காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும் என்று சொல்வது எந்த அளவிற்குச் சரி என்பதை இதைப் பார்த்தால் தெரிகிறது. மத்திய அரசு சமீபத்தில் நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்குப் போதுமான நிதி திரட்டும் வகையில் அரசு நிர்வாகத்திற்குச் சுமையாக இருக்கும், ஆபத்தில் இருக்கும், கடன் சுமையில் இருக்கும், அதிக நஷ்டம் அடைந்து வரும் நிறுவனங்களையும், அதன் பங்குகளையும் விற்பனை செய்து தனியார்மயமாக்கி வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் ஒரு அரசுத் துறை காலத்திற்கு ஏற்ப தனது வர்த்தகத்தை மாற்றிய காரணத்தால் 3 வருடத்தில் சுமார் 9500 கோடி ரூபாயை சம்பாதித்துள்ளது.
இந்தியத் தபால் துறை இணையம், டெலிகாம் சேவைகள் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த நிலையில் கடிதம் பரிமாற்றத்திற்கு அவசியம் இல்லா நிலை உருவானது. இதை உணர்ந்த தபால் துறை கடந்த சில வருடங்களாகப் பல புதிய வர்த்தகங்களை அறிமுகம் செய்துள்ளது.
இந்திய தபால் துறை
இந்தியத் தபால் துறை தனது ஆஸ்தான சேவைகளில் இருந்து மாறி ஈகாமர்ஸ், பேமெண்ட்ஸ் வங்கி மற்றும் இதர சேவைகளை அளிக்கத் துவங்கியது. இதன் மூலம் இந்தியத் தபால் துறை தொடர்ந்து வர்த்தகத்தை மட்டும் அல்லாமல் அதிகளவிலான வருமானத்தைப் பெற்று அசத்தி வருகிறது.
9,530.9 கோடி ரூபாய்
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் தொலைத்தொடர்பு அமைச்சகம் கொடுத்த பதிலில் இந்தியத் தபால் துறை தனது ஆஸ்தான சேவைகள் அல்லாமல் ஈகாமர்ஸ், பேமெண்ட்ஸ் வங்கி மற்றும் இதர சேவைகள் வாயிலாகக் கடந்த 3 வருடத்தில் அதாவது 2018 நிதியாண்டு முதல் 2020 நிதியாண்டுகளில் சுமார் 9,530.9 கோடி ரூபாயை சம்பாதித்துள்ளது எனத் தெரிவித்துள்ளது
3 வருடத்தில் அசத்தல்
இதன் மூலம் 2018ஆம் நிதியாண்டில் 3,415.35 கோடி ரூபாயும், 2019ஆம் நிதியாண்டில் 3051.55 கோடி ரூபாயும், 2020ஆம் நிதியாண்டில் 3,064 கோடி ரூபாயும், ஜனவரி 21 வரையில் 2021ஆம் நிதியாண்டில் 1,565.71 கோடி ரூபாயும் சம்பாதித்துள்ளது.
ஸ்பீட் போஸ்ட் சேவை
மேலும் தபால் துறை சுமார் 54 முதல் 63 சதவீதம் வரையிலான வருமானத்தை ஸ்பீட் போஸ்ட் வாயிலாகப் பெற்று வருகிறது. இதேவேளையில் இப்பிரிவு வர்த்தகம் குறைந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
தபால் துறை சேவைகள்
இந்திய தபால் துறை ஈகாமர்ஸ், வாழ்த்து தபால், நேஷனல் பில் மெயில், பிளாட் ரேட் பார்சல், ஒவர் நைட் பார்சல், e-VPP, இண்டர்நேஷனல் ஸ்பீட் போஸ்ட், ரீடைல் வர்த்தகப் பிரிவில் விண்ணப்பங்கள் விற்பனை, பிரிட்சை அல்லது தேர்வு கட்டணம், கேபிள் டிவி பதிவு கட்டணம், ஏடிஎம் கட்டணம், சிஎஸ்சி, கோல்டு பாண்ட் ஆகிய சேவைகள் மூலம் வருமானத்தைப் பெற்று வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications