போஸ்ட் ஆபீஸில் சேவிங்ஸ் அக்கவுண்ட் இருக்கா? செப்டம்பர் 1 தான் டெட்லைன்! அதுக்குள்ள இத செஞ்சிடுங்க!

தபால் அலுவலகங்களில் சேவிங்ஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இனி வாடிக்கையாளர்கள் தங்களுடைய மொபைல் நம்பரை அக்கவுண்டுடன் கட்டாயம் இணைத்திருக்க வேண்டும். அவ்வாறு இணைக்கவில்லை என்றால் போஸ்ட் ஆபீஸ் மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதில் சிக்கல் ஏற்படும். நகரங்களை விட கிராமப்புறங்களில் அதிகளவில் மக்கள் போஸ்ட் ஆபீஸ் வங்கி சேவைகளையே பெற்று வருகின்றனர். இவர்களுக்கு பாதுகாப்பான டிஜிட்டல் சேவைகளை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக அஞ்சல் துறை, கிராமப்புற வங்கி செயல்பாடுகளை சரி செய்யும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. இந்த விதிமுறைக்கு இணங்காத வாடிக்கையாளர்கள் ட்ரீம் ஆப் மூலமாக அல்லது ஆதார் அத்தன்டிகேஷன் மூலமாக டெபாசிட் செய்தாலோ அல்லது பணம் எடுத்தாலோ அவர்களுடைய சேவைகள் பிளாக் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் தங்கு தடையின்றி தொடர்ந்து பரிவர்த்தனை செய்வதற்கும், அவ்வப்போது பரிவர்த்தனை தொடர்பான நோட்டிபிகேஷனை SMS மூலமாக பெறுவதற்கும் கண்டிப்பாக தங்களுடைய மொபைல் நம்பரை இணைக்க வேண்டியது கட்டாயம். கிராமப்புறங்களில் இன்றளவும் அஞ்சலகங்களே முதன்மை வங்கியாக செயல்பட்டு வருகிறது.

புதிய வசதி அறிமுகம்: நீங்கள் இனி எந்த போஸ்ட் ஆபீஸ் கிளையின் மூலமாக வேண்டுமானாலும் சேவை பெற முடியும். முன்னர் நீங்கள் எங்கு கணக்கு தொடங்கி இருந்தீர்களோ அந்த கிளைக்கு சென்று மட்டும் தான் பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது. ஆனால் இனி அப்படி இல்லை. ஆதார் அடிப்படையிலான ஈ-கேஒய்சி மற்றும் மொபைல் நம்பர் இணைப்பு ஆகியவற்றை செய்துவிட்டால் ஆதாரை பயன்படுத்தியே இந்தியாவில் உள்ள எந்த ஒரு கிளை அஞ்சலகத்தில் வேண்டுமானாலும் சேவையைப் பெற முடியும். சொந்த ஊரை விட்டு புலம்பெயர்ந்த குடும்பங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் அரசு உதவி பெறும் நபர்களுக்கும் இந்த வசதி நிச்சயம் பயனுள்ளதாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

போஸ்ட் ஆபீஸில் சேவிங்ஸ் அக்கவுண்ட் இருக்கா? செப்டம்பர் 1 தான் டெட்லைன்! அதுக்குள்ள இத செஞ்சிடுங்க!

தொடர்ந்து போஸ்ட் ஆபீஸ்களில் இ-கேஒய்சி சரி பார்ப்பை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் இதுவரையில் காகிதப் பயன்பாடு அதிகமாக இருந்து வந்தது. வாடிக்கையாளர்கள் தங்களுடைய சேமிப்பு கணக்கு, ரெக்கர்ரிங் டெபாசிட் என்று சொல்லப்படுகிற தொடர் வைப்பு நிதி, செல்வமகள் சேமிப்பு திட்டம் போன்றவற்றுக்கு பணம் செலுத்துவதற்கு காகித படிவங்கள் பயன்பட்டன. ஆனால் இனி பயோமெட்ரிக் அடிப்படையில் ரூ.50,000 வரை டெபாசிட் செய்ய முடியும். அதேபோல சேமிப்பு கணக்கிலிருந்து பணத்தை எடுக்க வேண்டுமானாலும் அதற்கு வித்ட்ராவல் ஸ்லிப் தேவையில்லை.

வித்ட்ராவல் ஸ்லீப் இல்லாமல் ரூ. 20,000 வரை பணம் எடுக்கும் வசதியும் வரவுள்ளது. இந்த புதிய வசதி ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டு கணக்கு மற்றும் மைனர் கணக்குகளுக்கு இந்த வசதி இப்போதைக்கு கிடைக்காது. ஆனால் தனி நபர்கள் இந்த புதிய வசதியை பயன்படுத்தலாம். மேலும் உங்களுடைய ஆதார் விவரங்களின் அடிப்படையில் தான் இ-கேஒய்சி செயல்முறை செய்யப்படுகிறது. எனவே போஸ்ட் ஆபீஸ் கணக்கில் உங்கள் பெயரையோ, பிறந்த தேதியையோ உங்களால் மாற்றியமைக்க முடியாது.

ஒருவேளை ஆதாரில் ஒரு விபரங்களும் போஸ்ட் ஆபீஸ் அக்கவுண்டில் ஒரு விபரமும் இருந்தால் பழைய முறை அதாவது காகித முறைகளையே பயன்படுத்தி நீங்கள் டெபாசிட் செய்ய வேண்டி இருக்கும். செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்து சேவைகளையும் டிஜிட்டல் வடிவில் பெறுவதற்கு பயனர்கள் தங்களுடைய ஆதார் விபரங்கள் சரியாக இருக்கிறதா? என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+