் கனரக பொறியியல் துறையில் முன்னணியில் உள்ளது. மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் இந்நிறுவனத்தின் நிபுணத்துவம், அணு உலைகள் கட்டமைப்பதற்கு ஏற்றதாக உள்ளது.
L&T அணு உலைகளைக் கட்டுவதிலும், அணு உலைகளுக்கான முக்கிய பாகங்களை வழங்குவதிலும், பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் (EPC) ஒப்பந்தங்களை நிர்வகிப்பதிலும் ஒரு முக்கிய ஒப்பந்ததாரராகச் செயல்பட முடியும்.
மற்ற நிறுவனங்கள்: டாடா பவர், வேதாந்தா உள்ளிட்டவையும் அணுசக்தி திட்டங்களில் ஆர்வம் காட்டுகின்றன. இந்நிறுவனங்கள் NPCIL-உடன் இணைந்து உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை பயன்படுத்தலாம்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications