தபால் துறை ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 60 நாள் போனஸ் அறிவிப்பு! யாருக்கு எவ்வளவு தெரியுமா?

இந்தியத் தபால் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. ப்ரொடக்ட்டிவிட்டி லிங்க்டு போனஸ் என்று சொல்லப்படுகிற உற்பத்தி திறன் சார்ந்த போனஸ் தொகையை அறிவித்துள்ளது. இதற்கு தகுதி பெறும் ஊழியர்களுக்கு சுமார் 60 நாட்களுக்கான சம்பளம் போனஸாக வழங்கப்படவுள்ளது. இந்திய தபால் துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

துறை சார் ஊழியர்கள் மட்டுமின்றி இந்த முறை கிராம தக் சேவாக் மற்றும் தற்காலிக பணியாளர்களுக்கும் போனஸ் கிடைக்கவுள்ளது. கிராம தக் சேவாக் பணியாளர்களுக்கு எக்ஸ்-கிரேஷியா (ex-gratia) போனஸும், தற்காலிக பணியாளர்களுக்கு அட்-ஹாக் (ad-hoc) போனஸும் வழங்கப்பட இருக்கிறது. இவர்களுக்கு 2026-ஆம் நிதியாண்டில் 60 நாட்களுக்கு இணையான சம்பளத்தை போனஸாக வழங்க குடியரசுத் தலைவர் அனுமதி அளித்துள்ளார்.

தபால் துறை ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 60 நாள் போனஸ் அறிவிப்பு! யாருக்கு எவ்வளவு தெரியுமா?

பணியாளர்களுக்கு போனஸ் கணக்கீடு எப்படி இருக்கும்?: போனஸ் கணக்கீட்டைப் பொறுத்தவரையில் ஊழியர்களின் ஊதிய உச்சவரம்பு, அவர்கள் பணிபுரிந்த நாட்களின் எண்ணிக்கை, பணியாளர் என்ன வகையைச் சேர்ந்தவர் என்பதை எல்லாம் பொறுத்து இருக்கும்.

யாருக்கெல்லாம் போனஸ் கிடைக்கும்?: தபால் துறையின் உத்தரவின்படி பின்வரும் மூன்று பிரிவை சேர்ந்த ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படவுள்ளது. நிரந்தர துறைசார் பணியாளர்கள், மல்டி-டாஸ்கிங் ஸ்டாஃப் (MTS), குரூப் சி பணியாளர்கள், கெஜட் அல்லாத குரூப் பி பணியாளர்கள், கிராமின் தக் சேவாக் பணியாளர்கள், முழு நேர, தற்காலிக பணியாளர்கள் போன்றோருக்கு போனஸ் வழங்கப்படவுள்ளது.

தபால் துறை ஊழியர்களுக்கு எப்படி போனஸ் கணக்கிடப்படுகிறது?: இதை தெரிந்து கொள்ள ஒரு ஃபார்முலா பயன்படுத்தப்படுகிறது.

போனஸ் = (சராசரி ஊதியம் X போனஸ் நாட்களின் எண்ணிக்கை) / 30.4.

30.4 என்பது ஒரு மாதத்தின் சராசரி நாட்களைக் குறிக்கிறது. 2025-26 நிதியாண்டில் எந்த மாதத்திலாவது ஊதியம் ரூ.7,000-க்கு மேல் இருந்தால், கணக்கீட்டிற்காக மாத ஊதியம் ரூ.7,000-ஆக மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும்.

ரூ.7000 சம்பளம் பெறும் ஒரு ஊழியருக்கு 60 நாட்களுக்கான போனஸ் வழங்கப்பட்டால் அவருக்கு,

போனஸ் = (ரூ.7,000 × 60) ÷ 30.4 = ரூ.13,816 கூடுதலாக கிடைக்கும்.

கிராமின் தக் சேவக் ஊழியர்களுக்கு போனஸ் எப்படி கணக்கிடப்படுகிறது?:இவர்களுக்கான போனஸ் தொகை ஒரு ஃபார்முலாவைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது.

எக்ஸ்-கிரேஷியா போனஸ் = (சராசரி மாதாந்திர TRCA × போனஸ் நாட்களின் எண்ணிக்கை) / 30.4

TRCA என்பது ஊழியர்களுக்கு வழங்கப்படும் பேசிக் பே-வை குறிக்கிறது. அதாவது அரசு ஊழியர்களுக்கு எப்படி அடிப்படை சம்பளம் வழங்கப்படுகிறதோ அதேபோல பகுதி நேர அடிப்படையில் பணி புரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை சம்பளம் தான் TRCA.

ஏப்ரல் 1, 2025 முதல் மார்ச் 31, 2026 வரை முழுமையாகப் பணியாற்றிய ஊழியர்களுக்கு, அந்த ஆண்டில் அவர்கள் வாங்கிய TRCA மற்றும் அகவிலைப்படியைக் கூட்டி 12-ஆல் வகுத்து சராசரி TRCA கணக்கிடப்படும். கணக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படும் TRCA ரூ. 7,000-க்கு மேல் இருந்தால், அதை ரூ. 7,000 ஆக மட்டுமே எடுத்துக்கொள்வார்கள்.

தற்காலிக தொழிலாளர்களுக்கு எப்படி போனஸ் கணக்கிடப்படும்?: முழு நேர தற்காலிக தொழிலாளர்களுக்கு அட் ஹாக் போனஸ் வழங்கப்படவுள்ளது. அதற்கு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணியாற்றிருக்க வேண்டும். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் என்ற வீதத்தில் பணிபுரிந்திருக்க வேண்டும். அதேபோல ஆண்டுக்கு 240 நாட்கள் பணியாற்றி இருக்க வேண்டும். இவர்களுக்கு மாதம் ரூ.1200 மாத ஊதியத்தின் அடிப்படையில் போனஸ் கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+